- Home
- Astrology
- Astrology: ஒரு வருடத்திற்கு பின் புதன் உருவாக்கும் பத்ர ராஜயோகம்.! 6 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழைதான்.!
Astrology: ஒரு வருடத்திற்கு பின் புதன் உருவாக்கும் பத்ர ராஜயோகம்.! 6 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழைதான்.!
ஒரு வருடத்திற்கு பின்னர் புதன் பகவான் கன்னி ராசியில் பத்ர ராஜயோகத்தை உருவாக்க இருக்கிறார். இந்த யோகத்தால் பலன் பெறும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

சொந்த ராசிக்கு செல்லும் புதன் பகவான்
ஜோதிட சாஸ்திரங்களின் படி கிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. அந்த வகையில் கிரகங்களின் இளவரசனாக இருக்கும் புதன் தற்போது தனது ராசியை மாற்ற இருக்கிறார். சந்திரனுக்கு அடுத்தபடியாக வேகமாக தனது ராசியை மாற்றுபவர் புதன் பகவான். புதன் படிப்பு, வியாபாரம், பேச்சு, புத்திசாலித்தனம் ஆகியவற்றுக்கு காரகராவார். குறுகிய காலத்தில் கிரகங்களை மாற்றுவதால் மற்ற கிரகங்களுடன் இணைந்து சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்குகிறார். தற்போது செப்டம்பர் மாதத்தில் தனது சொந்த ராசியான கன்னி ராசிக்குள் நுழைய இருக்கிறார். இதனால் பத்ர ராஜயோகம் உருவாகிறது. இந்த யோகம் ஒரு வருடத்திற்குப் பின் உருவாக உள்ளது.
பத்ர ராஜயோகம் என்றால் என்ன?
பத்ர ராஜயோகம் என்பது புதன் கிரகம் ஒரு ஜாதகத்தில் ஆட்சி அல்லது உச்சம் பெற்று கேந்திர ஸ்தானங்களான 1,4,7,10 ஆகிய வீடுகளில் அமர்ந்து சுப கிரகங்களின் பார்வையுடன் இருக்கும் பொழுது உருவாகிறது. இந்த யோகம் அறிவு, செல்வம், தொழில், முன்னேற்றம் மற்றும் சமூக மரியாதையை வழங்குவதாக அமைகிறது. இது ஒரு வலிமையான யோகமாகும். ஒரு ஜாதகருக்கு இந்த யோகம் புத்தி கூர்மை, வாக்கு வன்மை, வணிகத்தில் வெற்றி, நிதி ஸ்திரத்தன்மை ஆகியவற்றை வழங்குகிறது. இந்த யோகம் காரணமாக கல்வி, தொழில், வெளிநாட்டுப் பயணங்களில் முன்னேற்றம் கிடைக்கும். பத்ர ராஜயோகத்தால் பலன்களை அனுபவிக்கப் போகும் நான்கு ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
மிதுன ராசி
மிதுன ராசிக்கு புதன் அதிபதியாக இருப்பதால் பத்ர ராஜயோகம் இவர்களுக்கு சக்தி வாய்ந்ததாக அமைகிறது. இந்த யோகம் மிதுன ராசியினருக்கு வணிகத்தில் முன்னேற்றம், அறிவுத்திறன், பேச்சுத் திறனில் சிறப்பு ஆகியவை வழங்கும். தொழிலில் புதிய வாய்ப்புகள், வெளிநாட்டு தொடர்புகள் மற்றும் நிதி ஆதாயம் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் சிறந்த முன்னேற்றமும், ஆராய்ச்சி மற்றும் எழுத்துத் துறையில் வெற்றியும் கிடைக்கும். உதாரணமாக புதன் மிதுன ராசியில் உச்சம் பெற்று ஒன்று அல்லது பத்தாம் வீட்டில் இருக்கும் பொழுது தொழில் ரீதியாக வெற்றியும், சமூக அந்தஸ்தும் உயரும்.
கன்னி ராசி
கன்னி ராசியும் புதனின் ஆதிக்கத்தில் உள்ளதால் புதன் உருவாக்கும் இந்த பத்ர யோகம் இவர்களுக்கு தொழில் மற்றும் கல்வி சார்ந்த பலன்களை அள்ளிக் கொடுக்கும். கன்னி ராசியில் புதன் உச்சம் பெறுவதால் இந்த ராசிக்காரர்களுக்கு புத்திக் கூர்மை, நிதி ஸ்திரத்தன்மை, பதவி உயர்வு ஆகியவை கிடைக்கலாம். குறிப்பாக எழுத்து, பத்திரிக்கை, தகவல் தொழில்நுட்பம், ஆசிரியர் பணி ஆகிய துறைகளில் இருப்பவர்களுக்கு இந்த யோகம் மிகவும் சாதகமாக இருக்கும். கன்னி ராசிக்காரர்களுக்கு வெளிநாட்டு பயணங்கள் மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கான வாய்ப்புகளும் கிடைக்கலாம்.
துலாம் ராசி
துலாம் ராசிக்காரர்களுக்கு பாக்கிய ஸ்தானமான ஒன்பதாவது வீட்டில் புதன் பத்ர ராஜயோகத்தை உருவாக்குகிறார். இதன் காரணமாக நிதி, தொழிலில் முன்னேற்றம் கிடைக்கும். வெளிநாட்டு தொடர்புகள் கிடைக்கலாம். செய்து வரும் தொழிலை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புகள் கிடைக்கலாம். கல்வி சார்ந்த பயணங்கள் அதிகரிக்கும். இந்த யோகமானது துலாம் ராசிக்காரர்களுக்கு சமூகத்தில் மரியாதையும், உறவுகளில் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும். குறிப்பாக கலைத்துறையில் உள்ளவர்களுக்கும், வியாபாரத் துறையில் உள்ளவர்களுக்கும் இந்த யோகம் புதிய வாய்ப்புகளை உருவாக்கலாம்.
பிற ராசிகள்
- கும்ப ராசிக்காரர்களுக்கு புதன் ஐந்து அல்லது எட்டாம் வீட்டில் அமர்ந்து பத்ர ராஜயோகத்தை உருவாக்கினால் எதிர்பாராத வெற்றி, நிதி ஆதாயம், அறிவு சார்ந்த துறைகளில் வெற்றி கிடைக்கும். ஆராய்ச்சியில் புதிய கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பத் துறைகளில் முன்னேற்றம் காணப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். மாணவர்களுக்கு இந்த யோகம் கல்வியில் சிறந்த மதிப்பெண்களை பெற உதவும்.
- மேஷ ராசிக்காரர்களுக்கு புதன் ஆறாம் வீட்டில் அமர்ந்து பத்ர ராஜயோகத்தை உருவாக்குவதன் காரணமாக பணவரவு, புகழ், சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு மற்றும் பதவி உயர்வு கிடைக்கும்.
- கடக ராசிக்கு புதன் 12 ஆம் வீட்டில் இருந்தாலும் பத்ர ராஜ யோகத்தின் மூலம் வெளிநாட்டு பயணங்கள், தொழிலை விரிவாக்கும் வாய்ப்புகள் கிடைக்கலாம். எதிர்பாராத நிதி ஆதாயம், குடும்பத்தில் அமைதி, தொழிலில் வெற்றி, மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஆகியவை கிடைக்கும்.
புதன் பகவானின் அருளைப் பெற பரிகாரம்
பத்ர ராஜயோகத்தின் முழு பலன்களை பெறுவதற்கு புதன்கிழமைகளில் புதன் பகவானை வழிபடுவது சிறப்பைத் தரும். “ஓம் புதாய நம” என்கிற மந்திரத்தை 108 முறை ஜெபிக்கலாம். புதன்கிழமை விரதம் இருந்து புதன் பகவானின் அருளைப் பெறலாம். பச்சை நிற துணி, பச்சை மூங்கில் அல்லது பசுமாட்டிற்கு பசுந்தீவனம் தானம் செய்யலாம். புதன் பகவானுக்கு உரிய விஷ்ணு கோயில்களில் வழிபாடு செய்வது, புதன் ஹோரையில் பூஜை செய்வது நல்ல பலன்களைத் தரும். இந்த யோகமானது புதன் பகவானின் சுப அமைப்பால் உருவாக்கும் ஒரு யோகமாகும். இது 12 ராசிகளுக்கும் நல்ல பலன்களை கொடுத்தாலும் மேற்கூறிய ராசிகளுக்கு சிறப்பான பலன்களை தரும். புதன் பகவானை வழிபடுவதன் மூலமும் பரிகாரங்களை மேற்கொள்வதன் மூலமும் இந்த யோகத்தின் பலன்களை முழுமையாகப் பெறலாம்.
(பொறுப்பு துறப்பு: இந்த தகவல்கள் ஜோதிடத்தின் பொதுவான கணிப்புகள் அடிப்படையில் அமைந்தவை.தனிப்பட்ட ஜாதகம், கிரக நிலைகள் மற்றும் தசா புத்திகளை பொறுத்து இந்த பலன்கள் மாறுபடலாம். எனவே முழுமையான பலன்களை அறிவதற்கு அனுபவமிக்க ஜோதிடரை அணுகி ஆலோசனை மேற்கொள்வது நல்லது)