- Home
- Astrology
- Vastu Mistakes : இந்த வாஸ்து தவறுகளை ஒருபோதும் செய்யாதீங்க! கணவன் மனைவிக்குள் விவாகரத்துக்கு உறுதி
Vastu Mistakes : இந்த வாஸ்து தவறுகளை ஒருபோதும் செய்யாதீங்க! கணவன் மனைவிக்குள் விவாகரத்துக்கு உறுதி
சில வாஸ்து குறைபாடு காரணமாக கணவன் மனைவிக்குள் விவாகரத்து ஏற்படும். சில வாஸ்து குறிப்புகளை பின்பற்றுவதன் மூலம் இந்த வாழ்த்துக்கள் சிலைகளை நீக்கலாம்.

இந்து மதத்தில் வாஸ்து சாஸ்திரத்திற்கு தனி முக்கியத்துவம் உண்டு. வீட்டை கட்டுவது முதல் வீட்டில் உள்ள ஒவ்வொரு பொருட்களை வைக்கும் இடம் என அனைத்திற்கும் வாஸ்து விதிகள் உள்ளன. அவற்றை சரியாக பின்பற்றாவிட்டால் வீட்டில் உள்ளவர்களிடையே பிரச்சனை ஏற்படும்.
இத்தகைய சூழ்நிலையில், தெரிந்தோ தெரியாமலோ செய்யும் சில வாஸ்து தவறுகள் கணவன் மனைவிக்குள் தொடர்ந்து சண்டை சச்சரவை ஏற்படுத்தும். பிறகு இறுதியில் விவாகரத்திற்கு வழிவகுக்கும். சில வாஸ்து குறிப்புகளை பின்பற்றுவதன் மூலம் விவாகரத்து ஏற்படுவதை தடுக்கும் முடியும். அவை என்னவென்று இங்கு பார்க்கலாம்.
வாஸ்து சாஸ்திரத்தின் படி வடகிழக்கு திசையில் தலையை வைத்து தூங்குவது நல்லதல்ல. இது புனிதமான திசையுடன் தூக்கத்தின் ஆற்றலுடன் முரண்படும். இதனால் மன அழுத்தம், உடல் நலப் பிரச்சினைகள் ஏற்படும். மேலும் வடக்கு திசையில் படுக்கையில் இருப்பது விவாகரத்திற்கு வழிவகுக்கும் என்று வாஸ்து நிபுணர்கள் சொல்லுகின்றனர்.
அதுபோல வாஸ்து சாஸ்திரத்தின் படி தெற்கு திசை ஒருபோதும் இருட்டாக இருக்கக் கூடாது. தெற்கு திசையில் இருள் இருந்தால் உறவில் விரிசல் ஏற்படும்.
வாஸ்து சாஸ்திரத்தின் படி படுக்கை அறையில் முட்கள் நிறைந்த செடி, உடைந்த மின்விசிறி, பிரிட்ஜ் போன்றவை இருக்க கூடாது. அவை உறவுகளை பாதிக்கும். சில சமயம் விவாகரத்திற்கு வழிவகுக்கும்.

