- Home
- Astrology
- Dwidwadash Yog 2026: சூரியன் - குருவால் உருவாகும் துவித்வாதச யோகம் - இந்த 5 ராசிகளுக்கு ஜாக்பாட்! கொட்டப்போகும் பண மழை.!
Dwidwadash Yog 2026: சூரியன் - குருவால் உருவாகும் துவித்வாதச யோகம் - இந்த 5 ராசிகளுக்கு ஜாக்பாட்! கொட்டப்போகும் பண மழை.!
Dwidwadash Yog 2026: ஜூன் 29, 2026, மதியம் 1:34 மணி முதல், சூரியனும் குருவும் 30 டிகிரி கோணத்தில் இணைகிறார்கள். இந்த இரு கிரகங்களின் சேர்க்கையால் துவித்வாதச யோகம் உருவாகிறது. இதனால் பலன்பெறும் 5 ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

Dwidwadash Yog 2026
ஜோதிட சாஸ்திரத்தின் படி ஆனி மாதத்தின் பௌர்ணமி ஜூன் 29, 2026 அன்று வருகிறது. மேலும் இந்த நாளில் பௌர்ணமி திதியுடன், துவித்வாதச யோகங்கள் போன்ற சுப யோகங்கள் இணைவதால் சில ராசிக்காரர்களுக்கு மிக சுப பலன்கள் கிடைக்க உள்ளது. குறிப்பாக ரிஷபம், சிம்மம், துலாம் உள்ளிட்ட ஐந்து ராசிகளுக்கு அதிகப்படியான நன்மைகள் கிடைக்கும். அது குறித்து இங்கு காணலாம்.
இதையும் படியுங்கள்: Mercury Transit: கடக ராசியில் புதன் பெயர்ச்சி: ஜூன் 22 முதல் இந்த 6 ராசிக்கு ஜாக்பாட்!
மேஷம்
துவித்வாதச யோகத்தால் மேஷ ராசிக்காரர்கள் தங்கள் வேலையில் வெற்றியைப் பெறுவார்கள். தொழில் முன்னேற்றம் நல்ல பணவரவைக் கொண்டுவரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இது ஒரு நல்ல நேரம். அதிர்ஷ்டம் அவர்கள் பக்கம் இருக்கும்.
இதையும் படியுங்கள்: அடுத்த ஜென்மத்தில் என்னவாக பிறப்பீர்கள்? பிறந்த தேதியை வைத்தே கண்டுபிடிக்கலாம் வாங்க.!
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு தொழில் வாழ்க்கையில் முன்னேற நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வெற்றி உங்கள் கண்முன்னே தெரியும். இவர்களின் நிதிநிலை வலுப்பெறும், சமூகத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் நிதி ஆதாயங்களுக்கு சாதகமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் லாபம் அடைவார்கள். வேலையில் உங்கள் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்க வாய்ப்புள்ளது. தொழில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உருவாகும்.
சிம்மம்
சூரியன் மற்றும் குருவின் இந்த சேர்க்கையால் உருவாகும் துவித்வாதச யோகத்தால் சிம்ம ராசிக்காரர்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் வேலையில் பதவி உயர்வு பெறலாம். அரசியல் மற்றும் நிர்வாகத் துறையில் இருப்பவர்கள் நல்ல லாபம் அடைவார்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் துவித்வாதச யோகத்தால் மிகுந்த நன்மை அடைவார்கள். இது உங்களுக்கு ஒரு நல்ல நேரமாக அமையும். நீங்கள் வேலை மாறலாம் அல்லது வேலையில் புதிய பொறுப்புகளைப் பெறலாம்.

