- Home
- Spiritual
- Vastu Tips for Career Growth : தொழிலில் கொடிகட்டி பறக்க!! வாஸ்துபடி இதை செய்ங்க; சக்ஸஸ் தான்
Vastu Tips for Career Growth : தொழிலில் கொடிகட்டி பறக்க!! வாஸ்துபடி இதை செய்ங்க; சக்ஸஸ் தான்
உங்கள் தொழிலில் உச்சத்தை அடைய வாஸ்து சாஸ்திரத்தின் படி கீழே சொல்லப்பட்டுள்ள விஷயங்களை மட்டும் பின்பற்றினால் போதும்.

Vastu Tips for Career Growth
சிலர் எங்கு வேலை பார்த்தாலும் அல்லது சொந்தமாக தொழில் செய்தாலும் அதில் எந்தவொரு வளர்ச்சியும் அடையாமல் இருப்பார்கள். எவ்வளவு கடினமாக உழைத்தாலும் அவர்கள் எதிர்பார்த்த பலன் பெற முடியாமல் போகிறது. ஆனால் சில வாஸ்து விதிகளை பின்பற்றுவதன் மூலம் இது சாத்தியமாகும். ஆம், கீழே கொடுக்கப்பட்டுள்ள வாஸ்து விதிகளை நீங்கள் பின்பற்ற தொடங்கினால் உங்களது வாழ்க்கையில் நீங்கள் உச்சத்தை அடைவதை யாராலும் தடுக்க முடியாது. அவை என்னென்ன என்று இங்கு பார்க்கலாம்.
அமரும் இடம் :
நீங்கள் வேலை செய்யும் இடத்தின் சூழல் சரியாக இருப்பது ரொம்பவே முக்கியம். எனக்கு நீங்கள் வேலை செய்யும் ஸ்தலத்தில் ஒருபோதும் பிரதான கதவின் முன் உட்கார வேண்டாம். அங்கு உட்காருவது உங்கள் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும்.
சரியான நாற்காலி :
அலுவலகத்தில் வேலைகள் நிறைய இருக்கும் ஆனாலும் நீங்கள் அமர்ந்திருக்கும் நாற்காலியின் நிலையை மனதில் கொள்ளுங்கள். அதாவது எப்போதுமே உயரமான முதுகு மற்றும் பின்புற ஓய்வு கொண்ட நாற்காலியில் அமரவும். இது முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்று சொல்லப்படுகிறது. அதுபோல முதுகை பிரதான கதவை நோக்கி வைத்து உட்கார வேண்டாம். இது எதிர்மறையை பரப்பும்.
அலுவலக மேஜை :
வாஸ்து சாஸ்திரத்தின் படி, நீங்கள் வேலைக்கு பயன்படுத்தும் மேஜை ஓவல் வடிவத்தில் தான் இருக்க வேண்டும். சதுரமாக இருக்கக் கூடாது. அதுபோல மேஜையானது மரம் அல்லது கண்ணாடியில் தான் இருக்க வேண்டும்.
படுக்கை அறையில் வேலை செய்யாதே :
தற்போது வீட்டில் இருந்து வேலை செய்பவர்கள் அதிகமாக இருக்கின்றனர். ஆனாலும் இவர்கள் வாஸ்து சாஸ்திரத்தின் படி சில விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். அதாவது வீட்டில் இருந்து வேலை செய்பவர்கள் ஒருபோதும் படுக்கையறையில் வேலை செய்யவே கூடாது. படிக்கும் அறை அல்லது ஓய்வெடுக்கும் இடத்தில்தான் வேலை செய்ய வேண்டும் படுக்கை அறையில் வேலை செய்தால் எதிர்மறை ஆற்றலின் தாக்கம் அதிகரிக்கும். இதனால் உங்கள் வேலை பாதிக்கப்படும்.
