MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • செப்டம்பர் 3, இன்றைய ராசி பலன்கள்: பலருக்கு பணம் கொட்டும்.! சிலருக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டும். செமத்தியான நாள்.!

செப்டம்பர் 3, இன்றைய ராசி பலன்கள்: பலருக்கு பணம் கொட்டும்.! சிலருக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டும். செமத்தியான நாள்.!

இன்றைய ராசி பலன்கள், சுய பரிசோதனை முதல் வாழ்க்கைப் பாதை மாற்றங்கள் வரை பல சுவாரஸ்யமான நிகழ்வுகளை எடுத்துரைக்கின்றன. உங்கள் ராசியின் பலன்களை அறிந்து, இன்றைய நாளை சிறப்பாகக் கையாளத் தயாராகுங்கள்.

6 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Sep 03 2025, 06:36 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112
மேஷம் (Aries) – சுய பரிசோதனை
Image Credit : Getty

மேஷம் (Aries) – சுய பரிசோதனை

இன்றைய நாள் உங்களை சற்று உள் நோக்கி இழுத்துச் செல்லக்கூடும். பழைய நினைவுகளை அசைபோடுவீர்கள். இது உங்களை சுய பரிசோதனைக்கு அழைத்து செல்லும். வேலையில் சிறு அழுத்தங்கள் இருந்தாலும், அதை கையாளும் சக்தி உங்களிடம் இருக்கிறது. இன்று உங்களுக்கு, காதல் வாழ்க்கையில் துணையுடன் நேர்மையான உரையாடல் தேவையானது.  உடல் நலத்தில் அக்கரை தேவை. நிதி முன்னேற்றம் சீராக இருக்கும்.  அதிர்ஷ்ட எண்: 9 அதிர்ஷ்ட நிறம்: செம்மஞ்சள் அதிர்ஷ்ட உடை: காட்டன் சட்டை வழிபட வேண்டிய தெய்வம்: முருகன் பரிகாரம்: காலை நேரத்தில் பால் அபிஷேகம் செய்யுங்கள்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
212
ரிஷபம் (Taurus) – உங்கள் துணிச்சலை சோதிக்கும் தருணம்
Image Credit : Getty

ரிஷபம் (Taurus) – உங்கள் துணிச்சலை சோதிக்கும் தருணம்

ரிஷப ராசி நேயர்களே, இன்று உங்கள் மனவலிமையை சோதிக்கும் நிகழ்வுகள் வரலாம். வேலையில்  சற்று எதிர்பாராத சவால்கள் வந்தாலும், அதை கையாளும் திறமை உங்களிடம் உள்ளது. உழைப்பும் உறுதியும் இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்வீர்கள். நண்பர்கள் அல்லது சக ஊழியர்களிடமிருந்து சில எதிர்ப்பு வந்தாலும் அதை தாராள மனப்பான்மையுடன் சமாளிக்கவும். குடும்பத்தில் பெரியவர்களின் ஆலோசனையை கேட்பது நல்லது. காதல்  மற்றும் இல்வாழ்க்கையில் சிறு குழப்பங்கள் இருந்தாலும் பரஸ்பர புரிதல் இருந்தால் உறவு வலுவாகும். பண விஷயங்களில் இன்று கவனமாக நடந்து கொள்ள வேண்டும். புதிய முதலீடுகளை செய்யும் முன் நன்கு யோசிக்கவும். உடல் நலம் சீராக இருக்கும், ஆனால் அதிக சோர்வைத் தவிர்க்க போதுமான ஓய்வு எடுக்கவும்.

அதிர்ஷ்ட எண்: 6 அதிர்ஷ்ட நிறம்: பச்சை அதிர்ஷ்ட உடை: பாரம்பரிய வேஷ்டி அல்லது சேலை வழிபட வேண்டிய தெய்வம்: பரமேஸ்வரன் பரிகாரம்: நந்திக்கு முன் எண்ணெய் தீபம் ஏற்றி பிரார்த்திக்கவும்.

312
மிதுனம் (Gemini) – புதுமைகள் வெளிப்படும் நாள்
Image Credit : Getty

மிதுனம் (Gemini) – புதுமைகள் வெளிப்படும் நாள்

மிதுன ராசி  நேயர்களே இன்றைய நாள் உங்களுக்கு ஆச்சரியங்களை தரக்கூடியது. பணியிடத்தில் புதிய யோசனைகள் தோன்றும். அவற்றை சரியான முறையில் செயல்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். குடும்பத்தில் நெருக்கமான உரையாடல்கள் நிகழும் இதனால் உறவுகள் வலுப்படும். காதல் மற்றும் இல் வாழ்க்கையில் துணையிடம் எதிர்பாராத ஆதரவு கிடைக்கும். நண்பர்களிடையே உங்களின் சிரிப்பு நகைச்சுவை உங்களை அனைவருக்கும் பிடித்தவராக மாற்றும். நிதி நிலை சீராக இருந்தாலும் அதிக செலவுகளை குறைக்க வேண்டிய அவசியம் உள்ளது. உடல் நலத்தில் சிறு களைப்பு இருந்தாலும் நாள் இறுதியில் மனநிம்மதி தரும்.

அதிர்ஷ்ட எண்: 5 அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட உடை: ஹாஃப்ஷர்ட் + ஜீன்ஸ் வழிபட வேண்டிய தெய்வம்: விநாயகர் பரிகாரம்: பிள்ளையாருக்கு அரிசி மாவு கொண்டு கோழுக்கட்டை சமர்ப்பிக்கவும்.

412
கடகம் (Cancer) – பாதையை மாற்றும் சிக்னல்
Image Credit : Getty

கடகம் (Cancer) – பாதையை மாற்றும் சிக்னல்

கடக ராசி நேயர்களே, இன்று வாழ்க்கை பாதையில் திடீர் திருப்பங்கள் ஏற்படலாம். சில முடிவுகள் உங்களின் அடுத்தடுத்த நாள்களை மாற்றக்கூடியதாக இருக்கும். பணியிடத்தில் மேலதிகாரிகள் சில புதுப்பணிகளை வழங்கலாம். அதை முழுமையான கவனத்துடன் செய்ய வேண்டும். குடும்பத்தில் சிறு குழப்பங்கள் இருந்தாலும் அதை அன்புடன் கையாண்டால் சந்தோஷம் கிடைக்கும். காதல் மற்றும் இல்வாழ்க்கையில் இன்று ஆழமான உரையாடல்கள் இடம்பெறும். உங்களின் உள்ளார்ந்த உணர்வுகளை வெளிப்படுத்தினால் உறவு  பலமடங்கு வலுப்படும். பண விஷயங்களில் இன்று புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நிலம் மற்றும் சொத்து தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் காணலாம். உடல் நலம் நல்ல நிலையில் இருக்கும், ஆனால் மன அழுத்தத்தை தவிர்க்க இயற்கையோடு நேரம் செலவிடவும்.

அதிர்ஷ்ட எண்: 2 அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை அதிர்ஷ்ட உடை: சீரான சட்டை வழிபட வேண்டிய தெய்வம்: தேவீ பரிகாரம்: அம்மனுக்கு எலுமிச்சை மாலை சமர்ப்பிக்கவும்.

512
சிம்மம் (Leo) – குழப்பத்தில் தெளிவு தேடும் நாள்
Image Credit : Getty

சிம்மம் (Leo) – குழப்பத்தில் தெளிவு தேடும் நாள்

சிம்ம ராசி நேயர்களே, இன்று சில பணிகள் எதிர்பாராதவிதமாக குழப்பமளிக்கலாம். ஆனால் அவசரப்படாமல், நிதானமாக சிந்தித்து நடந்தால் நல்ல தீர்வு கிடைக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களுடன் சிறு கருத்து வேறுபாடுகள் வரலாம்.அதனை சமாளிக்க பொறுமை தேவை. குடும்பத்தில் சில அன்பான நிகழ்வுகள் உங்களுக்கு மகிழ்ச்சி தரும். காதல் வாழ்க்கையில் துணையின் ஆதரவு கிடைக்கும். நிதி நிலை சாதாரணமாக இருக்கும். ஆடம்பர செலவுகளை தவிர்க்க வேண்டும். உடல் நலத்தில் சற்று களைப்பு இருந்தாலும், இன்று சிறு ஓய்வு எடுத்தால் நல்ல பலன் கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண்: 1 அதிர்ஷ்ட நிறம்: தங்க நிறம் அதிர்ஷ்ட உடை: சிவப்பு சட்டை வழிபட வேண்டிய தெய்வம்: சூரியன் பரிகாரம்: காலை சூரியனை நோக்கி நீர் அர்ப்பணிக்கவும்.

612
கன்னி (Virgo) – தைரியமான முடிவுகள் தேவைப்படும் நாள்
Image Credit : Getty

கன்னி (Virgo) – தைரியமான முடிவுகள் தேவைப்படும் நாள்

கன்னி ராசி நேயர்களே, இன்று புதிய திட்டங்கள் தோன்றும். அதை தைரியமாக கையாள வேண்டும். அலுவலகத்தில் உங்களின் திறமை வெளிப்படும். மேலதிகாரிகளின் பாராட்டை பெற வாய்ப்பு உள்ளது. ஆனால் உடனடியாக பெரிய முடிவுகளை எடுப்பதை தவிர்த்தால் நல்லது. குடும்பத்தில் சின்ன சின்ன விவாதங்கள் ஏற்பட்டாலும், அதை அமைதியாக கையாள வேண்டும். காதல் வாழ்க்கையில் நேர்மையான உரையாடல்கள் உறவை வலுப்படுத்தும். தம்பதிகள் இடையே நெருக்கம் ஏற்படும். பண விஷயங்களில் இன்று நல்ல முன்னேற்றம் உண்டு. சிறு முதலீடுகள் லாபம் தரும். உடல் நலத்தில் சிறு சோர்வு இருந்தாலும், சீரான உணவு முறையால் ஆரோக்கியம் நிலைத்து இருக்கும்.

அதிர்ஷ்ட எண்: 7 அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட உடை: ப்ளூ டி-ஷர்ட் வழிபட வேண்டிய தெய்வம்: துர்கை பரிகாரம்: துர்கை அம்மன் சந்நிதியில் எலுமிச்சை வைத்து வழிபடவும்.

712
துலாம் (Libra) – உணர்ச்சிகள் வெளிப்படும் நாள்
Image Credit : Getty

துலாம் (Libra) – உணர்ச்சிகள் வெளிப்படும் நாள்

இன்று துலாம் ராசிக்காரர்களுக்கு புதிய சிந்தனைகள் தோன்றும். பணியிடத்தில் புதிய சவால்களை எதிர்கொள்ள நேரலாம், ஆனால் அதனால் உங்களின் திறமை உங்களுக்கு உதவியாக இருக்கும். குடும்பத்தில் சிறு குழப்பங்கள் இருந்தாலும், அன்பும் புரிதலும் அதை சரி செய்யும். காதல் வாழ்க்கையில் இன்று மறைத்த உணர்வுகள் வெளிப்படும். நிதி நிலை சீராக இருக்கும், ஆனால் தேவையற்ற செலவுகளை குறைக்கவும். உடல் நலம் சிறப்பாக இருக்கும், ஆனால் மன அழுத்தத்தை குறைக்க சிறு ஓய்வு அவசியம்.

அதிர்ஷ்ட எண்: 8 அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட உடை: பிங்க் சேலை வழிபட வேண்டிய தெய்வம்: மகாலட்சுமி பரிகாரம்: லட்சுமி சக்திக்கு குங்கும அர்ச்சனை செய்யவும்.

812
விருச்சிகம்: வாக்குவாதம் வேண்டாம்
Image Credit : Getty

விருச்சிகம்: வாக்குவாதம் வேண்டாம்

விருச்சிக ராசி நேயர்களே, இன்று உங்களுக்கு நல்ல முன்னேற்றங்கள் நிறைந்த நாளாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் திறமைகள் பாராட்டப்படும். மேலதிகாரிகளின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். பணியில் எதிர்பாராத வாய்ப்புகள் உங்களை தேடி வரலாம். நிதி நிலையில் எதிர்பார்த்த பணவரவு கண்டிப்பாக உண்டு. செலவுகளைக் கட்டுப்படுத்தினால் சேமிப்பு உயரும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும்.  முக்கிய உறவினர்களின் வருகை மனதுக்கு உற்சாகம் தரும். காதல்  மற்றும் இல்வாழ்க்கையில் புரிதலுடன் செயல்பட்டால் உறவு மேலும் வலுப்பெறும்..சிறு வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். மாணவர்களுக்கு படிப்பில் கவனம் செலுத்துவது வெற்றியைத் தரும். உடல்நலத்தில் அக்கரை தேவை. உணவில் கவனம் தேவை. மனதை அமைதியாக வைத்திருக்க தியானம் அல்லது ஆன்மீகப் பயிற்சிகள் உதவும். இன்று உங்கள் நம்பிக்கையும் உறுதியும் உங்களை முன்னோக்கி அழைத்துச் செல்லும். அதிர்ஷ்ட நிறம்: கருப்பு. அதிர்ஷ்ட எண்: 8. பரிகாரம்: பசுக்களுக்கு பச்சைத் தீவனம் வழங்குவது குடும்ப இணைப்பை வலுப்படுத்தும்.

912
தனுசு: உற்சாகமும் நம்பிக்கையும் நிறைந்த நாள்
Image Credit : Getty

தனுசு: உற்சாகமும் நம்பிக்கையும் நிறைந்த நாள்

தனுசு ராசி நேயர்களே, இன்று உங்களுக்கு உற்சாகமும் நம்பிக்கையும் நிறைந்த நாளாக இருக்கும்.  பணியிடத்தில் உங்கள் முயற்சிகள் பலன் தரும். புதிய பொறுப்புகள் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. மேலதிகாரிகளுடன் நடைபெறும்  பேச்சுவார்த்தைகளில் வெற்றி உண்டு. நிதி விஷயங்களில், எதிர்பாராத வருமானம் கிடைக்கும். ஆனால், தேவையற்ற செலவுகளைத் தவிர்க்கவும். குடும்பத்தில் அன்பும் ஒற்றுமையும் நிலவும். பெற்றோரின் ஆலோசனைகள் பயனுள்ளதாக இருக்கும். காதல் மற்றும் இல்வாழ்க்கையில், உங்கள் நேர்மையான அணுகுமுறை உறவை பலப்படுத்தும். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காண கவனத்தை அதிகரிக்க வேண்டும். உடல்நலத்தில், மன அழுத்தத்தைக் குறைக்க லேசான உடற்பயிற்சி அவசியம். வியாபாரத்தில், புதிய திட்டங்களை தொடங்குவதற்கு முன் ஆராய்ச்சி செய்யவும். ஆன்மிக ஈடுபாடு மன அமைதியைத் தரும். இன்று உங்கள் நம்பிக்கையும் தைரியமும் உங்களை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்லும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள். அதிர்ஷ்ட எண்: 3. பரிகாரம்: விஷ்ணு கோயிலில் வழிபாடு செய்வது மனதுக்கு அமைதி தரும்.

1012
மகரம்: கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும்
Image Credit : Getty

மகரம்: கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும்

மகர ராசி நேயர்களே, இன்று உங்கள் கடின உழைப்புக்கு பலன் கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் திட்டமிடல் பாராட்டப்படும். புதிய வாய்ப்புகள் தேடி வரலாம். நிதி விஷயங்களில், எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். புத்திசாலித்தனமான முதலீடுகள் லாபம் தரும். குடும்பத்தில் சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும், பொறுமையுடன் பேசி தீர்ப்பது நல்லது. காதல் மற்றும் இல்வாழ்க்கையில், உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவது உறவை மேம்படுத்தும். மாணவர்கள் கவனம் செலுத்தினால், படிப்பில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். உடல்நலத்தில், மன அழுத்தத்தை குறைக்க தியானம் அல்லது யோகா பயனுள்ளதாக இருக்கும். வியாபாரத்தில், புதிய கூட்டணிகளை பரிசீலிக்கும் முன் ஆலோசனை பெறவும். உங்கள் உறுதியும் தன்னம்பிக்கையும் இன்று உங்களை முன்னேற்ற் பாதையில் அழைத்து செல்லும். அதிர்ஷ்ட நிறம்: நீலம். அதிர்ஷ்ட எண்: 4. பரிகாரம்: சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றுவது மன அமைதியையும் வெற்றியையும் தரும்.

1112
கும்பம்: உற்சாகமும் நிறைந்த நாள்
Image Credit : stockPhoto

கும்பம்: உற்சாகமும் நிறைந்த நாள்

கும்ப ராசி நேயர்களே, இன்று உங்களுக்கு புதிய யோசனைகளும் உற்சாகமும் நிறைந்த நாளாக இருக்கும். வேலைத் தளத்தில் உங்கள் புதுமையான அணுகுமுறை பாராட்டப்படும்.பண விஷயங்களில், எதிர்பாராத வருமானம் மகிழ்ச்சி தரலாம். தேவையற்ற செலவுகளை் தவிர்க்கவும். குடும்பத்தில் அன்பும் ஒற்றுமையும் அதிகரிக்கும். நண்பர்களின் ஆதரவு மனதுக்கு உற்சாகம் தரும். காதல் மற்ளும் இல்வாழ்க்கையில் பாசமான உரையாடல்கள் உறவை ஆழப்படுத்தும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தினால், நல்ல முன்னேற்றம் காணலாம். உடல்நலத்தில் மன அழுத்தத்தைக் குறைக்க லேசான உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி பயனளிக்கும். ஆன்மீகப் பயிற்சிகள் மன அமைதியைத் தரும். இன்று உங்கள் தனித்துவமும் தைரியமும் உங்களை முன்னோக்கி நகர்த்தும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை. அதிர்ஷ்ட எண்: 7. பரிகாரம்: ஏழைகளுக்கு உணவு வழங்குவது நல்ல பலன்களைத் தரும்.

1212
மீனம்: வெற்றிப்பாதை
Image Credit : Getty

மீனம்: வெற்றிப்பாதை

மீன ராசி நேயர்களே, இன்று உங்கள் உள்ளுணர்வும் படைப்பாற்றலும் மிளிரும். பணியிடத்தில் உங்கள் புதுமையான யோசனைகள் பாராட்டப்படும். புதிய திட்டங்களில் முன்னேற்றம் காணலாம். நிதி விஷயங்களில் பணவரவு திருப்தி தரும். முதலீடுகளில் எச்சரிக்கையாக இருக்கவும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். அன்புக்குரியவர்களுடன் நேரம் செலவிடுவது மனதுக்கு ஆறுதல் தரும். காதல் மற்றும் இல்வாழ்க்கையில் உணர்வுப்பூர்வமான உரையாடல்கள் உறவை வலுப்படுத்தும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தினால், நல்ல முடிவுகள் கிடைக்கும். உடல்நலத்தில் மன அழுத்தத்தைக் குறைக்க தியானம் அல்லது இசை உதவும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்த முன் ஆலோசனை பெறவும். ஆன்மீகத்தில் ஈடுபாடு மன அமைதியை மேம்படுத்தும். இன்று உங்கள் கனிவும் உறுதியும் உங்களை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்லும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை. அதிர்ஷ்ட எண்: 6. பரிகாரம்: கோயிலில் மீன் வடிவ தீபம் ஏற்றுவது மனதுக்கு அமைதி தரும்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
ஜோதிடம்
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ராசி பலன்
ஏசியாநெட் நியூஸ்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Rahu Ketu Transit : சர்ப்பக் கிரக பெயர்ச்சி..ராகு-கேது மாற்றத்தால் வாழ்க்கையில் திடீர் திருப்பம் காணப்போகும் 12 ராசிகள்!
Recommended image2
Guru Chandal Yoga : குரு – கேது சேர்க்கையால் உருவாகும் குரு சண்டாள யோகம்... 12 ராசிகளுக்கும் காத்திருக்கும் அதிரடி பலன்கள்!
Recommended image3
Tri-Kona Rajayoga : அரசு வேலை, வெளிநாடு செல்லும் வாய்ப்பை வழங்கும் திரிகோண யோகம்! அந்த 4 அதிர்ஷ்ட ராசிகள் எவை?
Related Stories
Recommended image1
கடகத்தில் சுக்கிரன்: 2 ராசிகளுக்கு விரைவில் டும் டும் டும்.! 2 ராசிகளுக்கு லவ் மேட்டர் சக்சஸ்.! 5 ராசிகளுக்கு அட்டகாச பலன்.!
Recommended image2
Astrology: பின்னோக்கி நகரும் சனி பகவான்.! பட்ட மரங்கள் கூட மீண்டும் துளிரும்.! தடைபட்ட காரியங்கள் அனைத்தும் சுபமாகும்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved