- Home
- Astrology
- Astrology: 1 வருடத்திற்குப் பின் நேருக்கு நேர் சந்திக்கும் புதன் சூரியன்.! 3 ராசிகள் அம்பானி ஆகப் போறீங்க.!
Astrology: 1 வருடத்திற்குப் பின் நேருக்கு நேர் சந்திக்கும் புதன் சூரியன்.! 3 ராசிகள் அம்பானி ஆகப் போறீங்க.!
Budhaditya rajyog: ஒரே ராசியில் புதன் மற்றும் சூரியன் இணையும் பொழுது புதாதித்ய ராஜயோகம் உருவாகிறது. சில தினங்களில் உருவாகும் இந்த ராஜயோகத்தால் சில ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கவுள்ளது. அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

புதாத்திய ராஜயோகம் 2025
வேத ஜோதிடத்தின் படி கிரகங்கள் அவ்வப்போது பெயர்ச்சியாகி பிற கிரகங்களுடன் இணைந்து யோகங்களை உருவாக்குகின்றன. அந்த வகையில் சூரியன் மற்றும் புதன் பகவான் இருவரும் துலாம் ராசியில் இணைந்து புதாத்திய ராஜயோகத்தை உருவாக்குகின்றன. இந்த ராஜயோகம் யாருடைய ஜாதகத்தில் உள்ளதோ அவர்களுக்கு செல்வம், செழிப்பு, மகிழ்ச்சி, பொன், பொருள் ஆகியவை கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அக்டோபர் 17 ஆம் தேதி சூரியன் துலாம் ராசிக்குள் நுழைய இருக்கிறார்.
புதன் சூரியன் சேர்க்கை
ஏற்கனவே துலாம் ராசியில் புதன் பகவான் பயணித்து வரும் நிலையில் இருவரும் இணைந்து புதாதித்ய ராஜயோகத்தை உருவாக்குகின்றனர். புதன் பகவான் பேச்சு, அறிவு, புத்திசாலித்தனம், வணிகம் ஆகியவற்றின் காரகராக விளங்குகிறார். சூரிய பகவான் தன்னம்பிக்கை, தைரியம், ஆற்றல், தலைமைப்பண்பு ஆகியவற்றின் காரகராக விளங்குகிறார். இந்த இரண்டு சுப கிரகங்களின் இணைவு காரணமாக உருவாகும் புதாதித்ய ராஜயோகம் சில ராசிகளின் வாழ்க்கையில் நன்மைகளை தரவுள்ளது. அந்த அதிர்ஷ்ட ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
துலாம்
- புதாதித்ய ராஜயோகம் துலாம் ராசிக்காரர்களுக்கு நன்மைகளை வழங்க உள்ளது.
- ஜோதிடத்தின்படி இந்த ராஜயோகம் உங்கள் ஜாதகத்தில் முதல் வீடானலக்ன வீட்டில் உருவாகிறது.
- இதன் காரணமாக உங்கள் தன்னம்பிக்கை, தைரியம், ஆளுமை அதிகரிக்கும்.
- சமூகத்தில் உங்களுக்கான மரியாதை கிடைக்கும்.
- வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
- புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கலாம்.
- பொன், பொருள், வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும்.
- திருமணமாகாதவர்களுக்கு நல்ல இடத்தில் வரன் கூடி வரும்.
- இந்த காலகட்டத்தில் ஆரோக்கியம் மேம்படும்.
கடகம்
- கடக ராசிக்காரர்களுக்கு புதாதித்ய ராஜயோகம் பல வாய்ப்புகளை அளிக்க இருக்கிறது.
- பண வரவு உள்ளிட்ட ஏராளமான நன்மைகளைப் பெறுவீர்கள்.
- ஜாதகத்தில் நான்காவது வீட்டில் இந்த யோகம் உருவாகிறது.
- இதன் காரணமாக புதிய வாகனங்கள், சொத்துக்களை வாங்கி குவிப்பீர்கள்.
- புதிய தொழில் திட்டங்களில் ஒப்பந்தங்கள் செய்வீர்கள்.
- சொத்துக்களில் முதலீடுகள் செய்வதற்கு நல்ல வாய்ப்பு உள்ளது.
- உங்கள் தொழிலை பிற இடங்களுக்கு விரிவாக்கம் செய்யும் வாய்ப்புகளையும் பெறுவீர்கள்.
- வேலை மற்றும் வணிகத்தில் கணிசமான முன்னேற்றம் ஏற்படும்.
- இதன் காரணமாக லாபம் பன்மடங்காக பெருகும்.
மகரம்
- மகர ராசிக்காரர்கள் புதாத்திய ராஜயோகத்தால் பல நன்மைகளைப் பெறுவீர்கள்.
- இது உங்கள் ஜாதகத்தின் பத்தாவது வீட்டில் உருவாக இருக்கிறது.
- பத்தாவது வீடு தொழில் மற்றும் வணிகத்தின் வீடாகும்.
- இதன் காரணமாக வேலையில் புதிய உயரங்களை எட்டுவீர்கள்.
- சக போட்டியாளர்களை தோற்கடித்து வேலையில் முன்னேறிச் செல்வீர்கள்.
- இதன் காரணமாக பணியிடத்தில் புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள்.
- நிலுவையில் இருந்த வேலைகள் அனைத்தையும் முடிப்பீர்கள்.
- சமூகத்தில் உங்கள் அந்தஸ்து அதிகரிக்கும்.
- புதிய நிதி ஆதாயங்கள் காரணமாக உங்கள் பொன், பொருள், வசதிகள் உயரும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)