- Home
- Astrology
- Chanakya Niti : உங்க மனைவியை இந்த இடங்களுக்கு மட்டும் கூட்டிட்டுப் போய்டாதீங்க! அப்பறம் அவ்ளோதான்!
Chanakya Niti : உங்க மனைவியை இந்த இடங்களுக்கு மட்டும் கூட்டிட்டுப் போய்டாதீங்க! அப்பறம் அவ்ளோதான்!
Chanakya Niti : உங்களுக்கு உங்க மனைவி மேல ரொம்ப பாசம் இருக்கா? அப்போ, சாணக்கியர் சொல்ற இந்த நான்கு இடங்களுக்கு மட்டும் உங்க மனைவியை தப்பித்தவறி கூட கூட்டிட்டுப் போயிடாதீங்க. அது ஏன், என்ன காரணம்னு தெரிஞ்சுக்கோங்க.

சாணக்கியர் என்ன சொன்னார்?
எதிரிகளின் இடங்கள்
சாணக்கியரின் கூற்றுப்படி, உங்கள் வாழ்க்கையில் எதிரிகள் யாராவது இருந்தால், அவர்கள் வீட்டிற்கோ அல்லது அவர்கள் இருக்கும் இடத்திற்கோ உங்கள் மனைவியை அழைத்துச் செல்லாதீர்கள். உங்கள் எதிரிகள், உங்கள் மனைவியை உங்கள் பலவீனமாகப் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளது. மேலும், அத்தகைய இடங்களில் உங்கள் மனைவியின் பாதுகாப்புக்கும் ஆபத்து ஏற்படலாம்.
தொழில் தொடர்பான இடங்கள்
தொழில் தொடர்பான ரகசிய ஆலோசனைக் கூட்டங்களில் இருந்து மனைவியை தள்ளி வையுங்கள். ஒருவேளை அந்த மாதிரி கூட்டங்கள் வீட்டில் நடந்தாலும், மனைவியை அந்த இடத்திற்கு அனுமதிக்காதீர்கள். சில விஷயங்களை மனைவியிடம் ரகசியமாக வைத்திருந்தால்தான் வெற்றி கிடைக்கும் என்கிறார் சாணக்கியர். ஏனென்றால், பெரும்பாலான பெண்கள் எந்த ரகசியத்தையும் மனதில் வைத்திருக்க மாட்டார்கள்; யாரிடமாவது சொல்லிவிடுவார்கள். இதனால் உங்கள் வெற்றி பாதிக்கப்படலாம்.
Chanakya Rahasya: பிசினஸ் உலகம் அறியாத சாணக்கியரின் 8 ரகசியங்கள்! கோடிகளில் புரள மகா வியூகம்!
சண்டை நடக்கும் இடம்
சண்டைகள் மற்றும் வாக்குவாதங்கள் அதிகம் நடக்கும் இடங்களுக்கு உங்கள் மனைவியை அழைத்துச் செல்வது நல்லதல்ல. இது உங்கள் உயிருக்கும், உங்கள் மனைவியின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். நீங்கள் தனியாகச் சென்றால், உங்களை நீங்களே தற்காத்துக் கொள்ள ஒரு வாய்ப்பு இருக்கும். ஆனால் மனைவி உடன் இருந்தால், இருவரையும் காப்பாற்றுவது கடினம் என சாணக்கியர் கூறுகிறார்.
ஆபத்தான இடங்கள்
மேலும், காடு அல்லது போர்ச் சூழல் நிலவும் இடங்கள் போன்ற ஆபத்தான பயணங்களுக்கும் உங்கள் மனைவியை அழைத்துச் செல்லக்கூடாது. மனைவியின் பாதுகாப்புக்கு கணவனே பொறுப்பு. அத்தகைய இடங்களில் அவளைப் பாதுகாப்பது மிகவும் கடினமாகிவிடும். எனவே, இந்தத் தவறை செய்யாதீர்கள் என சாணக்கியர் எச்சரிக்கிறார்.
Chanakya Niti : இந்த 4 விஷயங்களில் ஆண்களை விட பெண்களே சிறந்தவர்கள்! சாணக்கியர் சொல்வது என்ன?

