- Home
- Astrology
- ஆகஸ்ட் 2, 2025 இன்றைய ராசி பலன்கள்: சாதனைகள் படைக்கும நாள்.! வெற்றியும் சந்தோஷமும் கூடும்.!
ஆகஸ்ட் 2, 2025 இன்றைய ராசி பலன்கள்: சாதனைகள் படைக்கும நாள்.! வெற்றியும் சந்தோஷமும் கூடும்.!
இன்றைய ராசி பலன்கள் மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளுக்கும் மர்மங்களும் வாய்ப்புகளும் நிறைந்த நாளாக அமைகிறது. தொழில், குடும்பம், உடல்நலம், பரிகாரம் என அனைத்தையும் உள்ளடக்கியது.

மேஷம் (Aries)
அன்புள்ளம் கொண்ட மேஷராசி நேயர்களே, இன்று மனநிம்மதியாக கடமைகளை முடிக்க நல்ல நாள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் அதிகரிக்கும். தொழில் வளர்ச்சி திட்டமிட்டபடியும் எதிர்பாத்தபடியும் நடைபெறும். நண்பர்களிடம் விட்டுக்கொடுத்து போகவேண்டிய சூழல் ஏற்படும். கூடுதல் செலவுகள் தவிர்க்க வேண்டும். புதிய முதலீடுகளை தள்ளி வைக்க வேண்டியது அவசியம். உடல் நலத்தில் அக்கரை தேவை. உணவில் கட்டுப்பாடு அவசியம்.
பரிகாரம்: சிவபெருமான் கோவிலுக்கு சென்று பால் அபிஷேகம் செய்யவும்.
வழிபாட்டு முறை: “ஓம் நமசிவாய” என்ற மந்திரத்தை 108 முறை ஜபிக்கவும்.
ரிஷபம் (Taurus)
ஆற்றல் மிகுந்த ரிஷப ராசி நேயர்களே, நேர்மையாக செயல்பட விரும்பும் நாள். முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். தொழிலில் அதிக வருமானம் கிடைக்கும். குடும்பத்தில் சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். உடன் பிறந்தவர்கள் வழியில் நன்மைகள் உருவாகும். பழைய வாகனங்களை விற்பதற்கு ஏற்ற நாள். மனம் அமைதிக்காக தியானம் சிறந்தது வழியாக இருக்கும்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமை நவவெளி பூஜை செய்வது நன்று.
வழிபாட்டு முறை: வெண் பூசணிக்காயில் லக்ஷ்மி ஹோமம் செய்து வீட்டில் வைக்கவும்.
மிதுனம் (Gemini)
இனிமையான மதுன ராசே நேயர்களே, உங்களின் சிறிய முயற்சிகளும் பெரிய பலன்களை அளிக்கும் நாள். அலுவலகத்தில் பாராட்டு கிடைக்க வாய்ப்புகள் உண்டு. புதியவர்களிடம் அன்பு பாராட்டுவீர்கள். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். பயணங்கள் சாதகமாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
பரிகாரம்: விநாயகர் கோவிலுக்கு சென்று வடைமாலை சாற்றவும்.
வழிபாட்டு முறை: “ஓம் கம் கணபதயே நம:” மந்திரம் 21 முறை ஜபிக்கவும்.
கடகம் (Cancer)
ஈரமுள்ள மனதையுடைய கடக ராசி நேயர்களே, குடும்பத்தில் மன கசப்புகள் வரலாம். பண விஷயங்களில் சிக்கல்கள் ஏற்படலாம். எதிலும் அலட்சியம் இருக்க கூடாது. முக்கிய ஆவணங்களில் சிக்கல் வரலாம். குடும்ப உறுப்பினர்களுடன் நேரம் செலவிடவும். பழைய நினைவுகள் மனதை பாதிக்கலாம். சற்று அமைதியுடன் செயல்பட வேண்டும்.
பரிகாரம்: சந்திரனை வழிபடவும்.
வழிபாட்டு முறை: திங்கள் அன்று வெண்கல பாத்திரத்தில் பால் வைத்து சந்திரனை நோக்கி விரதம் செய்யவும்.
சிம்மம் (Leo)
அன்பிற்கு கட்டுப்படும் சிம்ம ராசி நேயர்களே, இன்று திடீர் பயண வாய்ப்பு உண்டு. பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். கவனத்துடன் செயல்பட்டால் நன்மை உண்டு. முதலீடு உள்ளிட்ட புதிய பழக்கங்களை உருவாக்க வேண்டிய நாள். உறவினர் வழியில் சிறு தொந்தரவு இருக்கும். உடல் நலத்தில் கவனம் தேவை. நீண்ட நேரம் வேலை செய்வதை தவிர்க்கவும்.
பரிகாரம்: சூரியனை வழிபடவும்.
வழிபாட்டு முறை: காலையில் சூரிய நமஸ்காரம் செய்து அருகம்புல் நீரால் அபிஷேகம் செய்யவும்.
கன்னி (Virgo)
உதவும் மனப்பான்மை கொண்ட உங்களுக்கு இன்று பணவரவு சிறப்பாக இருக்கும். கடன் விவகாரங்களில் முன்னேற்றம் காணப்படும். மனதில் அமைதி நிலவும். வணிகம் மற்றும் தொழிலில் சிறிய மாற்றங்கள் ஏற்படும். மனச்சோர்வு விலகும் ஓடும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். மாணவர்களுக்கு கூடுதல் முயற்சி தேவை.
பரிகாரம்: முருகனை வழிபடவும்.
வழிபாட்டு முறை: செவ்வாய்க்கிழமை சிற்றருளாளராகிய முருகனுக்கு பூஜை செய்து “ஓம் சரவணபவ” மந்திரம் 108 முறை ஜபிக்கவும்.
துலாம் (Libra)
நேர்மையின் சிகரமான நீங்கள் இன்று சில சோதனைகள் சந்திக்க நேரிடும். முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும். புதிய சொத்துகளில் முதலீடு செய்ய நேரம் இதுவல்ல. சில வேலைகள் தாமதமாக வாய்ப்புகள் உண்டு. குடும்ப உறவில் புரிதல் தேவை. விட்டுக்கொடுத்து சென்றால் நன்மை. மருத்துவ செலவுகள் வரலாம். அமைதியாக இருங்கள் .
பரிகாரம்: காளி தேவியை வழிபடவும்.
வழிபாட்டு முறை: அமாவாசை அல்லது வெள்ளிக்கிழமை அம்மனை கருநிற புஷ்பங்களால் பூஜிக்கவும்.
விருச்சிகம் (Scorpio)
நட்புக்கு இலக்கனமான உங்களுக்கு இன்று நாள் முழுக்க ஊக்கம் மற்றும் ஆற்றல் நிறைந்திருக்கும். பழைய நண்பர் சந்திப்பு மனநிம்மதி தரும். தொழில் வளர்ச்சி வேகமாகும். குடும்ப உறவுகள் வலுப்படும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். மாணவர்களுக்கு புத்திக்கூர்மை அதிகரிக்கும்.
பரிகாரம்: அனுமனை வழிபடவும்.
வழிபாட்டு முறை: சனிக்கிழமை அனுமான் சாலிசா படித்தல் சிறந்தது. வெள்ளரிக்காய் நிவேதனம் வைக்கவும்.
தனுசு (Sagittarius)
எதிரிகளை கூட மன்னிக்கும் தனசு ராசி நேயர்களே, இந்று முக்கிய முடிவுகளை தள்ளிப் போட வேண்டிய நாள். தொழில் வளர்ச்சியில் சிறிய தடைகள் ஏற்படும். மன அழுத்தம் அதிகரிக்கும். தன்னம்பிக்கையை இழக்க வேண்டாம். பழைய தவறுகளை திருத்தும் வாய்ப்பு உருவாகும். குடும்பத்தில் உறவினர்களுடன் நேரத்தை செலவிடுங்கள்.
பரிகாரம்: குரு பகவானை வழிபடவும்.
வழிபாட்டு முறை: வியாழக்கிழமை துளசி ஆர்ச்சனை செய்து “ஓம் குரவே நம:” ஜபிக்கவும்.
மகரம் (Capricorn)
சிந்தனையை இலக்கு நோக்கி செலுத்தும் உங்களுக்கு இன்று புதிய சிந்தனைகள் தோன்றும். தொழிலில் சிறிய மாற்றம் சாதகமாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பழைய பிரச்சினை தீரும். நண்பர்கள் உதவி செய்வர். செலவுகள் கட்டுப்பாடுடன் இருக்கும். வாகனப்பயணத்தில் கவனம் தேவை.
பரிகாரம்: சனீஸ்வரனுக்கு ஆராதனை செய்யவும்.
வழிபாட்டு முறை: எண்ணெய் தீபம் ஏற்றி, “ஓம் சனிச்சராய நம:” ஜபிக்கவும்
கும்பம் (Aquarius)
இன்று உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றியளிக்கும். பணி விஷயங்களில் நல்ல முன்னேற்றம். நல்ல செய்தி வந்துசேரும். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். உடல் நலத்தில் கூடுதல் கவனம் தேவை. வாக்குவாதங்களை தவிர்க்கவும். உணர்ச்சி வசப்படாமல் செயல்படுங்கள்.
பரிகாரம்: சக்தி அம்மனை வணங்கவும்.
வழிபாட்டு முறை: அம்மனுக்கு வெண் அரிசி பிரசாதம் செய்து வழிபடவும்.
மீனம் (Pisces)
முன்னேற்றதிற்கான வாய்ப்புகள் கிடைக்கும். கல்வியில் மாணவர்களுக்கு விருப்பமான முடிவுகள் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பயணங்களில் நன்மை ஏற்படும். மன உற்சாகம் அதிகரிக்கும். புதிய பிஸ்னஸ் யோசனைகள் ஏற்படும்.
பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.
வழிபாட்டு முறை: வியாழக்கிழமை மஞ்சள் புஷ்பங்கள் கொண்டு தட்சிணாமூர்த்திக்கு பூஜை செய்யவும்.