- Home
- Astrology
- Weekly Rasi Palan: சிம்ம ராசி நேயர்களே, இந்த வாரம் நடக்கப்போகும் மாற்றங்கள்.! தயாரா இருங்க.!
Weekly Rasi Palan: சிம்ம ராசி நேயர்களே, இந்த வாரம் நடக்கப்போகும் மாற்றங்கள்.! தயாரா இருங்க.!
Simma Rasi Weekly Rasi Palan: டிசம்பர் 08 முதல் 14 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் சிம்ம ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த வார ராசிப்பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

வார ராசிப்பலன்கள் - சிம்மம்
சிம்ம ராசி நேயர்களே, இந்த வாரம் உங்களுக்கு சிறப்பான வாரமாக இருக்கும். உங்களின் திறமை மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகள் சேர வாய்ப்பு உள்ளது.
பிள்ளைகளின் திறமைகள் அல்லது கல்வி மூலம் உங்களுக்கு பெருமை சேரும். வாரத்தின் நடுப்பகுதியில் சில தேவையற்ற விஷயங்கள் மனதை குழப்பலாம். எனவே நிதானம் தேவை. எதிர்பாராத பயணங்கள் அல்லது புதிய முயற்சிகள் வெற்றி அடைய வாய்ப்பு உள்ளது.
நிதி நிலைமை:
இந்த வாரம் வருமானம் நிலையாக இருக்கும். முதலீடுகள் குறித்து நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். செலவுகளில் நிதானம் தேவை. ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது அவசியம்.
பங்குச்சந்தை மற்றும் பிற முதலீடுகள் மூலம் பலன்களை எதிர்பார்க்கலாம். குடும்பத்திற்காக அல்லது சொத்து வாங்குவது தொடர்பாக ஆலோசனைகள் மேற்கொள்வீர்கள்.
ஆரோக்கியம்:
ஆரோக்கியத்தில் சிறு சிறு உபாதைகள் வந்து நீங்கும். குறிப்பாக செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வேலைப்பளு காரணமாக மன அழுத்தம் கூடும். போதுமான ஓய்வு எடுக்க வேண்டியது அவசியம்.
உடற்பயிற்சி மற்றும் உணவுப் பழக்கத்தை மாற்றுவதன் மூலம் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். கண் தொடர்பான விஷயங்கள் பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் கவனத்துடன் இருக்க வேண்டும்.
கல்வி:
உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு இந்த வாரம் சிறப்பானதாக இருக்கும். ஆராய்ச்சித் துறையில் இருக்கும் மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகள் அல்லது முன்னேற்றத்தைக் காண்பீர்கள். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்கள் வெற்றியைப் பெறுவீர்கள். புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வம் கூடும்.
தொழில் மற்றும் வியாபாரம்:
வேலையில் உங்கள் திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கும். சக ஊழியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். தொழில் செய்து வருபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். முதலீடுகளில் அதிக லாபம் கிடைக்கும்.
கூட்டாக தொழில் செய்பவர்கள் கருத்து வேறுபாடுகளை தவிர்த்து, இணக்கமான போக்கை கடைபிடிப்பது நல்லது. கலை மற்றும் படைப்பாற்றல் சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு இந்த வாரம் சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.
குடும்ப உறவுகள்:
குடும்பத்தில் இந்த வாரம் மகிழ்ச்சி நிலவும். குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிடுவீர்கள். திருமண வாழ்க்கையில் சனி பகவானின் சஞ்சாரத்தால் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.
தாய் வழி உறவினர்களிடம் இருந்த பிரச்சனைகள் குறையும். உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்காக அலைச்சல் ஏற்படலாம். இது சோர்வை ஏற்படுத்தக்கூடும்.
பரிகாரம்:
தினமும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்வது அல்லது “ஓம் சூர்யாய நமஹ:” மந்திரத்தை 11 முறை ஜெபிப்பது தன்னம்பிக்கையை அதிகரிக்கும். முருகப்பெருமானை வழிபடுவது அதிர்ஷ்டத்தை வரவழைக்கும். நரசிம்மரை வழிபடுவது தைரியத்தை அளிக்கும். ஏழை மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் அல்லது உங்களால் முடிந்த உதவிகளை செய்வது நன்மை தரும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

