Astrology அக்டோபர் 06: இன்றைய ராசி பலன்கள்! அதிர்ஷ்டம் யாருக்கு? எச்சரிக்கை யாருக்கு?
இன்றைய தினசரி ராசி பலன், 12 ராசிகளான மேஷம் முதல் மீனம் வரை அனைவருக்குமான முழுமையான கணிப்புகளை வழங்குகிறது. தொழில், நிதிநிலை, குடும்ப வாழ்க்கை, ஆரோக்கியம் குறித்த பலன்களுடன் அதிர்ஷ்ட நிறம், எண் மற்றும் பரிகாரங்களையும் தெரிந்துகொள்ளுங்கள்.

மேஷம் (Aries) - சந்தோஷம் பொங்கி வழியும் நாள் இன்று
மேஷ ராசி நேயர்களே இன்று உங்களின் ஆற்றலும், உற்சாகமும் அதிகரிக்கும் நாள். தொழிலில் புதிய வாய்ப்புகள் வரும். உங்களின் கடின உழைப்புக்கு மதிப்பு கிடைக்கும். நண்பர்கள் உதவியுடன் சில பிரச்சினைகள் தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நீண்ட நாட்களாக திட்டமிட்டு தேங்கி கிடந்த காரியத்தை இன்று முடிப்பீர்கள். பண வரவு திருப்தி தரும். தம்திகள் இடையே நிலவி வந்த பிணக்குகள் காணாமல் போகும். சந்தோஷம் பொங்கி வழியும் நாள் இன்று.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அதிர்ஷ்ட எண்: 9, சிறந்த முதலீடு: பங்குச் சந்தை குறுகியகாலம், பரிகாரம்: சிவபெருமானை வழிபடுங்கள்.
ரிஷபம் - குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்
இன்று ரிஷப ராசி நேயர்ளுக்கு சுய முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கைகூடும். பணியில் உங்களின் யோசனைகள் மேல் அதிகாரிகளின் பாராட்டைப் பெறும். மேல் அதிகாரிகள் உங்களை நம்பிக்கையுடன் பார்ப்பார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய முதலீடுகள் கைகொடுக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். பணவரவு சீராக இருக்கும். பயணம் செல்லும் அவசியம் ஏற்படும். மாணவர்களுக்கு இன்று கல்வியில் நல்ல முன்னேற்றம் காணப்படும். காதலில் புரிதல் தேவை. உடல்நலத்தில் சிறு தலைவலி, உடல் வலி தோன்றலாம்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, அதிர்ஷ்ட எண்: 6, சிறந்த முதலீடு: நிலம் தொடர்பானது, பரிகாரம்: லட்சுமி அம்பாளை பூஜியுங்கள்.
மிதுனம் - உழைப்புக்கு மதிப்பு கிடைக்கும்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று கலவையான பலன்கள். தொழிலில் உழைப்புக்கு மதிப்பு கிடைக்கும். ஆனால் சற்று தாமதங்களும் இருக்கும். வியாபாரத்தில் நிதி குறைவால் சிக்கல் தோன்றலாம், ஆனால் நண்பர்களின் உதவி கிடைக்கும். குடும்பத்தில் மூத்தோர் ஆலோசனையை கேட்டு செயல்பட்டால் நல்ல பலன் உண்டு. இன்று பணவரவு அதிகம் வராது, ஆனால் செலவு குறைய வாய்ப்பு உள்ளது. காதல் வாழ்க்கையில் சந்தேகங்களை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் செரிமான கோளாறுகள் இருக்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், அதிர்ஷ்ட எண்: 5 ,சிறந்த முதலீடு: கல்வி/அறிவு சார்ந்தது, பரிகாரம்: விநாயகர் வழிபாடு செய்யுங்கள்.
கடகம் - பழைய கடன்கள் வசூலாகும்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று நிதி நிலை மேம்படும் நாள். தொழிலில் எதிர்பார்த்த பதவி உயர்வு வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் பழைய கடன்கள் வசூலாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நீண்டகால பிரச்சினைகள் தீர்வு காணும். இன்று உங்கள் சொற்பொழிவு திறன் பிறரை கவரும். பணவரவு மேம்படும். மாணவர்கள் உழைப்பால் வெற்றி பெறுவார்கள். காதலில் மகிழ்ச்சியான தருணங்கள் வரும். உடல் நலம் சீராக இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றியாகும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை ,அதிர்ஷ்ட எண்: 2 ,சிறந்த முதலீடு: நிலையான வைப்பு நிதி, பரிகாரம்: அம்பாளை வணங்குங்கள்.
சிம்மம் - சோதனை நிறைந்த நாள்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று சோதனை நிறைந்த நாள். தொழிலில் எதிர்பாராத சிக்கல்கள் தோன்றலாம். பொறுமையுடன் நடந்தால் சாதகமாக மாறும். வியாபாரத்தில் போட்டியாளர்கள் சவால் விடுவார்கள், ஆனால் இறுதியில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் சிறு முரண்பாடுகள் இருக்கலாம். பணவரவு குறைவாக இருக்கும், செலவு அதிகரிக்கும். காதலில் மனமுடைவு ஏற்படலாம், எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுங்கள். உடல் நலத்தில் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு ,அதிர்ஷ்ட எண்: 1, சிறந்த முதலீடு: தங்கம், பரிகாரம்: சூரிய நமஸ்காரம் செய்யுங்கள்.
கன்னி - பணவரவு சீராக இருக்கும்
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் காணும் நாள். தொழிலில் புதிய வாய்ப்புகள் கைகூடும். மேல் அதிகாரிகள் உங்களுக்கு முக்கிய பொறுப்புகள் கொடுப்பார்கள். வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பணவரவு சீராக இருக்கும். மாணவர்களுக்கு போட்டித் தேர்வுகளில் சாதகமான பலன் உண்டு. காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறிய சோர்வு தவிர பெரிய பிரச்சினை இல்லை. வெளிநாட்டு தொடர்புகள் உங்களுக்கு ஆதாயம் தரும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், அதிர்ஷ்ட எண்: 7, சிறந்த முதலீடு: பங்கு/மியூச்சுவல் ஃபண்ட், பரிகாரம்: பேரருளாளன் பெருமாள் வழிபாடு.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். தொழிலில் மேம்பாடு ஏற்படும். புதிய திட்டங்கள் வெற்றி பெறும். வியாபாரத்தில் நல்ல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும். பணவரவு அதிகரிக்கும். மாணவர்கள் தங்கள் இலக்கை எளிதாக அடைவார்கள். காதலில் மனம் நிறைந்த தருணங்கள். உடல்நலம் சிறப்பாக இருக்கும். நண்பர்களின் உதவியால் பெரிய சாதனை கைகூடும்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, அதிர்ஷ்ட எண்: 3, சிறந்த முதலீடு: வீடு வாங்குதல், பரிகாரம்: ஸ்ரீ கிருஷ்ணரை வழிபடுங்கள்.
விருச்சிகம் - சவால்களுடன் கூடிய நாள்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று சவால்களுடன் கூடிய நாள். தொழிலில் அழுத்தம் அதிகரிக்கும். பொறுமை தேவை. வியாபாரத்தில் சின்ன நஷ்டம் வரலாம். குடும்பத்தில் தவறான புரிதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பணவரவு சீராக இருக்காது. காதலில் தவறான வார்த்தைகளை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் சற்றே சிக்கல் ஏற்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: கருப்பு அதிர்ஷ்ட எண்: 8 சிறந்த முதலீடு: காப்பீடு பரிகாரம்: கார்த்திகை தீபம் ஏற்றி முருகனை வழிபடுங்கள்.
தனுசு - இன்று அதிர்ஷ்டம் கூடும் நாள்
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் கூடும் நாள். தொழிலில் உயர்வுக்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி சூழல் உருவாகும். பணவரவு கண்டிப்பாக அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி கிடைக்கும். காதலில் நல்ல புரிதல் ஏற்படும். உடல்நலம் மேம்படும். வெளிநாட்டு பயணம் சாத்தியம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 4 சிறந்த முதலீடு: பங்கு சந்தை பரிகாரம்: வியாழக் குருவை வழிபடுங்கள்.
மகரம் - இன்று முயற்சிகள் பலிக்கும் நாள்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று முயற்சிகள் பலிக்கும் நாள். தொழிலில் பாராட்டுகள் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபத்தை எதிர்பார்க்கலாம். குடும்பத்தில் அன்பும் ஒற்றுமையும் அதிகரிக்கும். பணவரவு மேம்படும். மாணவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். காதலில் உறுதியான முன்னேற்றம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் நல்ல நிலையில் இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு ,அதிர்ஷ்ட எண்: 10 ,சிறந்த முதலீடு: நிலம், பரிகாரம்: அஞ்சநேயரை வழிபடுங்கள்.
கும்பம் - காதலில் புரிதல் தேவை
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று பயணங்களும் அலைச்சலும் அதிகமாக இருக்கும். தொழிலில் புதிய சவால்கள் காத்திருக்கிறது. வியாபாரத்தில் லாபம் சீராக இருக்கும். குடும்பத்தில் அன்பும் ஆதரவும் கிடைக்கும். பணவரவு அதிகம் வராது. மாணவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். காதலில் புரிதல் தேவை. உடல்நலம் சீராக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஊதா அதிர்ஷ்ட எண்: 11 சிறந்த முதலீடு: கல்வி தொடர்பானது பரிகாரம்: சனீஸ்வரரை வழிபடுங்கள்.
மீனம் - இன்று அதிர்ஷ்டமான நாள்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டமான நாள். தொழிலில் முன்னேற்றம் காணப்படும். வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பணவரவு பல மடங்க அதிகரிக்கும். காதலில் மகிழ்ச்சி நிலைக்கும். உடல்நலம் ஆரோக்கியமாக இருக்கும். இன்று நீங்கள் எடுத்த முடிவுகள் அனைத்தும் வெற்றி பெறும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், அதிர்ஷ்ட எண்: 12, சிறந்த முதலீடு: தங்கம், பரிகாரம்: குருவைப் பூஜியுங்கள்.