MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • புதாதித்ய ராஜயோகம் 2026: மே முதல் கோடீஸ்வரராகப்போகும் 3 ராசிகள்.. இனி பண மழை தான்!

புதாதித்ய ராஜயோகம் 2026: மே முதல் கோடீஸ்வரராகப்போகும் 3 ராசிகள்.. இனி பண மழை தான்!

Budhaditya Rajayoga 2026: புதாதித்ய ராஜயோகம் 2026 காரணமாக மே மாதம் முதல் 3 ராசிக்காரர்களின் வாழ்கை பொற்காலமாக மாறப்போகிறது. அவை என்னென்ன ராசிகள் என்பது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar r
Published : Apr 25 2026, 12:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
புதாதித்ய ராஜயோகம் பெறப்போகும் 3 ராசிகள்
Image Credit : AI

புதாதித்ய ராஜயோகம் பெறப்போகும் 3 ராசிகள்

ஜோதிட சாஸ்திரத்தின்படி ஒவ்வொரு கிரங்களும் ஒரு குறிப்பிட்ட காலவெளியில் தங்களின் ராசியை மாற்றி வருகின்றன. கிரகங்களின் பெயர்ச்சி 12 ராசிகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், அவ்வப்போது ராஜயோகங்களும் உருவாகி வருகின்றன. அந்த வகையில் சூரிய பகவானும், புதனும் ஒரே நேரத்தில் பெயர்ச்சி அடைய இருப்பதால் புதாதித்ய ராஜயோகம் உருவாக இருக்கிறது. 

அதாவது சூரியனும், புதனும் ஒரே நேரத்தில் மேஷ ராசியில் பெயர்ச்சி அடையும்போது ஏப்ரல் 30ம் தேதி முதல் புதாதித்ய ராஜயோகம் உருவாகிறது. இதன் காரணமாக 3 ராசிகள் ராஜயோகம் பெறப் போகின்றன. அவை என்னென்ன ராசிகள்? என்பது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
மேஷம்
Image Credit : Asianet News

மேஷம்

புதனும், சூரியனும் மேஷ ராசியில் கைகோர்ப்பது மே மாதம் முதல் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையை அடியோடு மாற்றப் போகிறது. உங்கள் பேச்சில் இனி கம்பீரம் பிறக்கும். சமூகத்தில் அஸ்தஸ்து உயரும். உங்களின் ஆலோசனையை தேடி பலரும் ஓடி வருவார்கள். சொந்தமாக தொழில் தொடங்குபவர்களுக்கு அற்புதமான காலக்கட்டம். ஐடி, வங்கித் துறையில் இருப்பவர்களுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும். 

நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த பூர்விக சொத்துகள் கைக்கு வரும். பணியிடங்களில் சம்பள உயர்வு, பதவி உயர்வு தேடி வரும். குடும்பத்தில் உறவுகள் பலப்படும். கணவன், மனைவி இடையே ஒற்றுமை மேலோங்கும். மாணவர்களின் கல்வி வளர்ச்சி மேம்படும். போட்டித் தேர்வுகளில் வெற்றி காண்பார்கள். புதன்கிழமைகளில் அருகில் உள்ள பெருமாள் கோயில்களுக்கு சென்று வழிபடுவது கூடுதல் அருளை கொடுக்கும்.

Related Articles

Related image1
வேலையில் ஜாக்பாட்! அடுத்த 60 நாட்களில் இந்த 4 ராசிகளுக்கு 'ப்ரமோஷன்' உறுதி - உங்க ராசி இருக்கா?
Related image2
மே 2026 ராசி பலன்: மேஷத்திற்குப் பண யோகம்! சிம்மத்திற்குப் பதவி உயர்வு! இந்த 4 ராசிகளுக்குக் கொண்டாட்டம் தான்!
34
சிம்மம்
Image Credit : Asianet News

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே.. மே மாதம் முதல் உங்கள் வாழ்வில் புதிய விடியல் ஏற்படப் போகிறது. நிதிச் சிக்கல்கள் தீர்ந்து கையில் பணம் புரளும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த கடன்கள் கைக்கு வரும். தொழில் புரிபவர்கள் தொழிலை விரிவாக்கம் செய்ய நல்ல நேரம் இது. மந்தமாக இருந்த வியாபாரம் சூடுபிடிக்கும். வேலை விஷயமாக வெளிநாடு செல்ல நினைத்தவர்களுக்கு நேரம் கைகூடி வரும். காரியத் தடைகள் நீங்கும்.

 குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறி மங்கல ஓசைகள் கேட்கும். பணியிடங்களில் சம்பள உயர்வுடன் புதிய பொறுப்புகளும் கிடைக்கும். உடல் உபாதைகள் நீங்கி ஆரோக்கியம் மேம்படும். ஞாயிற்றுக்கிழமைகளில் கோதுமையால் செய்த உணவை ஏழை எளியவர்களுக்கு தானமாக வழங்குவது மூலம் கூடுதல் நற்பலன்களை நீங்கள் பெற முடியும்.

44
கடகம்
Image Credit : Asianet News

கடகம்

புதாதித்ய ராஜயோகம் கடக ராசிக்காரர்களுக்கு பெரும் வெற்றியை தேடித் தரப் போகிறது. அரசு போட்டி தேர்வுகளுக்கு தயாராகி வருவபவர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கிறது. பணியிடங்களில் உங்கள் திறமைக்கு ஏற்ப அங்கீகாரமும், புதிய பொறுப்புகளும் தேடி வரும். பூர்விக சொத்து பிரச்சனைகள் முடிவுக்கு வரும். குடும்பத்தில் சகோதர, சகோதரிகளிடையே ஏற்பட்ட பிணக்குகள் தீர்ந்து ஒற்றுமை வலுப்படும்.

 மாணவர்களின் ஞாபக சக்தி மேம்பட்டு கல்வித்தரம் உயரும். திடீர் யோகம் அடித்து பணம் பல வழிகளிலும் வந்து பையை நிரப்பும். கடந்த சில மாதங்களாக இருந்த மன அழுத்தம் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். முடிந்தவரை ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவுவது அல்லது ஏழைகளுக்கு நிதி உதவி, ஆடை, பொருட்கள் வழங்குவது புதன் பகவானின் ஆசியை முழுமையாக உங்களுக்கு பெற்றுத் தரும்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ராசி பலன்
ஜோதிடம்
ஜோதிடம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
உச்ச குருவால் மேஷ ராசிக்கு நடக்கப்போகும் அதிசயம்.! அஷ்டலட்சுமி யோகம் கிடைக்கும்.! மேஷம் - குரு பெயர்ச்சி 2026 பலன்கள் மற்றும் பரிகாரங்கள்.!
Recommended image2
Weekly Horoscope: பணம், காதல், அதிர்ஷ்டம் யாரை தேடி வருகிறது? 12 ராசிகளின் துல்லியமான வார பலன்கள்
Recommended image3
Gajakesari Yoga: நீங்க இந்த ராசியா?.. கஜகேசரி யோகத்தால் பணம், பதவி, சொத்து வாய்ப்பு அதிகரிக்கும்.!
Related Stories
Recommended image1
வேலையில் ஜாக்பாட்! அடுத்த 60 நாட்களில் இந்த 4 ராசிகளுக்கு 'ப்ரமோஷன்' உறுதி - உங்க ராசி இருக்கா?
Recommended image2
மே 2026 ராசி பலன்: மேஷத்திற்குப் பண யோகம்! சிம்மத்திற்குப் பதவி உயர்வு! இந்த 4 ராசிகளுக்குக் கொண்டாட்டம் தான்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved