- Home
- Astrology
- Date of Birth Numerology: இந்த 3 தேதிகளில் பிறந்த பெண்கள் அதிகமாக கோபப்படுவாங்களாம்.! கோபம் வந்தா எரிமலையா வெடிப்பாங்களாம்.!
Date of Birth Numerology: இந்த 3 தேதிகளில் பிறந்த பெண்கள் அதிகமாக கோபப்படுவாங்களாம்.! கோபம் வந்தா எரிமலையா வெடிப்பாங்களாம்.!
Date Of Birth Numerology: எண் கணிதத்தின்படி, குறிப்பிட்ட சில தேதிகளில் பிறந்த பெண்கள் மிகவும் முன்கோபிகளாக இருப்பார்கள். சின்ன சின்ன விஷயங்களுக்குக் கூட கோபப்படுவார்கள். அந்த தேதிகள் குறித்து இங்கு காணலாம்.

Date Of Birth Numerology
எண் கணித ஜோதிடத்தின்படி, ஒருவரின் பிறந்த தேதி அவருடைய வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். பிறந்த தேதியில் உள்ள எண்களைக் கூட்டி வரும் ஒற்றை இலக்க எண்ணை ‘மூல எண்’ என்று சொல்வார்கள். இந்த ஒவ்வொரு எண்ணும் ஒரு குறிப்பிட்ட கிரகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. அந்த கிரகத்தின் தன்மையை வைத்து, ஒருவருடைய குணம் மற்றும் எதிர்காலத்தைக் கணிக்க முடியும்.
சில பெண்கள் இயல்பிலேயே மிகவும் முன்கோபிகளாக இருப்பதைப் பார்த்திருப்போம். அதாவது, சின்ன சின்ன விஷயங்களுக்குக் கூட கோபப்படுவார்கள். இப்படிப்பட்ட பெண்கள் எந்தக் கிரகத்தால் ஈர்க்கப்படுகிறார்கள், அவர்களைப் பற்றிய சுவாரஸ்யமான விஷயங்கள் என்னென்ன என்று இங்கே பார்க்கலாம்.
Numerology: உங்கள் பிறந்த தேதிப்படி எந்த வயதில் நீங்கள் கோடீஸ்வரர் ஆவீங்கன்னு தெரியுமா?

மூல எண்ணை கணக்கிடுவது எப்படி?
எண் கணிதம் மூல எண்ணின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. எந்த மாதத்திலும் 1 முதல் 9ஆம் தேதி வரையில் பிறந்தவர்களுக்கு அந்தந்த தேதிகளை மூல எண் ஆகும். அதுவே 10 ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரையில் பிறந்தவர்களுக்கு முதல் இரு எண்களை கூட்டினால் மூல எண் கிடைக்கும். உதாரணமாக ஒருவர் பிறந்த தேதி 25 என்றால், அதைக் கூட்டும் பொழுது 2+5=7 வரும். அதுவே உங்கள் மூல எண் என்று அழைக்கப்படுகிறது.
Numerology: உங்க பிள்ளை இந்த தேதியில பிறந்தவங்களா? அப்போ பெற்றோருக்குக் குபேர யோகம் கன்பார்ம்.!
இந்த 3 தேதிகளில் பிறந்த பெண்கள் கோபக்காரர்கள்
எண் கணித நிபுணர்களின்படி, எந்த மாதத்திலும் 8, 17 அல்லது 26 ஆகிய தேதிகளில் பிறந்த பெண்களின் மூல எண் 8 ஆக இருக்கும். இந்த எண் சனி கிரகத்துடன் தொடர்புடையது. ஜோதிடத்தில் சனி ஒரு கடுமையான கிரகமாகக் கருதப்படுகிறது. இதனால்தான், இந்த எண்ணின் ஆதிக்கத்தில் இருக்கும் பெண்கள் முன்கோபிகளாகவும், மிகவும் பிடிவாத குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். தாங்கள் நினைத்ததைச் சாதிக்கும் வரை ஓய மாட்டார்கள். வீட்டில் உள்ளவர்கள் கூட இவர்களுடைய இந்த குணத்தால் சில சமயம் சிரமப்படுவார்கள்.
கடின உழைப்பும் நேர்மையுமே இவர்களின் பலம்
சனி கிரகத்தின் ஆதிக்கத்தில் இருப்பதால், மூல எண் 8 கொண்ட பெண்கள் கடின உழைப்பாளிகளாகவும், நேர்மையானவர்களாகவும் இருப்பார்கள். படிப்பில் கெட்டிக்காரர்களாகவும், தங்களுக்குக் கொடுக்கப்பட்ட எந்தப் பொறுப்பையும் முழு நேர்மையுடன் செய்து முடிப்பார்கள். ஆனால், இவர்களுடைய வேலையில் யாராவது தலையிட்டால், இவர்களின் கோபம் எரிமலை போல வெடிக்கும். இந்தக் காரணத்தினாலேயே இவர்களுக்கு நண்பர்கள் குறைவாக இருப்பார்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் கூட இவர்களிடம் இருந்து சற்று தள்ளியே இருப்பார்கள்.
வெற்றி இவர்களைத் தேடி வரும்
மூல எண் 8 கொண்ட பெண்களுக்கு சனி பகவானின் சிறப்பு அருள் இருப்பதால், இவர்களுக்கு வெற்றி மிக எளிதாகக் கிடைக்கும். இந்த பெண்கள் எந்தத் துறையில் வேலை செய்தாலும், அங்கே குறுகிய காலத்திலேயே பெரிய சாதனைகளைப் படைப்பார்கள். சண்டை சச்சரவுகள் இருந்தாலும், தங்கள் குடும்பத்தை நன்றாகப் பார்த்துக் கொள்வார்கள். திருமண வாழ்க்கையில் நுழைந்த பிறகு, இவர்களின் கோப குணம் கொஞ்சம் குறைந்து, காதல் வாழ்க்கையை மகிழ்ச்சியாக அனுபவிப்பார்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

