- Home
- Astrology
- Dhanusu Rasi Palan Nov 15 : தனுசு ராசி நேயர்களே, குருவின் வக்ர நிலையால் இந்த விஷயங்களில் கவனம் தேவை.!
Dhanusu Rasi Palan Nov 15 : தனுசு ராசி நேயர்களே, குருவின் வக்ர நிலையால் இந்த விஷயங்களில் கவனம் தேவை.!
Nov 15 Dhanusu Rasi Palan : நவம்பர் 15, 2025 தேதி தனுசு ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

நவம்பர் 15, 2025 தனுசு ராசிக்கான பலன்கள்:
தனுசு ராசி நேயர்களே, இன்றைய நாள் உங்களைப் பற்றியும், உங்கள் இலக்குகள் குறித்து ஆழமாக சிந்திக்கும் மனநிலை எழும். சவால்களை எதிர்கொள்ள தேவையான தைரியமும், தன்னம்பிக்கையும் உண்டாகும். தவிர்க்க முடியாத அலைச்சல்கள் அல்லது பயணங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பயணங்களின் போது கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.
நிதி நிலைமை:
பணத்தை செலவு செய்யும் முறைகளில் மாற்றங்களை கொண்டு வர வேண்டியது அவசியம். இல்லையெனில் சிக்கல்கள் ஏற்படலாம். அஷ்டம குருவின் தாக்கத்தால் பழைய கடன்கள், முதலீடுகள் அல்லது நிதி விவகாரங்கள் குறித்து கவனம் தேவை. சொத்து தொடர்பான முதலீடுகளில் அவசரம் வேண்டாம். திட்டமிடலுடன் செயல்படுவது நல்லது.
தனிப்பட்ட வாழ்க்கை:
குடும்ப உறுப்பினர்களின் தேவைக்கு முன்னுரிமை கொடுங்கள். குடும்ப உறுப்பினர்களிடம் அக்கறையாக பேசுங்கள். காதல் அல்லது நெருங்கிய உறவுகளில் உணர்ச்சிபூர்வமான அழுத்தங்களுக்கு அடிப்படையாமல் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. புதனின் வக்ரப் பெயர்ச்சியால் பேச்சு அல்லது எண்ணத்தில் தவறான புரிதல்கள் வரலாம். எனவே பேசும் பொழுது தெளிவாக இருக்க வேண்டியது அவசியம்.
பரிகாரங்கள்:
குரு பகவானின் வக்ர நிலையால் ஏற்படும் தாக்கங்களை குறைக்க குருவுக்கு உகந்த வழிபாடுகளை செய்வது நல்லது. துர்க்கை அம்மனை வழிபாடு செய்வது ஏற்படும் தடைகளில் இருந்து உங்களை பாதுகாக்கும். அமைதி மற்றும் மனத் தெளிவு பெற தியானம் செய்யலாம். வாயில்லா ஜீவன்களுக்கு உணவளிப்பது, பறவைகளுக்கு தண்ணீர் அளிப்பது நேர்மறை பலன்களை அதிகரிக்கும்.
முக்கிய குறிப்பு:
இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.