MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Weekly Rasi Palan: மேஷ ராசி நேயர்களே, இந்த வாரம் அடிக்கும் யோகம்.! ஆனாலும் இந்த விஷயங்களில் கவனம்.!

Weekly Rasi Palan: மேஷ ராசி நேயர்களே, இந்த வாரம் அடிக்கும் யோகம்.! ஆனாலும் இந்த விஷயங்களில் கவனம்.!

Mesha Rasi Weekly Rasi Palan: டிசம்பர் 08 முதல் 14 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் மேஷ ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த வார ராசிப்பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

2 Min read
Author : Ramprasath S
Published : Dec 07 2025, 02:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
11
வார ராசிப்பலன்கள் மேஷம்
Image Credit : Asianet News

வார ராசிப்பலன்கள் - மேஷம்

மேஷ ராசி நேயர்களே, இந்த வாரம் சவால்களும், வளர்ச்சியும் கலந்த வாரமாக இருக்கும். செவ்வாய் மற்றும் புதன் பகவானின் நிலை காரணமாக அதிர்ஷ்டம் கிடைக்கலாம். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். 

வாரத்தின் நடுப்பகுதியில் சந்திரன் உங்கள் ராசிக்கு வருவதால் புதிய உத்வேகமும், தெளிவும் கிடைக்கும். ரகசியங்கள் மற்றும் பண விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டி இருக்கும். சமூகத்திலும், நண்பர்கள் மத்தியிலும் உங்கள் மதிப்பு உயரும்.

நிதி நிலைமை:

சனி பகவான் 11வது வீட்டில் இருப்பதால் இந்த வாரம் வருமானத்திற்கு எந்த குறைவும் ஏற்படாது. கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும். எதிர்பாராத வகையில் நிதி ஆதாயங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. 

காப்பீட்டு பணம், பரம்பரை சொத்துக்கள் மூலம் பணவரவு ஏற்படலாம். ராகு பகவானின் நிலை காரணமாக தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். எனவே செலவுகளை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். புதிய முதலீடுகளை பற்றி சிந்திப்பீர்கள்.

ஆரோக்கியம்:

இந்த வாரம் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். கேது பகவானின் சஞ்சாரம் காரணமாக வயிறு மற்றும் செரிமானம் தொடர்பான சிறு சிறு பிரச்சனைகள் எழக்கூடும். எனவே சரியான உணவு முறையை பின்பற்ற வேண்டும். 

வாகனங்களை ஓட்டும்பொழுது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வாரத்தின் இரண்டாம் பகுதியில் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மன அழுத்தத்தை குறைப்பதற்கு தியானம் அல்லது உடற்பயிற்சி செய்யலாம்.

கல்வி:

குரு பகவானின் சாதகமான நிலை காரணமாக கல்வி தொடர்பான விஷயங்களில் மாணவர்கள் வெற்றி பெறுவீர்கள். புதன் பகவானின் சஞ்சாரம் காரணமாக உயர்கல்வி பயிலும் மாணவர்கள் அல்லது ஆராய்ச்சியில் ஈடுபடும் மாணவர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். 

வெளிநாட்டிற்கு செல்ல முயற்சிக்கும் மாணவர்களின் முயற்சிகள் வெற்றி பெறும். கடினமாக உழைக்கும் மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள்.

தொழில் மற்றும் வியாபாரம்:

சுக்கிரன் தொழில் ஸ்தானத்தில் இருப்பதால் பணியிடத்தில் உங்களின் செல்வாக்கு உயரும். உங்களின் கருத்துக்கள் ஏற்கப்படும். தொழிலில் இருப்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் அல்லது ஆர்டர்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. 

செவ்வாய் பகவான் அதிர்ஷ்ட வீட்டில் இருப்பதால் உங்கள் முயற்சிகள் அங்கீகரிக்கப்படும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கலாம்.

குடும்ப உறவுகள்:

வாரத்தின் தொடக்கத்தில் குடும்ப உறவுகளில் சற்று பின்னடைவுகள் இருக்கலாம். இளைய சகோதரர்கள் மற்றும் சகோதரர் வழியில் இருந்து பிரச்சனைகள் உருவாகலாம். குடும்ப உறுப்பினர்களுடன் வெளிப்படையாக பேசுவது உறவை வலுப்படுத்த உதவும். 

வாழ்க்கைத் துணையுடன் இந்த வாரம் நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரம் செலவிடுவீர்கள். சிறிய பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் உண்டு

பரிகாரம்:

முருகப்பெருமானை வணங்குவது அல்லது துர்க்கை அம்மனை வழிபடுவது ஆற்றலையும், தன்னம்பிக்கையின் தரும். சூரிய பகவானுக்கு நீர் அர்ப்பணித்து “ஓம் சூர்யாய நமஹ:” மந்திரத்தை உச்சரிப்பது நற்பலன்களைத் தரும். ஏழைகளுக்கு இனிப்புகள் வழங்குவது அல்லது உணவு தானம் செய்வது நேர்மறை பலன்களை கூட்டும்

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ராசி பலன்
ஜோதிடம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
சுக்கிரன் உயர்வு.. இந்த ராசிகள் கவனம்.. இந்த வார ராசிபலன் யாருக்கு சாதகம்?
Recommended image2
Numerology: எண் கணிதத்தின்படி, இந்த தேதிகளில் பிறந்தவர்கள் மார்ச் மாதம் பணக்காரர் ஆவார்கள்.!
Recommended image3
இந்த தேதிகளில் பிறந்த பெண்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள்.! தனது தந்தைக்கு கோடீஸ்வர யோகத்தை கொண்டு வருவார்கள்.!
Related Stories
Recommended image1
Astrology: 2026-ல் நடக்கும் சனி பெயர்ச்சியால் கஷ்டப்படப்போகும் 3 ராசிகள்.! பிரச்சனை மேல் பிரச்சனை வருமாம்.!
Recommended image2
Astrology: புத்தாண்டில் உருவாகும் பஞ்சாங்க யோகம்.! 4 ராசிகளுக்கு அடிக்கப்போகும் டபுள் ஜாக்பாட்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved