- Home
- Astrology
- Oct 30 Today Rasi Palan: தனுசு ராசி நேயர்களே, முன்பு தடைபட்டு நின்ற காரியங்கள் அனைத்தும் இன்று நிறைவேறும்.!
Oct 30 Today Rasi Palan: தனுசு ராசி நேயர்களே, முன்பு தடைபட்டு நின்ற காரியங்கள் அனைத்தும் இன்று நிறைவேறும்.!
Today Rasi Palan : அக்டோபர் 30, 2025 தேதி தனுசு ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

அக்டோபர் 30, 2025 தனுசு ராசிக்கான பலன்கள்:
தனுசு ராசி நேயர்களே, இன்றைய நாள் உங்களுக்கு நம்பிக்கை தரக்கூடிய நாளாகவும், சிறப்பான நாளாகவும் அமையும். கடினமான உழைப்பும், நேர்மறை சிந்தனைகளும் நல்ல பலன்களை அளிக்கும். போட்டிகள் இருந்தாலும் தானாகவே விலகும். மறைமுக எதிரிகள் கூட நண்பர்களாக மாறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. நீண்ட நாளாக காத்திருந்த வேலை வாய்ப்புகள் கிடைக்கும். போட்டிகளில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.
நிதி நிலைமை:
நிதி நிலைமையை பொறுத்தவரை இன்று வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கக்கூடும். பல வழிகளில் சிக்கி உள்ள பணம் திரும்பக் கிடைக்க வாய்ப்பு உள்ளது. முதலீடுகளில் இருந்து நல்ல பலன்களைப. பெறுவீர்கள். பங்குச்சந்தை அல்லது பிறமூலங்கள் மூலம் நிதி நிலைமை மேம்படும். பரம்பரை அல்லது பூர்வீக சொத்துக்கள் மூலம் ஆதாயம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.
தனிப்பட்ட வாழ்க்கை:
உறவினர்களிடையே இருந்த சச்சரவுகள் நீங்கி நல்லுறவு மேம்படும். குடும்பத்துடன் சமூக நிகழ்ச்சிகள் அல்லது சுற்றுலா செல்வது மகிழ்ச்சியை ஏற்படுத்தும். குழந்தையின் திருமணம் அல்லது தொழில் தொடர்பாக நல்ல செய்திகள் வந்து சேரும். பழைய நண்பர்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும். இதன் மூலம் மன மகிழ்ச்சி அதிகரிக்கும்.
பரிகாரங்கள்:
இன்று விஷ்ணு நாராயணரை வணங்குவது சிறப்பு. ஆஞ்சநேயரை வணங்குவது நன்மை தரும். குரு பகவானுக்கு கொண்டைக்கடலை மாலை சாற்றி, மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றி வழிபடுவது நன்மை தரும். ஆலயம் சென்று நெய் தீபம் ஏற்று வழிபடுவது மன அமைதியைத் தரும். ஏழை மாணவர்களின் கல்விக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்.
முக்கிய குறிப்பு:
இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.