ஜூன் 23, இன்றைய ராசி பலன்கள் : யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம் கிடைக்க போகுது தெரியுமா?!
இன்றைய ராசி பலனில் மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்கும் வெற்றிகள், சவால்கள், மற்றும் வழிகாட்டுதல்கள் காத்திருக்கின்றன. குடும்பம், தொழில், நிதி மற்றும் பரிகாரங்கள் பற்றிய முக்கிய தகவல்களை இங்கே காணலாம்.

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை 1)
மென்மையான மனநிலை கொண்ட மேஷ ராசி நேயர்களே, இன்று உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். சில வேலைகள் தாமதமாகினும் முடிவில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் நிம்மதி நிலவும் சந்தோஷ நிகழ்வுகள் நடைபெறும். உறவினர்கள், நண்பர்களின் வருகை மகிழ்ச்சி அளிக்கும். மற்றவர்களின் ஆலோசனைகளை கவனமாக ஏற்கவும்.
பரிகாரம்: சிவபெருமானை பசு பால் கொண்டு அபிஷேகம் செய்யுங்கள்.
வழிபாட்டு தெய்வம்: லிங்கேஸ்வரர்
முதலீட்டு ஆலோசனை: புதிய முதலீடுகளை இன்று துவங்க வேண்டாம். சேமிப்பு முக்கியம்.
ரிஷபம் (கார்த்திகை 2,3,4, ரோகிணி, மிருகசீரிடம் 1,2)
நல்லதை மட்டும் செ்யும் மனநிலை கொண்ட ரிஷப ராசி நேயர்களே இன்று உங்களுக்கு குடும்பத்துடன் நேரம் செலவிட சந்தர்ப்பம் ஏற்படும். மனம் களிக்கும் செய்தி வரும், அது உங்களை மகிழ்ச்சி கடலில் தள்ளும். பள்ளி தோழர்கள் மற்றும் கல்லூரி நண்பர்களிடமிருந்து உதவிகள் கிடைக்கும்.
பரிகாரம்: விஷ்ணு ஸஹஸ்ரநாமம் பாராயணம் செய்க.
வழிபாட்டு தெய்வம்: வெண்ணெய் கிருஷ்ணர்
முதலீட்டு ஆலோசனை: நிலத்தில் முதலீடு நன்மை தரும்.
மிதுனம் (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3)
சொல்வதை செயலில் காட்டும் மிதுனராசி நேயர்களுக்கு இன்று திடீர் செலவுகள் ஏற்படலாம். மனதில் நெருக்கடி தோன்றும் என்பதால் ஆலயங்களுக்கு சென்று வரலாம். நிறைய புத்தகங்களை படிக்கலாம். பிரச்சினைகளுக்கு நண்பர்கள் வழியாக தீர்வுகள் கிடைக்கும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.
பரிகாரம்: வனதுர்க்கையை வணங்கி நிவாரணம் பெறலாம்.
வழிபாட்டு தெய்வம்: துர்கை
முதலீட்டு ஆலோசனை: நிலையான சேமிப்புக்கு சிறிய முதலீடு நல்லது.
கடகம் (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்)
கேட்பவர்களுக்கு மட்டுமல்லாமல் கேட்காதவர்களுக்கும் உதவி செய்யும் மனப்பான்மை கொண்ட கடக ராசி நேயர்களே, உங்களுக்கு முன்னேற்றத்துக்கான துவக்கம் இன்று நடக்கும். குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் நிலைபெற விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. வெளியூர் பயணங்கள் தவிர்க்கலாம்.
பரிகாரம்: சந்திரனை நோக்கி தயிர் நிவேதனம் செய்யவும்.
வழிபாட்டு தெய்வம்: சந்திர பகவான்
முதலீட்டு ஆலோசனை: புதிய முதலீடுகளை தவிர்க்கவும்.
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1)
எல்லோரையும் வழிநடத்து்ம குணம் கொண்ட சிம்ம ராசி நேயர்களே முன்னேற்றத்துக்கான வாய்ப்புகள் வரும். எதிர்ப்புகள் இருந்தாலும் உங்கள் முடிவுகள் பலனளிக்கும். நண்பர்களின் ஆலோசனை உங்களுக்கு பயனளிக்கும்.
பரிகாரம்: விநாயகருக்கு அர்ச்சனை செய்யுங்கள்.
வழிபாட்டு தெய்வம்: விநாயகர்
முதலீட்டு ஆலோசனை: கடனில் முதலீடு வேண்டாம்.
கன்னி (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2)
உண்மைக்கு மட்டும் மதிப்பளிக்கும் கன்னிராசி நேயர்களே இன்று சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உங்கள் முயற்சிகள் நல்ல பலனளிக்கும். இன்று புதிய வாய்ப்புகள் வரும் என்பதால் அதனை நன்கு பயன்படுத்திக்கொள்ளலாம். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். புதிதாக தொழில் தொடங்கலாம். உதவி கேட்பவர்களுக்கு உதவி செய்வது பல்வேறு பிரச்சினைகளில் இருந்து உங்களை விடுவிக்கும்.
பரிகாரம்: நவகிரக சாந்தி ஜபம் செய்தல் நல்லது.
வழிபாட்டு தெய்வம்: நவகிரகங்கள்
முதலீட்டு ஆலோசனை: திட்டமிட்டு முதலீடு செய்யும் நாள்.
துலாம் (சித்திரை 3,4, ஸ்வாதி, விசாகம் 1,2,3)
எல்லோரையும் சரிசமமாக மதிக்கும் குணம் கொண்ட துலாம் ராசி நேயர்களே, இன்று உங்களு்ககு சுக்கிரதிசை தான், பணவசதி அதிகரிக்கும். புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். எதிர்பார்த்த நல்ல தகவல் உங்களுக்கு வரும். நெருங்கிய உறவுகளில் நம்பிக்கை நிலவும்.
பரிகாரம்: முருகனை ஆறுமுகமாக வணங்குங்கள்.
வழிபாட்டு தெய்வம்: சுப்பிரமணிய சுவாமி
முதலீட்டு ஆலோசனை: பங்கு சந்தையில் சிறு அளவில் முதலீடு செய்யலாம்.
விருச்சிகம் (விசாகம் 4, அனுஷம், கேட்டை)
கடின உழைப்பை மட்டுமே நம்பும் விருட்சிக ராசி நேயர்களே, சிறிய சிக்கல்கள் வந்தாலும் சகிப்புடன் இருப்பதால் அது நீங்கும். வேலைகளில் கவனம் தேவை. கையிருப்பு குறையும். செலவுகளை குறைத்து சேமிப்பு செய்ய முயற்சிக்கலாம்
பரிகாரம்: நரசிம்மரை வணங்கவும்.
வழிபாட்டு தெய்வம்: நரசிம்மர்
முதலீட்டு ஆலோசனை: பங்கு முதலீடு தவிர்க்கவும்.
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1)
நியாயத்தை தட்டிக் கேட்கும் குணம் கொண்ட தனுசு ராசி நேயர்களே இன்று உங்களின் செல்வாக்கு அதிகரிக்கும் .மனதிற்கு பிடித்த நல்ல சம்பவங்கள் நடக்கும்.பணம் மேற்கொள்ள சந்தர்ப்பம் வரும் அதனால் உங்களுக்கு நன்மை கிடைக்கும்.
பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வணங்குங்கள்.
வழிபாட்டு தெய்வம்: தட்சிணாமூர்த்தி
முதலீட்டு ஆலோசனை: தனிநபர் முதலீடுகள் ஆரம்பிக்க நல்ல நாள்.
மகரம் (உத்திராடம் 2,3,4, திராடி, அவிட்டம் 1,2)
எல்லோரையும் இன்முகத்துடன் வரவேற்கும் மகர ராசி நேயர்களே இன்று உங்கள் வாழ்க்கையில் புதிய கதவு திறக்கும். சகோதர சகோதரி உறவுகளால் நன்மை கிடைக்கும். ஆலுவலக பணிகளில் நெருக்கடி இருக்காது.
பரிகாரம்: ஹனுமனை வணங்குங்கள்.
வழிபாட்டு தெய்வம்: ஆஞ்சநேயர்
முதலீட்டு ஆலோசனை: வீடு/நிலத்தில் முதலீடு செய்ய நல்ல நாள்.
கும்பம் (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3)
அன்பை விதைத்து அன்பை அறுவடை செய்யும் கும்ப ராசி நேயர்களே இன்று உற்சாகம் உங்களை சுற்றிக் கொள்ளும். தொழில் வளர்ச்சி கூடும். வருமானம் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்களால் நன்மை கிடைக்கும்.
பரிகாரம்: சணீஸ்வரருக்கு எண்ணெய் அபிஷேகம்.
வழிபாட்டு தெய்வம்: சணீஸ்வரர்
முதலீட்டு ஆலோசனை: நிதி திட்டங்களில் முதலீடு நல்லது.
மீனம் (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி)
சொற்களில் இனிமை இருக்கும் என்பதால் நீங்கள், உங்கள் ஆலோசனைகள் மூலம் மற்றவர்களுக்கு உதவி செய்ய முடியும். சமூக பணிகளில் பங்கேற்ற உகந்த நாள் என்பதால், அரசியல் வாதிகள் ஆதாயம் அடையலாம். பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு சாதகமான நாள்.
பரிகாரம்: குருபகவானுக்கு பூஜை செய்தல்.
வழிபாட்டு தெய்வம்: தட்சிணாமூர்த்தி
முதலீட்டு ஆலோசனை: பி.பி.எஃப், எஃப்.டி போன்ற பாதுகாப்பான சேமிப்புகள் சிறந்தவை.