காதல், வேலை, குடும்பம் – 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்
இன்றைய ராசி பலன்கள் மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்கும் கலை, படைப்பாற்றல், உறவுகள், தொழில், கல்வி, மற்றும் பல துறைகளில் எதிர்பாராத திருப்பங்களையும் நன்மைகளையும் சுட்டிக்காட்டுகின்றன.

இன்றைய ராசி பலன்கள்
மேஷம்: இன்றைய நாள் கலை மற்றும் படைப்பாற்றல் கொண்டவர்களுக்கு சாதகமாக அமையும். உறவினர்கள், குறிப்பாக தாயார் தொடர்புடையவர்கள் உங்களுக்கு துணையாக இருப்பார்கள். வெளிநாட்டு வணிகம் சார்ந்தவர்களுக்கு ஆர்டர்கள் அதிகரிக்கும். குழந்தைகளின் நலனில் சிறப்பு கவனம் செலுத்துங்கள்.
ரிஷபம்
திருமண வாழ்க்கையில் ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகள் பெற்றோர் ஆதரவுடன் முன்னேறுவார்கள். காதல் விஷயங்களில் எச்சரிக்கையாக இருங்கள். தொழிலில் போட்டி இருந்தாலும் லாபம் கிடைக்கும். மாணவர்கள் சிந்தனையில் தெளிவு பெறுவார்கள். விவசாயிகளின் விருப்பங்கள் நிறைவேறும்.
மிதுனம்
நீங்கள் திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும். உடல்நலத்தில் சிறிது கவனம் அவசியம். சமூக வட்டாரத்தில் மரியாதை உயரும். வேலை வாய்ப்பு தேடி காத்திருப்பவர்கள் சுபசெய்தி பெறுவார்கள். இல்லத்தில் மகிழ்ச்சி நிலவும். புதிய தொழில்நுட்ப சாதனங்களை வாங்கும் வாய்ப்பு இருக்கும்.
கடகம்
அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கலாம். வீண்செலவுகளை கட்டுப்படுத்துங்கள். வேலைவாய்ப்பு இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். பிள்ளைகள் விருப்பப்படி நடந்து கொள்வார்கள். பெண்களுக்கு குடும்பத்தில் புரிதல் வளரும். உடல் சோர்வு அதிகரிக்கலாம். நடைபயிற்சி உதவும்.
சிம்மம்
நீண்ட நாட்களாக எதிர்பார்த்த நன்மைகள் இன்று கைகூடும். கர்ப்பிணிப் பெண்கள் உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். மாணவர்கள் படிப்பில் கவனம் அதிகரிக்க வேண்டும். வீட்டில் அன்பும் பாசமும் மலரும். குடும்பத்தில் நலன்கள் மேம்படும்.
கன்னி
அதிகாரிகள் உங்களிடம் நல்ல ஆதரவு அளிப்பார்கள். பெண்களின் திருமண ஆசைகள் நிறைவேறும். நகை, ஆடைகள் வாங்கும் வாய்ப்பு இருக்கும். பங்குச்சந்தையில் லாபம் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்படும்.
துலாம்
சந்திராஷ்டமம் காரணமாக ஸ்வாதி நட்சத்திரத்தினருக்கு சுப காரியங்களை தவிர்ப்பது நல்லது. சித்திரை மற்றும் விசாகத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சிகள் சிறப்பாக அமையும். சிவபெருமானை வழிபடுவதால் பலன் அதிகரிக்கும்.
விருச்சிகம்
பிள்ளைகளின் நினைவாற்றல் மேம்படும். தந்தை வழி சொத்துக்களில் நன்மைகள் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். உறவினர்களுடன் நல்ல உறவு நிலைக்கும். உடல்நலம் சீராக இருக்கும். பிள்ளைகளின் திருமண ஆசைகள் நிறைவேறும்.
தனுசு
திருமணமான தம்பதிகளுக்கு மகப்பேறு சந்தோஷம் கிடைக்கலாம். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். எதிர்பார்த்த வருமானம் வரும். செலவுகளை கட்டுப்படுத்துங்கள். முதுகு மற்றும் மூட்டு வலி கவலை தரலாம். தம்பதியிடையே பாசமும் அன்பும் அதிகரிக்கும்.
மகரம்
தொழிலில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பெண்கள் செலவுகளை நுணுக்கமாக நிர்வகிப்பார்கள். தம்பதியிடையே இனிமை நிலைக்கும். கணினித் துறையினருக்கு ஊதிய உயர்வு கிடைக்கும். மாணவர்கள் ஆசிரியர்களின் பாராட்டைப் பெறுவார்கள்.
கும்பம்
இனிய காதல் தருணங்கள் காத்திருக்கின்றன. பேச்சுத்திறமை பாராட்டப்படும். வியாபாரத்தில் வருமானம் உயரும். கமிஷன், டீலிங் மூலம் இலாபம் கிடைக்கும். தடைகள் நீங்கும். நேர்முகத் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
மீனம்
அரசியலில் இருந்த மந்த நிலை நீங்கும். புதிய பொறுப்புகள் கிடைக்கும். மத ஆன்மிக பணிகளில் ஈடுபடுவீர்கள். அண்ணி அல்லது அக்காவின் உதவி கிடைக்கும். சமூக வட்டாரம் பெருகும். அலுவலகத்தில் வேலை அழுத்தம் அதிகரிக்கலாம். வீட்டில் சுபநிகழ்வுகள் நடக்கும்.