- Home
- Astrology
- Chaturgrahi Yoga: 4 கிரகங்கள் இணைவதால் உருவாகும் சதுர்கிரஹி யோகம்.. ஆகஸ்ட் முதல் இந்த 5 ராசிகளின் வாழ்க்கை தலைகீழா மாறப்போகுது.!
Chaturgrahi Yoga: 4 கிரகங்கள் இணைவதால் உருவாகும் சதுர்கிரஹி யோகம்.. ஆகஸ்ட் முதல் இந்த 5 ராசிகளின் வாழ்க்கை தலைகீழா மாறப்போகுது.!
Astrology: ஆகஸ்ட் மாதம் கடக ராசியில் குரு, புதன், சூரியன், சந்திரன் ஆகிய நான்கு சக்திவாய்ந்த கிரகங்கள் ஒன்று சேர்கின்றன. இதனால் உருவாகும் சதுர்கிரஹி யோகத்தால், குறிப்பிட்ட ஐந்து ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரி மாற்றம் ஏற்படப்போகிறது.

சதுர்கிரஹி யோகம்
ஆகஸ்ட் மாதத்தில் கடக ராசியில் குரு, புதன், சூரியன், சந்திரன் ஆகிய நான்கு சக்திவாய்ந்த கிரகங்கள் ஒன்று சேருகின்றன. இதனால் உருவாகும் சதுர்கிரஹி யோகத்தால் இந்த ஐந்து ராசிக்காரர்களின் வாழ்க்கை ஜாக்பாட் அடிக்கப் போகிறது. அந்த அதிர்ஷ்ட ராசிகள் எவை என்று பார்ப்போம்.
கன்னி ராசி
கன்னி ராசியினரே, உங்கள் வாழ்வில் வரங்களை வாரி வழங்கக் காத்துக் கொண்டிருக்கிறது இந்த ‘சதுர்கிரஹி யோகம்’.இந்த அற்புதக் காலத்தில் நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கப் போகிறது. இதுவரை இருந்த மந்தநிலை மாறி, இனி செய்யும் காரியங்கள் அனைத்திலும் இரட்டிப்புப் பலன்களும் வெற்றிகளும் உங்களைத் தேடி வரும். பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகளும் மிக அதிகம். பணிபுரியும் இடத்தில் உயர் அதிகாரிகளிடமிருந்து நல்ல பாராட்டுகளைப் பெறுவீர்கள்.
தனுசு ராசி
குரு, புதன், சூரியன், சந்திரன் ஆகிய நான்கு கிரகங்களின் சேர்க்கை தனுசு ராசிக்கு ஆகஸ்ட் மாதம் நல்ல பலன்களை அள்ளிக் கொடுக்கப்போகிறது. உங்கள் நிதிப் பிரச்சனைகள் தீரும். வேலையில் நல்ல பெயரும், புகழும் கிடைக்கும். மற்றவர்களின் நம்பிக்கையை எளிதாகப் பெறுவீர்கள். நீங்கள் செய்யும் எந்த வேலையிலும் எதிர்பாராத லாபம் வந்து சேரும். நீண்ட காலமாக இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
விருச்சிக ராசி
சதுர்கிரஹி யோகத்தால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதம் நல்ல லாபத்தைக் கொண்டுவரும். புகழும், செல்வமும் பெருகும். பிரச்சனைகள் நீங்கி, வாழ்க்கையில் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். பழைய முதலீடுகள் நல்ல லாபத்தைத் தரும். நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும்.
மகர ராசி
கடக ராசியில் இணையும் குரு, புதன், சூரியன், சந்திரன் ஆகிய நான்கு கிரகங்கள், மகர ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத நன்மைகளைக் கொண்டு வரும். நீங்கள் பல வெற்றிகளைக் குவிப்பீர்கள். நல்ல பாராட்டுகளையும் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். மார்க்கெட்டிங் மற்றும் மீடியா துறையில் இருப்பவர்களுக்கு இது பொன்னான காலம். கடன் பிரச்சனைகள் தீர்ந்து, நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வெளிநாட்டில் வேலை வாய்ப்புகள் வரலாம்.
மீன ராசி
மீன ராசிக்காரங்களுக்கு ஆகஸ்ட் மாதம் மிகச் சிறப்பாக இருக்கும். குறிப்பாக, உங்கள் நிதி நிலைமை பல மடங்கு உயரும். தொழிலில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். புதிதாக தொழில் தொடங்க இதுவே சரியான நேரம். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். மன அமைதி பெருகும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், குடும்பத்துடன் இன்பச் சுற்றுலா செல்லும் வாய்ப்பும் அமையும்.

