MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • zodiac domineering husband : மனைவியை பாடாய் படுத்தும் கணவன் ராசிகள்!

zodiac domineering husband : மனைவியை பாடாய் படுத்தும் கணவன் ராசிகள்!

திருமணம் இருமனம் இணையும் பந்தம். ஆனால் சில கணவர்களின் அதிகப்படியான கோபம் அலட்சியம் மற்றும் கடுமையான வார்த்தைகள் மனைவியின் மன அமைதியைப் பாதிக்கும். மனைவியின் உரிமைகளுக்கு மதிப்பளிக்காமல் குடும்பத்தில் சோதனைகளை ஏற்படுத்தும் கணவன் ராசிகள் யார் தெரியுமா?

2 Min read
Author : Priya Velan
Published : Jul 31 2026, 06:37 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
மனைவியை பாடாய்படுத்தும் கணவன் ராசிகள் :
Image Credit : Asianet News

மனைவியை பாடாய்படுத்தும் கணவன் ராசிகள் :

இல்வாழ்க்கை என்பது இரு வேறு குணாதிசயங்கள் கொண்ட நபர்கள் இணைந்து பயணிக்கும் ஒரு அழகான பயணம். ஆனால், சில குடும்பங்களில் கணவனின் சில குறிப்பிட்ட பழக்கவழக்கங்கள் மனைவிக்கு பெரும் மன அழுத்தத்தையும், சிரமத்தையும் தந்துவிடும். ஜோதிட சாஸ்திரப்படி, ஒரு நபரின் பிறந்த ராசி மற்றும் ஆளும் கிரகங்களின் தன்மையைப் பொறுத்தே அவர்களின் குணநலன்கள் அமைகின்றன. அந்த வகையில், தங்களின் ஆதிக்க மனப்பான்மை, பிடிவாதம், சந்தேகம் அல்லது எதிலும் குறை காணும் தன்மையால் மனைவியை சிரமத்திற்கு உள்ளாக்கும் கணவன்மார்களின் ராசிகள் குறித்து வாங்க தெரிந்து கொள்ளலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
மேஷம் :
Image Credit : Getty

மேஷம் :

செவ்வாய் பகவானை அதிபதியாகக் கொண்ட மேஷ ராசி கணவர்கள், இயற்கையிலேயே கோபக்காரர்களாகவும் அவசரப் புத்தி உள்ளவர்களாகவும் இருப்பார்கள். தங்களின் சொல்லே வேதமாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் இவர்கள், மனைவியின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் தராமல் தன்னிச்சையாக முடிவெடுத்துக் குடும்பத்தில் புயலைக் கிளப்புவார்கள்.

Related Articles

Related image1
husband zodiac signs : மனைவியை உயிராய் நேசிக்கும் கணவன் ராசிகள் எது தெரியுமா?
Related image2
zodiac signs : கண்டதும் காதலில் விழ அதிகம் வாய்ப்புள்ள 5 ராசிகள்
37
ரிஷபம் :
Image Credit : Getty

ரிஷபம் :

சுக்கிரனின் ஆதிக்கம் பெற்றிருந்தாலும், ரிஷப ராசி கணவர்களிடம் பிடிவாத குணம் சற்று அதிகமாகவே இருக்கும். தாங்கள் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்பதில் உறுதியாக இருக்கும் இவர்கள், மாற்றங்களை விரும்ப மாட்டார்கள். தங்களின் நெகிழ்வுத்தன்மையற்ற (Inflexible) போக்கால் மனைவியை அடிக்கடி சோதிப்பார்கள்.

47
சிம்மம் :
Image Credit : Getty

சிம்மம் :

சூரியனின் ஆதிக்கம் கொண்ட சிம்ம ராசி கணவர்கள், வீட்டின் அதிகார மையமாகத் திகழ விரும்புவார்கள். எப்போதும் தங்களை மற்றவர்கள் பாராட்டிப் பேச வேண்டும் என்ற எதிர்பார்ப்பும், தங்களின் விருப்பப்படியே அனைத்தும் நடக்க வேண்டும் என்ற ஆதிக்க மனப்பான்மையும் மனைவிகளுக்குப் பெரும் சவாலாக அமையும்.

57
கன்னி :
Image Credit : Getty

கன்னி :

புதனின் ஆதிக்கம் பெற்ற கன்னி ராசி கணவர்கள், எதிலும் கச்சிதத்தை (Perfection) எதிர்பார்ப்பார்கள். சமையல் முதல் வீட்டைப் பராமரிப்பது வரை சிறு சிறு விஷயங்களில் கூடக் குறைகளைக் கண்டுபிடித்து சுட்டிக்காட்டிக் கொண்டே இருப்பது மனைவியின் மன அமைதியைக் குலைக்கும் செயலாக மாறிவிடும்.

67
விருச்சிகம் :
Image Credit : Getty

விருச்சிகம் :

விருச்சிக ராசி கணவர்கள் தீவிரமான அன்பைக் கொண்டிருந்தாலும், அதிகப்படியான சந்தேக உணர்வும், ரகசியத் தன்மையும் கொண்டவர்கள். மனைவியின் ஒவ்வொரு நகர்வையும் கண்காணிப்பது மற்றும் தங்களின் உணர்ச்சிகளை வெளிப்படையாகப் பேசாமல் மௌனமாகவே தண்டனை கொடுப்பது மனைவியை மனதளவில் காயப்படுத்தும்.

77
மகரம் :
Image Credit : Getty

மகரம் :

சனி பகவானை அதிபதியாகக் கொண்ட மகர ராசி கணவர்கள், எப்போதும் வேலை மற்றும் பொருளாதாரம் சார்ந்த சிந்தனையிலேயே மூழ்கியிருப்பார்கள். குடும்பத்திற்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுத்தாலும், உணர்வுரீதியான அன்பையும் நேரத்தையும் மனைவிக்கு வழங்கத் தவறுவதால் மனைவிகள் தனிமை உணர்வுக்கு ஆளாவார்கள்.

About the Author

PV
Priya Velan
இவர் இணைய பத்திரிக்கை துறையில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். லைஃப் ஸ்டைல் கட்டுரைகள் மட்டுமின்றி சினிமா, அரசியல் ஆகிய செய்திகள் எழுதுவதிலும் திறன் படைத்தவர்.
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
Latest Videos
Recommended Stories
Recommended image1
zodiac signs : முதல் காதலில் தோல்வி... இரண்டாவது காதலில் வெற்றி பெறும் 6 ராசிக்காரர்கள்!
Recommended image2
Venus Ketu Raja Yogam: சுக்கிரன் - கேது சேர்க்கையால் ராஜயோகம்! இந்த 6 ராசிக்காரர்களுக்கு குபேர யோகம்
Recommended image3
Ketu Transit: திடீர் பண வரவு.. தொட்டதெல்லாம் துலங்கும்.. கேதுவின் கிருபையால் 4 ராசிகளுக்கு ஜாக்பாட்!
Related Stories
Recommended image1
husband zodiac signs : மனைவியை உயிராய் நேசிக்கும் கணவன் ராசிகள் எது தெரியுமா?
Recommended image2
zodiac signs : கண்டதும் காதலில் விழ அதிகம் வாய்ப்புள்ள 5 ராசிகள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved