MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • "Daily Horoscope" ஜூன் 20, ராசி பலன்கள் : அட இந்த ராசிகள் இன்று உஷாராக இருக்கணும்.!

"Daily Horoscope" ஜூன் 20, ராசி பலன்கள் : அட இந்த ராசிகள் இன்று உஷாராக இருக்கணும்.!

இன்றைய ராசி பலன்கள் உங்களுக்கு உற்சாகத்தையும், முன்னேற்றத்தையும், அமைதியையும் தரும். தொழில், குடும்பம், செல்வம் என பல விஷயங்களில் நல்ல பலன்கள் கிடைக்கும். உங்கள் ராசிக்கான வழிபாட்டு முறைகளைப் பின்பற்றி மேலும் நன்மைகளைப் பெறுங்கள்.

4 Min read
Vedarethinam Ramalingam
Published : Jun 20 2025, 01:00 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112
மேஷம் Aries
Image Credit : Pixabay

மேஷம் Aries

மேஷம் ராசிக்காரர்களுக்கு உற்சாகமும் முயற்சியும் அதிகரிக்கும் நாள் இது என்றால் அது மிகையல்ல. பல்வேறு புதிய முயற்சிகளை ஆரம்பிக்க உகந்த சூழ்நிலை அமையும். தோழமையும், உறவுகளுடனான நெருக்கமும் பலமடங்கு வலுப்பெறும். கடந்த சில நாட்களில் இருந்த மன அழுத்தம் குறையும். தொழிலில் முன்னேற்றத்திற்கு வாய்ப்பு உருவாகும். புதிய வாய்ப்புகள் வாயில் கதவை தட்டும். வழிபாட்டிற்காக சிவபெருமானை நாடி, 108 முறை ஓம் நமசிவாய ஜெபம் செய்தால் நல்ல பலன்கள் கிட்டும். வெள்ளை அல்லது சிவப்பு நிற ஆடை அணிந்து சிவாலயத்தில் தீபம் ஏற்றுவது நல்ல பலனை கொடுக்கும். தோஷ நிவாரணமாக அருணாச்சலேஸ்வரரை மனதில் நினைத்து வழிபாடு நடத்தினால் நீங்கள் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும்.

212
ரிஷபம் Taurus
Image Credit : Adobe Stock

ரிஷபம் Taurus

ரிஷபம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் செல்வத்தை கொட்டிக்கொடுக்கும்.உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளதால் நிதானமாக செயல்படவேண்டும். குடும்பத்தில் ஒருவரிடமிருந்து சர்ப்ரைஸ் உதவி கிடைக்கும். நிலம், சொத்து தொடர்பான வேலைகளில் நீங்கள் எதிர்பார்த்தபடி சாதகமான முடிவுகள் வரலாம். விநாயகரை வழிபட்டு 21 முறையாக ஓம் ச்ரீம் க்ளீம் க்ளோம் க்ளைம் முளாய வினாயகாய நம என்று ஜெபிக்கலாம். காலை நேரத்தில் நீர் சிந்தி, பூஜையில் மஞ்சள் குங்குமம் வைத்து வழிபட்டால் நல்ல பலனை கொடுக்கும். பச்சை ஆடை அணிந்து அலுவலகம் செல்லலாம்.

Related Articles

Related image1
முருகன் அருள் - "ஓம் சரவணபவ" சொன்னால் என்ன கிடைக்கும் தெரியுமா?
Related image2
Horoscope: இந்த ஆலயங்களுக்கு சென்றால் சொந்த வீடு கட்டாயம்!
312
மிதுனம் Gemini
Image Credit : Getty

மிதுனம் Gemini

மிதுனம் ராசிக்காரர்களுக்கு இன்று பேச்சுத் திறன்,தொடர்பு திறன் மேலோங்கும். சில முக்கிய விஷயங்களை பேச்சின் மூலமே முடித்து சாதனை படைப்பீர்கள். புதிய நட்புகள் உருவாகும் அதன் மூலம் ஆதாயம் கிடைக்கும். தொழில் சார்ந்த சந்திப்புக்கள் சாதகமாக நடக்கும். படிப்பு தொடர்பான விஷயங்களில் வெற்றி உண்டு. அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு 11 முறை லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் செய்தால் நன்மை பெறலாம். சாமர்ப்பண உணர்வுடன் பரிகாரம் செய்தால் உள்ளத்தில் அமைதி கிடைக்கும். நீங்கள் எப்போதும் போது கெத்தாக இருந்தால், மதிப்பும் மரியாதையும் பல மடங்கு அதிகரிக்கும்.

412
கடகம் Cancer
Image Credit : our own

கடகம் Cancer

கடக ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தில் அமைதி நிலவும். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடையே நல்ல புரிந்துணர்வு தோன்றும். வீட்டில் சந்தோஷம் மற்றும் நல்ல நம்பிக்கை அதிகரிக்கும். பெற்றோர், சொந்தங்கள், உடன்பிறப்புக்கள், சகோதர சகோதரிகள் மற்றும் நட்பு வட்டத்தில் இருந்து நல்ல செய்தியும் உதவியும் கிடைக்கும். மனநலம் மேம்பட்டு காணப்படும் என்பதால் தொட்டதெல்லாம் துலங்கும். பணி இடத்திலோ, செல்லும் இடங்களிலோ விருதுகள் அல்லது கௌரவம் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. முருகனை நாடி, "சரவணபவா" என 108 முறை ஜபிக்கலாம். வெள்ளிக்கிழமை மாலை அருகிலுள்ள முருகன் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். சிவப்பு மலர்களை சமர்ப்பிக்கலாம்.

512
சிம்மம் Leo
Image Credit : Getty

சிம்மம் Leo

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று தன்னம்பிக்கை மிகுந்த நாளாக இருக்கும். தலைமை பண்பு வெளிப்படும். முக்கிய விஷங்களை முனநின்று முடித்து சாதிப்பீர்கள். பொது நிகழ்வுகளில் முக்கிய பங்கு வகிக்க வாய்ப்பு கிடைக்கும். பணியிடம் மற்றும் செய்யும் தொழிலில் புதிய பொறுப்புகளோ, புதிய ஆர்டர்களோ கிடைக்கலாம். அரசு அதிகாரிகளை சந்திக்கும் போது உங்கள் வார்த்தைகள் மதிப்பு பெறும். சூரிய பகவானை வழிபட்டு, "ஓம் சூர்யாய நம:" என 11 முறை ஜபிக்கலாம். காலை நேரத்தில் சூரியனை நோக்கி நீர்சாத்தி வணங்கலாம். அன்னதானம் செய்தால் சூரியபகவான் ஆசியுடன் செல்வம் கூடும். நிலையான மன நிலை பெற சூரிய வழிபாடும், தியானமும் சிறந்தது.

612
கன்னி Virgo
Image Credit : Pixabay

கன்னி Virgo

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று திட்டமிடல் திறன் மேலோங்கும். திட்டமிட்டு காத்திருந்த காரியங்களை நடத்தி முடிப்பீர்கள். நீங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு செயலும் திட்டமிட்டவாறே நடைபெறும். பொதுவாக நினைத்தது நடக்கும் நாள். பணியில் அதிக கவனம் செலுத்த வேண்டிய நாள். கவனக்குறைவால் தவறுகள் நிகழ வாய்ப்பு உள்ளது. கதிர்காமம் முருகன் அல்லது அம்மன் வழிபாடு சிறந்த பலன் தரும். பூஜையில் பச்சை நிற மலர்கள் பயன்படுத்தலாம். சக ஊழியர்களுடன் உறவு வலுப்படும். பழைய பிரச்சனைகள் தீர வாய்ப்பு உண்டு.

712
துலாம் Libra
Image Credit : Getty

துலாம் Libra

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று எடுத்த காரியம் எல்லாம் வெற்றி அடையும். நட்பு, உறவுகளில் புதிய புரிதல் ஏற்படும். குழு முயற்சிகளில் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம்.செல்வம், புகழ் பாராட்டு மற்றும் சான்றிதழ் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. மனதில் இருந்த குழப்பங்கள் முழுமையாக தீரும். வராக சுவாமி வழிபாடு செய்து வெண்ணெய் தீபம் ஏற்றலாம். விஷ்ணு வழிபாடும் சிறந்த பலன்களைக் கொடுக்கும். வெள்ளி நிற ஆடை அணிந்து புதியவர்களை சந்திக்கலாம்.

812
விருச்சிகம் Scorpio
Image Credit : Pixabay

விருச்சிகம் Scorpio

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று உளவியல் தாக்கங்கள் அதிகமாக இருக்கும். மனதில் சற்று குழப்பம் ஏற்படலாம். ஆனால் நேர்மறையான எண்ணங்கள் உங்கள் நாளை அப்படியே மாற்றும். மற்றவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் மனநிம்மதி கிடைக்கும். உறவினர்களோ நண்பர்களோ உதவி கேட்டு வந்தால் மறுக்க வேண்டாம். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நேரம் இது. விநாயகர் வழிபாடு செய்து 108 முறை "ஓம் கம் கணபதயே நம:" ஜெபிக்கலாம். பூசணிக்காய் சாம்பார் போன்ற சத்தான உணவுகளை உண்பது நல்லது.

912
தனுசு Sagittarius
Image Credit : our own

தனுசு Sagittarius

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி, புகழ் நிச்சயம். புதிய வாய்ப்புகள் உருவாகும். வெளிநாடு தொடர்பான செயல்களில் திடீர் முன்னேற்றம் ஏற்படும். ஆசிரியர்களிடம் ஆதரவு கிடைக்கும். சாஸ்தா வழிபாடு செய்து, கங்காநீரில் நனைய வைத்து பிரசாதமாக எடுத்துக்கொள்ளலாம். சூரியனுடன் தொடர்புடைய கோவிலில் பிரார்த்தனை பலன் தரும். தள்ளிப்போன திட்டங்களை இப்போது செயல்படுத்தலாம். வெளிர் நிற ஆடைகள் மனநிம்மதியை அதிகரிக்கும்.

1012
மகரம் Capricorn
Image Credit : adobe stock

மகரம் Capricorn

மகரம் ராசிக்காரர்களுக்கு இன்று உழைப்பில் நேர்மை வெளிப்படும். தொழிலில் நிலையான நிலையை அடைவீர்கள். கடந்த சில நாட்களாக நிலவி வந்த சங்கடங்கள் தீரும். குடும்பத்தில் இருந்து நல்ல செய்தி வரும். சதாசிவர் வழிபாடு செய்து, விளக்கு ஏற்றி பஞ்சாக்ஷர மந்திரம் ஜபிக்கலாம். வெள்ளை மலர்களுடன் பூஜை செய்தால் அதிர்ஷ்டம் கிடைக்கும். வேலை தொடர்பான பயணங்களில் சாதகத்தன்மை உண்டு. நல்ல உடற்பயிற்சி இன்றைய தினத்தில் நலம் தரும்.

1112
கும்பம் Aquarius
Image Credit : adobe stock

கும்பம் Aquarius

கும்பம் ராசிக்காரர்களுக்கு இன்று தொழில், முதலீடு ஆகியவற்றி வெற்றி உண்டு. தொழில் செய்வோருக்கு புதிய ஆர்டர்கள் கிடைக்கும். உங்கள் திறமையை வெளிக்கொண்டு வரும் நாள் என்பதால் நிதானமாக செயல்பட்டால் அனைத்திலும் ஜெயம் உண்டாகும். விஷ்ணு வழிபாடு செய்து, நீரில் குறைந்தது 11 தீபம் ஏற்றி ஜெபிக்கலாம். பச்சை நிற ஆடைகள் அனுகூலமான பலன் தரும். புதிய தகவல்கள், புத்தகங்கள் வாழ்க்கையின் மாற்றத்தை ஏற்படுத்தும். சின்ன சந்தோஷங்கள் கூட மகிழ்ச்சியை தரும்.

1212
மீனம் Pisces
Image Credit : Asianet News

மீனம் Pisces

மீனம் ராசிக்காரர்களுக்கு இன்று ஆன்மீக செல்வாக்கு அதிகரிக்கும். மன அமைதி அதிகரிக்கும்.புதிய முயற்சிகளை செய்தால் அதில் கண்டிப்பாக வெற்றி உண்டு. புதிதாக தொழில் செய்வோர் அதிக லாபம் பெறுவர். குடும்பத்தில் அமைதி நிலைக்கும். சகோதர சகோதிகள் நண்பர்கள் உறவினர்கள் உதவிக்கரமாக இருப்பர். உங்கள் கனவுகள், சிந்தனைகள் வெற்றிக்கு வழிகாட்டும். வரதராஜ பெருமாளை வழிபட்டு, சப்தவிருட்சம் புனிதமாக சூழ்ந்து கொண்டு தியானம் செய்யலாம். சப்ததா மந்திர ஜபம் மூலம் உளபகுத்தறிவு அதிகரிக்கும்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
ஜோதிடம்
ஜோதிடம்
ராசி பலன்
ஆன்மீகம்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved