Weekly Rasi Palan: தனுசு ராசி நேயர்களே, இந்த வாரம் பணம் கூரையை பிச்சிட்டு கொட்டுமாம்.!
Dhanusu Rasi Weekly Rasi Palan: டிசம்பர் 08 முதல் 14 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் தனுசு ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த வார ராசிப்பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

வார ராசிப்பலன்கள் - தனுசு
தனுசு ராசி நேயர்களே, இந்த வாரம் துணிச்சலான முடிவுகளை எடுத்து மகத்தான வெற்றியைப் பெறுவீர்கள். செவ்வாய் பகவானின் நிலை காரணமாக புத்துணர்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும் காணப்படுவீர்கள்.
வாழ்க்கையின் பெரிய லட்சியங்கள், நீண்ட கால திட்டங்கள் பயணங்கள் குறித்து சிந்திப்பீர்கள். உங்களின் அடையாளம் மற்றும் பாதையை மாற்றியமைக்க இது சரியான நேரம் ஆகும்.
நிதி நிலைமை:
அரசாங்கத்திடமிருந்து சலுகைகள் அல்லது எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. புதிய முதலீடுகளால் நன்மைகள் கிடைக்கும். ஆன்மீகம் மற்றும் தர்ம காரியங்களுக்காக பணம் செலவு செய்வீர்கள். சனியின் தாக்கம் இருப்பதால் செலவு செய்யும் பொழுது விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம். நிதி தொடர்பான முடிவுகளை நிதானமாகவும், கவனத்துடனும் எடுக்க வேண்டும்.
ஆரோக்கியம்:
செவ்வாய் பகவானின் நிலை காரணமாக ஆற்றல் அதிகரிக்கும். ஆரோக்கியம் தொடர்பான புதிய பழக்க வழக்கங்களை தொடங்குவீர்கள். அதிகப்படியான செயல்பாடு காரணமாக சோர்வு அல்லது மன அழுத்தம் ஏற்படலாம். எனவே போதுமான ஓய்வு தேவை. சீரான மற்றும் சத்தான உணவில் கவனம் செலுத்துவது உடல் நலனை சீராக்க உதவும்.
கல்வி:
உயர்கல்வி கற்கும் மாணவர்களுக்கு இந்த வாரம் சாதகமாக இருக்கும். புதிய விஷயங்களை கற்கவும், பயணத்திட்டங்களை வகுக்கவும் ஆர்வம் காட்டுவீர்கள். குழப்பங்கள் நீங்கும். படிப்பில் கவனம் கூடும். ஆசிரியர்கள் மற்றும் வழிகாட்டிகளுடன் நல்லுறவு பேண வேண்டியது அவசியம்.
தொழில் மற்றும் வியாபாரம்:
தொழில் ரீதியாக வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். உங்கள் சாதுரியம் மற்றும் புத்திசாலித்தனத்தால் பணிகளை எளிதாக முடிப்பீர்கள். அரசுப் பணியில் இருப்பவர்களுக்கு நல்ல காலம் பிறக்கலாம். கூட்டு முயற்சிகளில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. வேலை மாற்றம் அல்லது புதிய தொழில் தொடங்குவதற்கான முயற்சிகளை எடுக்கலாம். கூட்டுப் பணிகளில் வரையறைகளை நிர்ணயிப்பது சிறந்த பலன்களைத் தரும்.
குடும்ப உறவுகள்:
குருவின் பார்வை இருப்பதால் திருமண உறவுகள் மற்றும் கூட்டாண்மைகளில் திருப்புமுனைகள் ஏற்படலாம். உறவை வலுப்படுத்த வெளிப்படுத்தன்மை அவசியம். செவ்வாய் மற்றும் சூரியனின் நிலை காரணமாக கோபம் மற்றும் அதிகாரப் போட்டிகள் ஏற்படலாம். எனவே குடும்ப உறவுகளில் அமைதியாகவும் பொறுமையாகவும் இருக்க வேண்டியது அவசியம்.
பரிகாரம்:
வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தியை வழிபடுவது மிகுந்த பலன்களைத் தரும். மஞ்சள் நிறப் பொருட்களை தானமாக அளிக்கலாம். தர்ம காரியங்களுக்கும், கோவில்களில் நடக்கும் அன்னதானங்களுக்கும் உங்களால் முடிந்த உதவிகளை செய்வது நேர்மறை பலன்களைக் கூட்டும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

