- Home
- Astrology
- Astrology: செப்டம்பர் 7, இன்றைய ராசி பலன்கள்.! அதிர்ஷ்டம் கதவை தட்டும்! பண மழை பொழியும்! கடன் பிரச்சினை தீரும்.!
Astrology: செப்டம்பர் 7, இன்றைய ராசி பலன்கள்.! அதிர்ஷ்டம் கதவை தட்டும்! பண மழை பொழியும்! கடன் பிரச்சினை தீரும்.!
மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்கும் இன்று என்ன நடக்கும் என்பதை அறிய தொடர்ந்து படியுங்கள். உங்கள் ராசிக்கு என்னென்ன பலன்கள் காத்திருக்கின்றன என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

அள்ள அள்ள பணம் கிடைக்கும்.! நல்ல செய்தி காற்றில் வரும்.!
மேஷம்:
நல்லதை மட்டுமே செய்யும் மேஷ ராசி நேயர்களே, வீட்டில் உறவினர்கள் கூடும் சூழல் நிலவுகிறது. தேவையற்ற பேச்சால் பிரச்சனை ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. உங்கள் மனதில் உள்ளதை பகிர்ந்து கொள்ள சரியான நபர் கிடைப்பார். அலுவலகத்தில் வேலைப்பளு அதிகரிக்கலாம். காதல் விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், ஏமாற்றப்படும் வாய்ப்பு உள்ளது. அண்டை வீட்டாரால் தொழிலில் ஏதேனும் நன்மை கிடைக்கலாம். பாதுகாப்பு குறித்த கவலை அதிகரிக்கும். வியாபாரத்தில் சிக்கல் அதிகரிக்கலாம், கவனமாக இருங்கள். யாரையும் நம்பி ஏமாற வேண்டாம். குடும்பத்தில் அமைதி திரும்பும். நிம்மதி கிடைக்கும் நாள்.
ரிஷபம்:
எல்லோரிடமும் அன்பை பொழியும் ரிஷப ராசி நேயர்களே, தந்தைக்காக கவலை அதிகரிக்கலாம். வீட்டில் முன்பு போல் அமைதி திரும்பும். வயிற்று பிரச்சினை அதிகரிக்கலாம். நெருங்கிய உறவினர்களிடமிருந்து நல்ல செய்தி வரலாம். பொய்யான அவதூறுகள் உங்களை வாட்டி வதக்கும். இன்று ஏதேனும் சிக்கலான பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கலாம். அதிக செலவுகளால் வீட்டில் சண்டை வரலாம். நிலம் வாங்குவதிலும் விற்பதிலும் நல்ல லாபம் கிடைக்கும். வழக்குகளில் சிக்கிக் கொள்ள வாய்ப்புகள் உள்ளதால் கவனமுடன் இருப்பது நல்லது. நண்பர்கள், உறவினர்கள் உதவி செய்வர். கோவிலுக்கு சென்று வந்தால் நினைத்த காரியம் எளிதில் நிறைவேறும்.
பொன்மகள் வருவாள்.! பொருள் கோடி தருவாள்.!
மிதுனம்:
நீதியின் மக்கம் நிற்கும் மிதுன ராசி நேயர்களே, வீட்டில் உள்ளவர்கள் பற்றிய கவலை உங்களை தொற்றும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படலாம். நல்ல காரியங்களில் வெற்றி கிடைக்கும். பாக்கி பணம் கிடைக்க தாமதமாகலாம். ஆக்கப்பூர்வமான செயல்களால் முன்னேற்றம் ஏற்படும் நாள் இன்று. நண்பர்கள் மற்றும் உறவினர்களால் மன அமைதி கிடைக்கும். தொழிலில் கடன் கொடுத்தவருடன் பிரச்சினை ஏற்படலாம். தாய் தந்தையுடன் ஏதேனும் விவாதம் அதிகரிக்கலாம். உடல் உபாதைகள் அதிகரிக்கலாம். மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். உதவிகேட்டு உறவினர்கள் உங்கள் வீட்டு கதவை தட்டலாம். நண்பர்கள் நல்ல செய்தியை சொல்லுவர்.
கடகம்:
எல்லோருக்கு நல்லதை மட்டுமே செய்யும் கடக ராசி நேயர்களே, இன்று மற்றவர்களின் பொறுப்பை நீங்கள் ஏற்க வேண்டாம். நாள் முழுவதும் குடும்பத்தில் அமைதி நிலவினாலும், இரவில் சற்று அமைதியின்மை ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இன்று மனைவியை பிரிந்து இருக்கும் சூழல் ஏற்படும். சொத்துக்களை வாங்கவும் விற்கவும் நல்ல நேரம் என்பதால் அதனை பயன்படுத்தி லாபம் அடையலாம். தேவையில்லாமல் ஏதேனும் பிரச்சினையில் சிக்கி கொள்ள வாய்ப்புகள் உள்ளது. இன்று பணம் சம்பாதிப்பதற்கான அதிர்ஷ்டம் நன்றாக இருக்கும் மற்றும் நிதி நிலைமையும் மேம்படும். பழைய கடன் மற்றும் பழைய பாக்கிகளை வசூலிக்க இன்று நல்ல நாள். படிக்கட்டுகளில் ஏறும்போதும் இறங்கும்போதும் மிகவும் கவனமாக இருங்கள். வெளியூரில் தங்க நேரிடலாம். இன்று நாள் முழுவதும் வியாபாரம் நன்றாக நடக்கும், ஆனால் பின்னர் சிக்கல்கள் வரலாம். பொறுமையும் அமைதியும் நிம்மதி தரும்.
நேரம் நல்ல நேரம்.! அதிர்ஷ்டம் லட்சுமி வீடு வருவாள்.!
சிம்மம்:
தலைமை பண்புக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் சிம்ம ராசி நேயர்களே இன்று புதிய வேலை தேட வேண்டியிருக்கலாம். தாய்வழி உறவினருடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். சேமிப்பு குறைவாக இருப்பதால் மனைவியுடன் சண்டை, பிரச்சினை வரலாம். வியாபாரத்தில் மந்த நிலை ஏற்படலாம். எதிர்ப்பு மனப்பான்மையால் சமூகத்திலும் உறவினர்கள் மத்தியிலும் மரியாதை அதிகரிக்கும். ஏதேனும் சந்தேகத்தால் வீட்டில் சண்டை வரலாம். குழந்தைகளுடனான உறவு நன்றாக இருக்கும். ஏதேனும் காரணத்தால் வேலையில் நஷ்டம் ஏற்படலாம். சினிமாக்காரர்கள், பேச்சாளர்கள், நடிகர்கள், எழுத்தாளர்கள், கிரியேட்டர்கள், ரீல்ஸ் மேக்கர், ஸ்சாட்ஸ் கிரியேட்டர்கள், இலக்கியவாதிகளின் மதிப்பு உயரும்.
கன்னி:
உண்மையின் பக்கம் நிக்கும் கன்னி ராசி நேயர்களே, இன்று ஏதேனும் காரணத்தால் உங்கள் கோபம் அதிகரிக்கலாம். உடல் உபாதைகள் ஏற்பட்டு அதனால் சோர்வு வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வழக்குகளில் சிக்கிக் கொள்ள வாய்ப்புள்ளதால் கவனமாக இருங்கள். வேலைகளில் ஆர்வம் அதிகரிக்கும். தோழிகள் மற்றும் பெண்களால் ஏதேனும் நஷ்டம் ஏற்படலாம். உறவினர்கள் மற்றும் நண்பர்களால் ஏதேனும் ஆபத்திலிருந்து விடுபடலாம். காலையில் துணையுடன் சண்டை இருக்கு மாமு. பாத்து பைசல் பண்ணவும். ஜாதகம், நியுமராலஜி மற்றும் ஜோதிடத்தில் ஆர்வம் அதிகரிக்கும். நல்ல செய்தி சந்தோஷம் தரும்.!
பணம் கைகளில் புரலும்.! கடன்கள் வசூலாகும்.!
துலாம்:
நட்புக்கு மரியாதை கொடுக்கும் துலாம் ராசி நேயர்களே, இன்று பணம் சம்பாதிப்பதற்கான அதிர்ஷ்டம் நன்றாக இருக்கும் மற்றும் நிதி நிலைமையும் மேம்படும். வாகனங்களில் ஏறும்போதும் இறங்கும்போதும் மிகவும் கவனமாக இருங்கள். மற்றவர்களின் பொறுப்பை இன்று ஏற்க வேண்டாம். சொத்துக்களை வாங்கவும் விற்கவும் சரியான நேரம். நாள் முழுவதும் குடும்பத்தில் அமைதி நிலவினாலும், இரவில் சற்று பிரச்சினை ஏற்படலாம். பாக்கி பணம் வசூலிக்க இன்று நல்ல நாள். இன்று நாள் முழுவதும் தொழில் நன்றாக நடக்கும்.நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. தேவையில்லாமல் ஏதேனும் பிரச்சினையில் சிக்கிக் கொள்ளலாம். இன்று மனைவியை பிரிந்து இருக்க நேரிடலாம். அமைதியான போக்கால் சாதிக்க வேண்டிய நாள்.
விருச்சிகம்:
எப்போதும் சுறுசுறுப்புடன் காணப்படும் விருச்சிக ராசி நேயர்களே காதலரின் செயலால் குடும்பத்தில் சண்டை வரலாம். வாயுத் தொல்லையால் அவதிப்படலாம். மற்றொரு நபரால் குடும்பத்தில் சண்டை வரலாம். தொழில் மற்றும் வியாபார செலவுகள் அதிகரிக்கலாம். போட்டிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. இன்று உங்கள் செயலுக்கு குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உயர் அதிகாரிகளிடம் இருந்துபாராட்டு கிடைக்கும். நல்ல செய்தியுடன் வீட்டிற்கு விருந்தினர்கள் வரலாம். விவசாயத்தில் முன்னேற்றம் ஏற்படும் லாபம் அதிகரிக்கும். திருமண ஏற்பாடு செய்து வருவோருக்கு பணம் கைக்கு வரும். கல்யாண பேச்சுக்கள் சந்தோஷத்தில் முடியும்.
நல்ல காலம் பொறக்குது.! நல்ல நேரம் தொடங்குது.!
தனுசு:
தன்நம்பிக்கைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் தனுசு ராசி நேயர்களே, உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வழியில் வீட்டிற்கு நல்ல செய்தி வரலாம். தவறான புரிதல் காரணமாக மன வருத்தம் அதிகரிக்கலாம். பொது சேவை செய்வதால் மன அமைதி கிடைக்கும். கூட்டுத் தொழிலில் நஷ்டம் ஏற்படலாம். வயிற்றுப் பிரச்சினை ஏற்படலாம். சட்டம் சார்ந்த விஷயங்களில் உயர் அதிகாரிகளின் உதவி கிடைக்கும். இன்று தாராள மனப்பான்மை மேலோங்கும். குடும்பத்தினருடன் சேர்ந்து எதிர்காலத்தில் சுற்றுலா செல்வது குறித்து பேசலாம். நல்ல செயல்களால் புகழ் அதிகரிக்கும். தாயின் உடல்நிலை குறித்த கவலை மற்றும் செலவுகள் அதிகரிக்கும். குழந்தைகளின் நடவடிக்கையால் மனச்சோர்வு ஏற்படும். இன்று நாள் முழுவதும் ஏதேனும் செலவுகள் அதிகரிக்கலாம்.
மகரம்:
கொடுத்து கொடுத்து சிவந்த கரங்களை கொண்ட மகர ராசி நேயர்களே இன்று வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்க வாய்ப்புள்ளது. இன்று பணியிடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். காதலருடன் நேரத்தை செலவிடலாம். ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபட இன்று நல்ல நாள். வழக்குகளில் சிக்கிக் கொள்ள வாய்ப்புள்ளது. இன்று எதிர்ப்பு மனப்பான்மையை கைவிடுவது நல்லது. நெருங்கிய நபருடன் பிரச்சினை ஏற்படலாம். சிக்கல்களில் மாட்டிக் கொள்ள வாய்ப்புள்ளது. முதலீடுகள் குறித்த திட்டங்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். விவசாயிகள் விவசாயத்தை தொடங்க நல்ல நாள். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கடின உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும். விட்டுக்கொடுத்து சென்றால் இன்று அதிர்ஷ்டமான நாள்.
கருத்து வேறுபாடுகள் நீங்கும்.! எதிலும் ஜெயிப்பீர்கள்.!
கும்பம்:
அடுத்த வருக்கு உதவி செய்யும் மனப்பான்மையுடன் காணப்படும் கும்ப ராசி நேயர்களே, செலவுகளில் இன்று கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இன்று பயணம் செய்ய நல்ல நாள். துணையுடனான கருத்து வேறுபாடுகள் நீங்கும். உறவுப் பிரச்சினைகள் தீரும். முதுகு வலி ஏற்படலாம். எதிரிகளால் தொல்லைகள் வரலாம். அலுவலகத்தில் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்படலாம். உடல்நலக் குறைபாட்டிற்கு அதிக பணம் செலவழிக்க நேரிடலாம். பெற்றோரின் அறிவுரை உங்களுக்கு நன்மை செய்யும். உறவினர்கள் உதவிகேட்டு ஓடிவருவர். நெருங்கி நண்பர்களிடம் இருந்து நல்ல செய்தி தேடி வரும். ஏப்போதோ கொடுத்த பணம் கைக்கு வரும்.
மீனம்:
வள்ளல் தன்மையுடன் காணப்படும் மீன ராசி நேயர்களே, கணவன் மனைவி சண்டை விட்டு கொடுத்து செல்வதால் முடிவுக்கு வரும். உடல் மற்றும் மன ரீதியான பிரச்சனைகள் காணாமல்போகும். நிதி சிக்கல்கள் ஏற்படலாம் என்பால் சிக்கனம் தேவை. தவறான செயல்களால் மன உளைச்சல் அதிகரிக்கலாம். துணையால் செலவுகள் அதிகரிக்கலாம். வீட்டில் சுப நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் அதிகரிக்கலாம். அலுவலகத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் வரலாம். கூடுதல் தொழிலால் வருமானம் அதிகரிக்கலாம். புதிய பொறுப்புகள், புதிய பதவிகள் தேடிவரும். உங்கள் உதவியால் பலர் நன்மை அடைவர்.