- Home
- Astrology
- Zodiac Signs : மகரம் ராசிக்கான ஆகஸ்ட் மாதத்திற்கான பலன்கள் அண்ட் பரிகாரங்கள்: பிஸினஸ், லவ், வருமானம் எப்படி?
Zodiac Signs : மகரம் ராசிக்கான ஆகஸ்ட் மாதத்திற்கான பலன்கள் அண்ட் பரிகாரங்கள்: பிஸினஸ், லவ், வருமானம் எப்படி?
Capricorn August Month Rasi Palan : மகரம் ராசியைப் பொறுத்த வரையில் ஆகஸ்ட் 2025 மாதம் எப்படி இருக்கிறது? என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மகரம் ராசிக்கான ஆகஸ்ட் மாதத்திற்கான பலன்கள்
பொது பலன்கள்
பொதுவாக மகர ராசியினரைப் பொறுத்த வரையில் இந்த மாதம் ஏற்றத் தாழ்வுகள் நிறைந்த மாதமாக அமையும். மாதத்தின் ஆரம்பத்தில் சில சவால்களை சந்திக்க நேரிடும். இருப்பினும், உங்கள் கடின உழைப்பின் மூலம் அனைத்து சவால்களையும் சமாளித்து, வெற்றியை அடைவீர்கள்.
தொழில் மற்றும் நிதி
தொழில்: உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இந்த மாதம் நல்ல வெற்றிகள் கிடைக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைத்து, பணி நிமித்தமாக வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் உருவாகலாம். வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும்.
ஆகஸ்ட் மாத ராசி பலன்கள் மகரம் ராசி
நிதி:
எதிர்பாராத பண வரவு உண்டாகும். தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவது அவசியம். முதலீடுகளில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.
குடும்பம் மற்றும் உறவுகள்
குடும்பம்: கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பார்கள்.
ஆகஸ்ட் 2025 மகரம் ராசி பலன்கள்
உறவுகள்:
உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மூலம் நன்மைகள் நடக்கும். காதல் உறவுகளில் மகிழ்ச்சி நிலவும்.
ஆரோக்கியம்
ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. பருவகால நோய்கள் வரக்கூடும். சரியான உணவுப் பழக்க வழக்கங்களையும், ஓய்வையும் கடைப்பிடிப்பது அவசியம்.