- Home
- Astrology
- Astrology: 1 வருடத்திற்கு பின் சொந்த ராசிக்கு திரும்பிய செவ்வாய்.! 3 ராசிகளுக்கு சொத்துக்கள் குவியப் போகுது.!
Astrology: 1 வருடத்திற்கு பின் சொந்த ராசிக்கு திரும்பிய செவ்வாய்.! 3 ராசிகளுக்கு சொத்துக்கள் குவியப் போகுது.!
Chevvai Peyarchi 2025: வேத ஜோதிடத்தின்படி செவ்வாய் பகவான் அக்.27 ஆம் தேதி தனது சொந்த ராசியான விருச்சிக ராசியில் சஞ்சரிக்க இருக்கிறார். இந்த பெயர்ச்சி 3 ராசிகளில் பிறந்தவர்களுக்கு மிகவும் நன்மை பயக்க உள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

செவ்வாய் பெயர்ச்சி 2025
ஜோதிடத்தில் செவ்வாய் பகவான் முக்கிய கிரகமாக அறியப்படுகிறார். இவர் தைரியம், வீரம், துணிச்சல், ஆற்றல், சக்தி ஆகியவற்றை குறிக்கும் ஒரு கிரகமாகவும், நவகிரகங்களில் தளபதியாகவும் விளங்கி வருகிறார். தற்போது இவர் கடக ராசியில் பயணித்து வருகிறார். அக்டோபர் 27 ஆம் தேதி தனது சொந்த ராசியான விருச்சிக ராசிக்குள் நுழைய இருக்கிறார். இதன் காரணமாக சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்க உள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
துலாம்
- செவ்வாய் பகவானின் பெயர்சியானது துலாம் ராசிக்காரர்களுக்கு மிகுந்த சாதகமாக இருக்கும்.
- இந்த பெயர்ச்சி உங்கள் அதிர்ஷ்ட ஸ்தானத்தில் நடைபெற இருக்கிறது.
- எனவே இந்த காலத்தில் உங்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும்.
- வாழ்க்கையின் அனைத்து பகுதிகளிலும் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும்.
- புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகும்.
- வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும்.
- பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைக்கும்.
- வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
- பூர்வீக சொத்துக்கள் கைக்கு வந்து சேரும்.
- நிதி நிலைமை வலுப்பெறும்.
விருச்சிகம்
- செவ்வாய் பகவானின் பெயர்சியானது விருச்சிக ராசியின் லக்ன வீட்டில் நடைபெற இருக்கிறது.
- இதன் காரணமாக உங்கள் தன்னம்பிக்கை, தைரியம், வீரம் அதிகரிக்கும். தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள்.
- நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பணிகளை முடித்து வெற்றியை ஈட்டுவீர்கள்.
- வீடு மராமத்து, புதிய வீடு வாங்குதல் போன்ற வேலைகளை செய்வீர்கள்.
- கடின உழைப்புக்கான வெற்றி கிடைக்கும்.
- திருமணமாகாதவர்களுக்கு நல்ல இடத்தில் வரன் தேடி வரும்.
- நீண்ட காலமாக வாட்டி வதைத்து வந்த உடல்நலக் கோளாறுகள் நீங்கி, ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
- சமூகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும்.
மீனம்
- செவ்வாய் பெயர்ச்சியானது மீன ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும்.
- இந்த பெயர்ச்சி மீன ராசியின் சுகபோகங்கள் மற்றும் ஆடம்பர ஸ்தானத்தில் நடக்கிறது.
- எனவே நீங்கள் அடுத்த சில மாதங்களுக்கு ஆடம்பர வாழ்க்கை வாழ்வீர்கள்.
- உங்கள் வாழ்க்கையில் ஆடம்பரங்கள் அதிகரிக்கும்.
- புதிய வாகனங்கள், புதிய சொத்துக்களை வாங்குவீர்கள்.
- தங்கம் உள்ளிட்ட நல்ல திட்டங்களில் முதலீடு செய்வீர்கள்.
- வேலையில் உங்கள் பணி பாராட்டப்படும். இதன் காரணமாக புதிய பொறுப்புகள் கிடைக்கலாம்.
- தொழிலதிபர்கள் எதிர்பார்த்து காத்திருந்த புதிய ஒப்பந்தங்கள், அரசு சலுகைகள் கிடைக்கக்கூடும்.
- புதிதாக தொழில் செய்யும் வாய்ப்புகள் உருவாகும்.
- வாழ்க்கையில் நீண்ட காலமாக நிலவி வந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)