MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Numerology: இந்த 6 தேதிகளில் பிறந்தால் வறுமையே வராது.! குபேரனின் நேரடிப் பார்வையில் இருக்கும் அதிர்ஷ்டசாலிகள்.!

Numerology: இந்த 6 தேதிகளில் பிறந்தால் வறுமையே வராது.! குபேரனின் நேரடிப் பார்வையில் இருக்கும் அதிர்ஷ்டசாலிகள்.!

Date of Birth Numerology : எண் கணித சாஸ்திரத்தின்படி, சில குறிப்பிட்ட பிறந்த தேதிகளைக் கொண்டவர்களின் வாழ்க்கையில் செல்வம் கொழிக்கும். அவர்களுக்கு குபேரனின் நேரடிப் பார்வை இருப்பதால், பணத்துக்குப் பஞ்சம் இருக்காது. 

2 Min read
Author : Ramprasath S
Published : May 19 2026, 04:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Date of Birth Numerology
Image Credit : Asianet News

Date of Birth Numerology

எண் கணித சாஸ்திரத்தின்படி, சில எண்களுக்கு குபேரனின் ஆசீர்வாதம் இருக்கும். இந்த எண்கள் ஒருத்தரோட கெரியர்ல பெரிய வெற்றியையும், கஜானாவை செல்வத்தால் நிரப்பவும் உதவுமாம். குறிப்பா, 33 என்ற எண்ணை 'குபேர எண்'னு சொல்றாங்க. இந்த எண் செல்வம், படைப்பாற்றல், தினசரி வருமான பெருக்கத்தை குறிக்குது. 3-ம் 3-ம் சேர்ந்தா 6 வரும். எண் 6 சுகம், சந்தோஷம், செல்வத்தோட அடையாளமா பார்க்கப்படுது.

Numerology: இந்த 3 தேதிகளில் பிறந்தவர்கள் சிறு வயதில் ரொம்ப கஷ்டப்படுவார்கள்.! ஆனால் 40 வயத்துக்குப் பின் சனி பகவான் அருளால் வாழ்க்கை மாறும்.!

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
26
மூல எண்ணை கண்டுபிடிப்பது எப்படி?
Image Credit : Asianet News

மூல எண்ணை கண்டுபிடிப்பது எப்படி?

நியூமராலஜியில், பிறந்த தேதியில் உள்ள எண்களைக் கூட்டி மூல எண் கணக்கிடப்படுகிறது. உதாரணமா, ஒருத்தர் 1-லிருந்து 9-ஆம் தேதிக்குள் பிறந்தா, அந்த எண்தான் அவரோட மூல எண். ஒருவேளை 10-லிருந்து 31-ஆம் தேதிக்குள் பிறந்திருந்தா, அந்த இரண்டு எண்களையும் கூட்ட வேண்டும். வர்ற ஒற்றை இலக்க எண் தான் அவங்களோட மூல எண். உதாரணமா, ஒருத்தர் 15-ஆம் தேதி பிறந்திருந்தா, அவரோட மூல எண் 1+5 = 6 ஆக இருக்கும்.

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு காதல் சுத்தமா செட் ஆகாது.! எத்தனை பேரை லவ் பண்ணாலும் பிரேக்-அப் நடக்குமாம்.!

Related Articles

Related image1
Numerology: இந்த 3 தேதிகளில் பிறந்தவர்கள் சிறு வயதில் ரொம்ப கஷ்டப்படுவார்கள்.! ஆனால் 40 வயத்துக்குப் பின் சனி பகவான் அருளால் வாழ்க்கை மாறும்.!
Related image2
Numerology: உங்கள் பிறந்த தேதிப்படி எந்த வயதில் நீங்கள் கோடீஸ்வரர் ஆவீங்கன்னு தெரியுமா?
36
மூல எண் 3 மற்றும் 6
Image Credit : Asianet News

மூல எண் 3 மற்றும் 6

எந்த ஒரு மாதத்திலும் 3, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும், 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கும் மூல எண்கள் முறையே 3 மற்றும் 6 ஆகும். எனவே இந்த ஆறு தேதிகளுக்கு பிறந்தவர்களுக்கு குபேரனின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

Numerology: உங்கள் பிறந்த தேதிப்படி எந்த வயதில் நீங்கள் கோடீஸ்வரர் ஆவீங்கன்னு தெரியுமா?

46
குபேர எண் 33 & 72
Image Credit : Asianet News

குபேர எண் 33 & 72

ஜோதிட நிபுணர்கள், 33 என்ற எண்ணை தொழில் மற்றும் கெரியருக்கு ரொம்ப அதிர்ஷ்டமான எண்ணா கருதுறாங்க. இதுமட்டுமில்லாம, 72 என்ற எண்ணையும் குபேர எண்ணாக சொல்றாங்க. காரணம், குபேர யந்திரத்தோட கட்டங்கள்ல இந்த எண் இருக்கு. அந்த யந்திரத்துல ஒவ்வொரு வரிசை, நெடுவரிசை, மூலைவிட்ட எண்களை கூட்டினாலும் 72 தான் வரும். இந்த எண் நிரந்தரமான செல்வத்தையும், தொடர்ச்சியான வருமானத்தையும் கொண்டு வரும்னு ஒரு நம்பிக்கை இருக்கு.

56
மூல எண் 3 மற்றும் 6 ஏன் சிறந்தது?
Image Credit : Asianet News

மூல எண் 3 மற்றும் 6 ஏன் சிறந்தது?

எண் கணிதப்படி, மூல எண் 3 மற்றும் மூல எண் 6 கொண்டவங்களுக்கு குபேரனோட ஆசீர்வாதம் ரொம்பவே அதிகமாக இருக்கும். மூல எண் 3 கொண்டவங்களுக்கு குருவோட அருளும், மூல எண் 6 கொண்டவங்களுக்கு சுக்கிரனோட அருளும் விசேஷமா கிடைக்கும். குரு பகவான் உங்க வாழ்க்கையை செழுமை படுத்துவார். சுக்கிரன் ஆடம்பரத்துக்கும், செல்வத்துக்கும் அதிபதி. உங்க ஜாதகத்துல குரு வலுவா இருந்தா, உங்க வளர்ச்சி நிச்சயம். சுக்கிரனோட ஆசீர்வாதம் இருந்தா, சொகுசான வாழ்க்கை நிச்சயம் உண்டாகும்.

66
தொழிலிலும் உச்சத்தை அடைவார்கள்
Image Credit : Pinterest

தொழிலிலும் உச்சத்தை அடைவார்கள்

எண் கணிதத்தின்படி, குபேர எண்ணை பிறந்த எண்ணாக கொண்டவங்க அல்லது இந்த எண்களைப் பயன்படுத்துறவங்க விரும்பிய கெரியர் வெற்றியை அடைவாங்க. தொழில் நிறுவனத்தோட பெயர்ல 33 அல்லது அது தொடர்பான எண்களைப் பயன்படுத்தினா, வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகமாகி லாபம் பெருகும். வேலை பார்க்குறவங்களுக்கு பதவி உயர்வும், நல்ல வருமான வாய்ப்புகளும் கிடைக்கும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
இன்றைய இராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
சூரிய பெயர்ச்சி 2026: அடுத்த 30 நாட்கள் இந்த 3 ராசிகளுக்கு கஷ்ட காலம்! தப்பிப்பது எப்படி?
Recommended image2
Venus Transit 2026: திருவாதிரை நட்சத்திரத்திற்கு மாறும் சுக்கிர பகவான்.! 3 ராசிகளுக்கு நல்ல காலம் தொடங்கியாச்சு.! டாப் கியரில் போகப்போறீங்க.!
Recommended image3
Astro Tips: ராத்திரி தூங்கும்போது இதெல்லாம் செய்யாதீங்க... பர்ஸ் காலியாகிடும்!
Related Stories
Recommended image1
Numerology: இந்த 3 தேதிகளில் பிறந்தவர்கள் சிறு வயதில் ரொம்ப கஷ்டப்படுவார்கள்.! ஆனால் 40 வயத்துக்குப் பின் சனி பகவான் அருளால் வாழ்க்கை மாறும்.!
Recommended image2
Numerology: உங்கள் பிறந்த தேதிப்படி எந்த வயதில் நீங்கள் கோடீஸ்வரர் ஆவீங்கன்னு தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved