- Home
- Astrology
- Mesham to Meenam Dec 05 Today Rasi Palan: டிசம்பர் 05 இன்றைய ராசி பலன்.! அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்.! கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்.!
Mesham to Meenam Dec 05 Today Rasi Palan: டிசம்பர் 05 இன்றைய ராசி பலன்.! அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்.! கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்.!
December 05 Daily Horoscope for 12 zodiac signs: டிசம்பர் 05, 2055 12 ராசிகளுக்குமான பொது பலன்கள் குறித்தும், அதிர்ஷ்டம் பெறும் ராசிகள், கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் பற்றியும் இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
11

Image Credit : Asianet News
Mesham to Meenam Dec 05 Daily Rasi Palan
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பொதுவான பலன்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்:
- இன்று திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் அமையும். உடன் பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். வியாபாரம் மற்றும் உத்தியோகத்தில் ஏற்றம் காணப்படும்.
- அதிர்ஷ்ட எண்: 2.
- அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு.
ரிஷபம்:
- இன்றைய தினம் நீங்கள் எடுக்கும் காரியங்கள் வெற்றி அடையும். குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். பிள்ளைகளின் உடல்நிலை சீராகும். மந்தமாக இருந்த வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும்.
- அதிர்ஷ்ட எண்: 4.
- அதிர்ஷ்ட நிறம்: ஊதா.
மிதுனம்:
- இன்று நிலுவையில் இருந்த பணிகளை வெற்றிகரமாக முடித்துக் காட்டுவீர்கள். குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரம் சிறப்பாக இருக்கும். அலுவலக ரீதியான பயணங்கள் வெற்றியைத் தரும்.
- அதிர்ஷ்ட எண்: 6.
- அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு.
கடகம்:
- இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். காரியங்களில் ஏற்பட்டிருந்த தடைகள் விலகும். கடினமான வேலைகளையும் செய்து முடிப்பீர்கள். வியாபார பாக்கிகளை போராடி வசூல் செய்வீர்கள். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.
- அதிர்ஷ்ட எண்: 8.
- அதிர்ஷ்ட நிறம்: நீலம்.
சிம்மம்:
- தேவையில்லாத விரயச் செலவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை. வியாபாரிகள் நிதானமாக செயல்பட வேண்டும். அனுபவம் வாய்ந்தவர்களின் ஆலோசனையை கேட்டு நடப்பது நல்லது. அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.
- அதிர்ஷ்ட எண்: 9.
- அதிர்ஷ்ட நிறம்: பச்சை.
கன்னி:
- இன்று மன நிறைவுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தினரை அனுசரித்துப் போவது நல்லது. பிள்ளைகளிடமிருந்த மனக்கசப்புகள் விலகும். கைமாறாக வாங்கிய பணத்தை திருப்பி தருவீர்கள். வியாபாரம் மற்றும் உத்தியோகத்தில் முன்னேற்றம் காணப்படும்.
- அதிர்ஷ்ட எண்: 7.
- அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்.
துலாம்:
- தள்ளிப் போய்க் கொண்டிருந்த சுப காரியங்கள் கூடி வரும். பிள்ளைகளின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். சகோதரர்களால் நன்மை ஏற்படலாம். அலுவலகத்தில் உங்கள் மீதான மதிப்பு உயரும். சிறிய அளவில் தொழில் செய்பவர்கள் வியாபாரத்தை விரிவு படுத்துவீர்கள்.
- அதிர்ஷ்ட எண்: 5.
- அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்.
விருச்சிகம்:
- குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். மறைமுகமாக இருந்த போட்டியாளர்களுக்கு பதிலடி கொடுப்பீர்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் பார்க்கலாம். அலுவலகப் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். பங்குதாரர்களின் ஆலோசனையைக் கேட்பது அவசியம்.
- அதிர்ஷ்ட எண்: 3.
- அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு.
தனுசு:
- குடும்பத்தில் இருந்த கருத்து மோதல்கள் விலகும். சண்டை சச்சரவுகள் சரியாகும். உங்கள் பேச்சுக்கு மதிப்புக்கூடும். கடன்களை தீர்க்க முயற்சிப்பீர்கள். வியாபார ரீதியான பயணங்கள் திருப்தி தரும். உத்தியோகம் சிறப்பாக இருக்கும்.
- அதிர்ஷ்ட எண்: 1.
- அதிர்ஷ்ட நிறம்: மெரூன்.
மகரம்:
- உங்கள் பேச்சில் தெளிவு பிறக்கும். சகோதரர்கள் வழியில் உதவி கிடைக்கும். தாயாரின் மருத்துவ செலவு குறையும். வியாபாரத்தில் சரக்குகள் விற்று தீரும். அலுவலகத்தில் அடுத்தவர்களின் விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும்.
- அதிர்ஷ்ட எண்: 6.
- அதிர்ஷ்ட நிறம்: தங்க நிறம்.
கும்பம்:
- இன்று உடல் நலக்குறைவு, மனச்சோர்வு ஆகியவை ஏற்படக்கூடும். திட்டமிட்ட பணிகளை முடிக்க முடியாமல் திணறுவீர்கள். வியாபாரத்தில் ஓரளவு லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படும் வாய்ப்புகள் உருவாகும்.
- அதிர்ஷ்ட எண்: 4.
- அதிர்ஷ்ட நிறம்: கடல் பச்சை.
மீனம்:
- தடைபட்டு நின்ற காரியங்கள் நல்ல விதத்தில் முடிவடையும். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் லாபம் பெருகும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.
- அதிர்ஷ்ட எண்: 9.
- அதிர்ஷ்ட நிறம்: வைலட்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)
Latest Videos

