- Home
- Astrology
- Dhanusu Rasi Palan Nov 29: தனுசு ராசி நேயர்களே, இன்று பூர்வீக சொத்துக்களில் இருந்த தடைகள் விலகும்.!
Dhanusu Rasi Palan Nov 29: தனுசு ராசி நேயர்களே, இன்று பூர்வீக சொத்துக்களில் இருந்த தடைகள் விலகும்.!
Nov 29 Dhanusu Rasi Palan : நவம்பர் 29, 2025 தேதி தனுசு ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

நவம்பர் 29, 2025 தனுசு ராசிக்கான பலன்கள்:
தனுசு ராசி நேயர்களே, இன்று கலவையான பலன்களைத் தரக்கூடிய நாளாக இருக்கும். வீண் அலைச்சல் மற்றும் தேவையற்ற பயணங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. துணிச்சலான முடிவுகளை எடுப்பீர்கள். கடின உழைப்புக்கு ஏற்ற பலன்களைப் பெறுவீர்கள். உங்களை நீங்களே சுய பரிசோதனை செய்து கொள்ளும் நிலை ஏற்படலாம்.
நிதி நிலைமை:
நிதி தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு இன்றைய நாள் சாதகமாக இருக்கும். மாத இறுதியில் நிதி சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். கைக்கு வந்து சேர வேண்டிய பணம் தாமதமாக கைக்கு வந்து சேரலாம்.
தனிப்பட்ட வாழ்க்கை:
காதல் உறவுகளில் யாராவது தடைகளை உருவாக்க முயற்சிக்கலாம். எனவே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வாழ்க்கைத் துணையின் உணர்வுகளை புறக்கணிப்பதை தவிர்த்து அனுசரித்து செல்ல வேண்டியது அவசியம். குடும்பத்தில் சிறு சிறு சங்கடங்கள் ஏற்படலாம் என்பதால் நிதானமாக பேசுவது அவசியம். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் விலகும்.
பரிகாரங்கள்:
இன்று முருகப்பெருமானை மனமுருகி பிரார்த்திப்பது நன்மை தரும். நரசிம்மரை வணங்குவது தைரியத்தையும், ஆற்றலையும் வழங்கும். வாயில்லா ஜீவன்களுக்கு உணவளிப்பது, தான, தர்மங்கள் செய்வது ஆன்மீகப் பணிகளில் ஈடுபடுவது ஆகியவை மனதிற்கு அமைதியைத் தரும்.
முக்கிய குறிப்பு:
இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.

