12 ராசிகளின் ரகசியம்: இன்றைய நாள் யாருக்கு அதிர்ஷ்டம்?!
இன்றைய ராசி பலன் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கும் விரிவான கணிப்புகளை வழங்குகிறது. உங்கள் ராசிக்கான இன்றைய வழிகாட்டுதலை அறிந்து, நாளை சிறப்பாக திட்டமிடுங்கள்.

மேஷம்
மேஷ ராசி நேயர்களே, இன்று உங்களுக்குப் புதிய திட்டங்கள் நிறைவேறும் நாள். பணி மற்றும் அலுவலகத்தில் உழைப்பும் உற்சாகமும் பாராட்டப்படலாம். கடந்த சில வாரங்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும் வாய்ப்புகள் உண்டு. தொழிலில் மேம்பாடு இருக்கும். குடும்பத்தினர் உடனான ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். தம்பதிகள் இடையே இணக்கம் இருக்கும். சுகாதாரத்தில் சிறிய இடையூறு தோன்றலாம். உடல் நலத்தில் அக்கரை தேவை. நண்பர்களிடம் இருந்து ஒரு சப்போர்ட் கிடைக்கும். மாலை நேரம் சந்தோஷ செய்தி வந்து சேரும். இன்று சில விஷயங்கள் தைரியமாக முடிவெடுப்பது நல்ல பலன் தரும். மஞ்சள் நிறம் அதிர்ஷ்ட்டத்தை கொடுக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசி நேயர்களே, இன்று பொறுமையுடன் கையாள வேண்டிய நாள். வேலையில் சில தாமதங்கள் இருந்தாலும், பொறுமை வெற்றி தரும். குடும்பச் செலவுகள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. தேவையற்ற செலவுகளை குறைப்பது நல்லது. சேமிப்பில் கவனம் செலுத்த வேண்டும். உறவினர்களிடமிருந்து சிறிய மனக்கசப்புகள் ஏற்படலாம். வீட்டுக்கொடுத்து சென்றால் வெற்றி உங்களுக்கே. பிற்பகலில் நல்ல செய்தி உங்களை வந்து சேரும். கடனை திருப்பிச் செலுத்தல் போன்ற நிதி விஷயங்களில் தெளிவாக இருப்பது நல்லது.
மிதுனம்
மிதுன ராசி நேயர்களே, இன்றைய நாள் புத்திசாலித்தனமான முடிவுகளை எடுக்க ஏற்ற நாள். வியாபாரம் மற்றும் தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றம் காணப்படும். உங்கள் திறமைக்கு மரியாதை கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.சிறிய விருந்துகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. பால்ய நண்பர்களுடன் பழைய நினைவுகள் மீண்டும் உயிர்ப்பிக்கும். திடீர் பணவரவு நல்ல நிலைத்தன்மையுடன் இருக்கும். மாலை நேரத்தில் அன்னதானம் செய்வது மன அமைதியை அளிக்கும். நீல நிறம் அதிர்ஷ்டத்தை தரும்.
கடகம்
கடக ராசி நேயர்களே, இன்று மன அமைதியும் குடும்ப ஒற்றுமையும் உச்சத்தில் இருக்கும். நீண்ட நாட்களாக செயல்படுத்த நினைத்த ஒரு திட்டம் வெற்றிகரமாக நிறைவேறும். அலுவலகத்தில் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். சிலருக்கு பணியிட மாற்றம் அல்லது பதவி உயர்வு வாய்ப்பு உண்டு. எதிரிகளை சமாளிக்கும் திறன் அதிகரிக்கும். உடல்நிலை சீராக இருக்கும். பூஜை, கோவில் தரிசனம் போன்றவை நன்மை தரும். பால் நிறம் அல்லது வெள்ளை ஆடை உங்களுக்கு நன்மை வழங்கும்.
சிம்மம்
சிம்ம ராசி நேயர்களே, இன்று தைரியமும் தீர்மானமும் உங்களை வெற்றி பாதைக்கு கொண்டு செல்லும். புதிய தொடர்புகள் வருமான உயர்வுக்குக் காரணமாகலாம். தொழில் மற்றும் வணிகத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உறவினர்கள், நண்பர்கள் ஆதரவைப் பெறுவீர்கள். குடும்பத்தில் சிறிய சிரமங்கள் இருந்தாலும் அவை தீர்ந்துவிடும். மாணவர்களுக்கு சாதகமான நாள். உங்களின் கடனி உழைப்புக்கு திருப்தியான பலன் கிடைக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் மனநிம்மதி திடைக்கும்.தங்க நிறம் அல்லது ஆரஞ்சு நிறம் நன்மை தரும்.
கன்னி
கன்னி ராசி நேயர்களே, இன்று உங்களுக்கு சந்தோஷமும் நிம்மதியும் கிடைக்கும். பழைய திட்டங்களில் திருத்தம் கொண்டுவரலாம். பணியில் மேலாளர் தரப்பில் பாராட்டு கிடைக்கும். வீட்டில் அமைதியும் சந்தோஷமும் நிலைக்கும். வாக்குவாதங்களில் ஈடுபடாமல் இருப்பது பிரசனைகள் வராமல் காப்பாற்றும். நிதி நிலை சாகமாக இருக்கும். தேவையற்ற செலவுகளை தவிர்ப்பதுநல்லது. உடல் நலத்தில் அலட்சியம் வேண்டாம். பச்சை நிற ஆடை உங்களை புன்னகையுடன் வைத்திருக்க உதவி செய்யும்.
துலாம்
துலாம் ராசி நேயர்களே, இன்று உங்களுக்கு வேலைபளு அதிகமாக இருந்தாலும் மன உற்சாகம் அதிகரிக்கும் . குடும்பத்தில் சிறிய புரிதல் குறை ஏற்பட்டாலும் பிற்பகலில் அது சரியாகும். பணியிடத்தில் சிறந்த மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. வெளிநாட்டு தொடர்புகளால் நன்மை உண்டு. உடல்நலம் சீராக இருக்கும். மாலை நேரம் பாசமான நிமிடங்களால் முழுமை அடையும். நீல நிறம் அதிர்ஷ்டம் தரும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நேயர்களே, இன்று தன்னம்பிக்கை நிறைந்த நாள். புதிய ஆர்வங்கள் உங்களுக்கு தோன்றும். வணிகத்தில் பழைய வாடிக்கையாளர்கள் மீண்டும் தொடர்பு கொள்வர். எதிர்பாராத இடத்தில் பணவரவு ஏற்படும். உடல் நலத்தில் சிறிய ஓய்வும் கவனமும் தேவை. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கும். சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். செம்மஞ்சள் நிறம் நன்மை தரும்.
தனுசு
தனுசு ராசி நேயர்களே, இன்று சந்திரன் உங்களின் ராசியில் இருப்பதால் இன்று புது துவக்கங்களுக்குச் சிறந்த நாள். அரசு தொடர்பான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வெளிநாட்டு வாய்ப்புகள் தோன்றும். குடும்ப சுகமும் பொருளாதாரமாகவும் மேம்பாடு அடையும். மன அமைதியுடன் செய்யும் காரியங்கள் நன்மை தரும். மஞ்சள் மற்றும் வெள்ளை நிறங்கள் நிச்சய அதிர்ஷ்டம் தரும்.
மகரம்
மகரம் ராசி நேயர்களே, இன்றைய நாள் பொறுமை தேவைப்படும் நாள். வேலையில் தாமதங்கள் மற்றும் சிக்கல்கள் வரும். பணவரவு எதிர்பார்த்ததை விட குறைவாக இருக்கும். மன அமைதி தக்கவைக்க கோவில் தரிசனம் நன்மை. நண்பர்களின் ஆலோசனைகள் பயன் தரும். இயற்கை சுற்றுலா மனம் புத்துணர்வூட்டும். நீல அல்லது சாம்பல் நிறம் உங்களுக்கு நன்மை அளிக்கும்.
கும்பம்
கும்பராசி நேயர்களே, இன்று பழைய முயற்சிகளுக்கு எதிர்பாராத நல்ல முடிவு கிடைக்கும். வேலைவாய்ப்பில் பதவி உயர்வு வரும் வாய்ப்பு. வீட்டில் சந்தோஷ நிகழ்வுகள் நடக்கும். வணிகத்தில் விரிவாக்கத்திற்கு புது யோசனைகள் தோன்றும். உடல் ஆரோக்கியம் மேம்படும். நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவது மனநிம்மதி அளிக்கும். நீல நிற உடை நன்மை தரும்.
மீனம்
மீன ராசி நேயர்களே, இன்று பணியிடத்தில் உழைப்பும் தீர்மானமும் சிறந்த பலன்களைத் தரும். புதிய திட்டங்களில் வெற்றி கிடைக்கும். மனைவி, கணவர் இடையேயான புரிதல் மேன்மை அடையும். பணவரவு திடீர் உயர்வு காணும். சிலருக்கு நீண்ட தூரப்பயணம் ஏற்படலாம். உறவினர்களுடன் நெருக்கம் கூடும். பச்சை நிறம் உங்களுக்கு நிம்மதியும் அதிர்ஷ்டமும் தரும்.