Nov 14 Rasi Palan: தனுசு ராசி நேயர்களே, இன்று எல்லாமே உங்களுக்கு நல்லதா நடக்கும்.!
Nov 14 Dhanusu Rasi Palan : நவம்பர் 14, 2025 தேதி தனுசு ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

நவம்பர் 14, 2025 தனுசு ராசிக்கான பலன்கள்:
தனுசு ராசி நேயர்களே, இன்றைய நாள் உற்சாகத்துடன், நேர்மறை ஆற்றலுடனும் காணப்படுவீர்கள். பல சவால்களை செய்து முடிக்க தேவையான மனவலிமை கிடைக்கும். துணிச்சலான முடிவுகளை எடுப்பீர்கள். சமூகத்தில் உங்கள் மதிப்பு உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளது.
நிதி நிலைமை:
இன்று நிதி ரீதியாக சற்று கவனத்துடன் இருக்க வேண்டிய நாளாகும். தேவையில்லாத அல்லது அவசர முடிவுகளால் அதிக செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வரவு செலவில் சமநிலையில் பேணுவது அவசியம். பெரிய முதலீடுகள் அல்லது பணத்தை கடனாக கொடுப்பதை தவிர்ப்பது நல்லது.
தனிப்பட்ட வாழ்க்கை:
திருமணமானவர்களுக்கு இன்று உறவில் அன்பும், புரிதலும் அதிகரிக்கும். அமைதியான சூழல் நிலவும். தனிமையில் உள்ளவர்கள் புதிய நபர்களை சந்திக்கும் வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் இணக்கம் மேலோங்கும். குழந்தைகள் மூலமாக மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கலாம்.
பரிகாரங்கள்:
இன்று நாராயணர் வழிபாடு ஆசீர்வாதங்களை பெருக்கி காரியங்களில் வெற்றியைத் தரும். தட்சிணாமூர்த்தி வழிபாடு ஞானம், அதிர்ஷ்டம் நல்ல முடிவுகளை எடுக்க உதவும். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு உங்களால் முடிந்த அன்னதானம் வழங்குவது நல்லது. மஞ்சள் நிறப் பொருட்களை தானம் செய்வது அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும்.
முக்கிய குறிப்பு:
இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.