- Home
- Astrology
- Weekly Rasi Palan: மிதுன ராசி நேயர்களே, இந்த வாரம் எதிர்பாராததை எதிர்பாருங்கள்.! அதிர்ஷ்டம் கொட்டும்.!
Weekly Rasi Palan: மிதுன ராசி நேயர்களே, இந்த வாரம் எதிர்பாராததை எதிர்பாருங்கள்.! அதிர்ஷ்டம் கொட்டும்.!
Mithuna Rasi Weekly Rasi Palan: டிசம்பர் 08 முதல் 14 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் மிதுன ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த வார ராசிப்பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

வார ராசிப்பலன்கள் - மிதுனம்
மிதுன ராசி நேயர்களே, இந்த வாரம் உங்கள் தனிப்பட்ட உறவுகள், தொழில்முறை, சமூக தொடர்புகள் என அனைத்தும் சாதகமாக இருக்கும். திடீர் அதிர்ஷ்டம் அல்லது எதிர்பாராத நிகழ்வுகள் நிகழ வாய்ப்பு உள்ளது. எதிர்காலத்திற்கான திட்டமிடலில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.
புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரலாம். அதை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்வது நல்லது. சாதுரியமான முடிவுகளை எடுத்து வெற்றி காண்பீர்கள்.
நிதி நிலைமை:
இன்றைய தினம் எதிர்பாராத வழிகளில் ஆதாயம் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் உருவாகலாம். வருமானம் உயரும். விரய ஸ்தானத்தில் குரு இருப்பதால் தேவையற்ற செலவுகள் அதிகரிக்கலாம்.
நீண்டகால முதலீடுகள் குறித்து திட்டமிட சிறந்த நேரமாகும். நிலம், வீடு தொடர்பான முதலீடுகளில் நிதானம் தேவை. வரவு செலவு கணக்குகளை தெளிவாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
ஆரோக்கியம்:
இந்த வாரம் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உணவுப் பழக்கத்தில் அதிக கவனம் தேவை. அலைச்சல் காரணமாக உடல் சோர்வு ஏற்படலாம். உடல் உபாதைகளை அலட்சியம் செய்யாமல் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.
முறையான உடற்பயிற்சி மற்றும் தியானம் செய்வது மன அழுத்தத்தை குறைக்க உதவும். பயணங்களின் போது மிக கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
கல்வி:
உயர்கல்வி கற்பவர்களுக்கு இந்த வாரம் மிகவும் சாதகமாக இருக்கும். படிக்கும் விஷயங்களில் மந்த நிலை அல்லது கவனச் சிதறல்கள் ஏற்படலாம்.எனவே விடா முயற்சி அவசியம். போட்டித் தேர்வுகளில் சிறப்பான வெற்றி பெற இன்னும் கூடுதல் உழைப்பை கொடுக்க வேண்டி வரலாம்.
தொழில் மற்றும் வியாபாரம்:
அலுவலகத்தில் உங்கள் கருத்துக்களும் செயல் திறனும் அங்கீகரிக்கப்படும். சக ஊழியர்களுடனான பேச்சுவார்த்தை வெற்றியைத் தரும். தொழில் செய்து வருபவர்களுக்கு முன்னேற்றம் காணப்படும். புதிய கூட்டாண்மைகள் உருவாகும்.
எதிர்பாராத ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வேலையில் மாற்றம் அல்லது புதிய பொறுப்புக்கள் தேடி வரலாம். இந்த மாற்றங்களை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளுங்கள்.
குடும்ப உறவுகள்:
திருமண வாழ்வில் இன்றைய தினம் நல்லிணக்கம் காணப்படும். துணையுடன் மனம் விட்டு பேச சிறந்த நேரமாகும். சிறு சண்டைகள் ஏற்பட்டாலும் அவை சுமுகமாக முடிவடையும். தாயின் ஆரோக்கியத்தில் கூடுதல் அக்கறை தேவை.
உடன் பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம் என்பதால் வார்த்தைகளில் நிதானம் அவசியம். சமூகத்தில் உங்கள் மதிப்பு உயரும். விருந்தினர்கள் வருகையால் வீடு களைகட்டும்.
பரிகாரம்:
புதன்கிழமைகளில் விநாயகரை வழிபடுவது நன்மை தரும். பச்சை நிறப் பொருட்களை தானம் செய்வது நல்லது. சனிக்கிழமைகளில் சனீஸ்வரரையும், வியாழக்கிழமைகளில் குரு பகவானையும் வழிபடுவது நல்லது. விஷ்ணுவை தியானிப்பது மன அமைதிக்கு உதவும். இயலாதவர்கள், ஏழை, எளியவர்களுக்கு உதவுவது நற்பலன்களை அதிகரிக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

