- Home
- Astrology
- Birth Stars : இந்த 5 நட்சத்திரங்களில் பிறந்தவங்க வாழ்க்கையில உச்சத்தை தொடுவாங்க.! இவங்க வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.!
Birth Stars : இந்த 5 நட்சத்திரங்களில் பிறந்தவங்க வாழ்க்கையில உச்சத்தை தொடுவாங்க.! இவங்க வெற்றியை யாராலும் தடுக்க முடியாது.!
Birth Stars with Billionaire Yoga : ஜோதிடப்படி, சில நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் வாழ்க்கையில் உச்சம் தொடுவார்கள். மிருகசீரிடம், சித்திரை, திருவோணம் போன்றவை இதில் அடங்கும். அதுகுறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

Birth Stars with Billionaire Yoga
கரியரில் வெற்றி பெறுவது எல்லோருடைய கனவு. ஆனால் சிலர் இயல்பாகவே வாழ்க்கையில் வேகமாக முன்னேறுவார்கள். இன்னும் சிலரோ, பிறந்த தேதி மற்றும் நட்சத்திரம் காரணமாக கரியரில் அபரிமிதமான வளர்ச்சி காண்பார்கள். ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒருவரின் பிறந்த நட்சத்திரம் அவரது குணம், சிந்தனை, முடிவெடுக்கும் திறன் மட்டுமல்ல, கரியர் பாதையையும் பாதிக்கிறது.
கோடீஸ்வர யோகம் கொண்ட நட்சத்திரங்கள்
சில நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு இயல்பாகவே தலைமைப் பண்பு, புத்திசாலித்தனம், விடாமுயற்சி அதிகமாக இருக்குமாம். அதனால் அவர்கள் வாழ்க்கையில் உயர்ந்த இடங்களை அடைவார்கள் என ஜோதிட நிபுணர்கள் கூறுகின்றனர். அந்த நட்சத்திரங்கள் எவை, அவற்றின் சிறப்பு குணங்கள் எப்படி வெற்றிக்கு வழிவகுக்கின்றன என்பதை இங்கே தெரிந்துகொள்வோம்.
மிருகசீரிடம்
மிருகசீரிட நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பொதுவாகவே ஆர்வம் அதிகம். புதிய விஷயங்களைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் இவர்களை ஆராய்ச்சி, தொழில்நுட்பம், அறிவியல் போன்ற துறைகளில் முன்னோக்கி கொண்டு செல்லும். பிரச்சனைகளை ஆழமாக அலசி ஆராயும் குணம் இருப்பதால், இவர்கள் தங்கள் துறைகளில் நிபுணர்களாக உருவெடுப்பார்கள்.
சித்திரை
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களின் படைப்பாற்றல் மற்றும் ஒழுக்கத்தால் தனித்து நிற்பார்கள். டிசைன், கலை, கட்டிடக்கலை, மீடியா போன்ற துறைகளில் இவர்கள் சிறப்பாகச் செயல்படுவார்கள் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களின் கடின உழைப்பால் பிறரைக் காட்டிலும் விரைவான முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
திருவோணம்
திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், ஒரு விஷயத்தைக் கேட்பது, புரிந்துகொள்வது, பின்னர் சரியான முடிவை எடுப்பதில் கைதேர்ந்தவர்கள். இந்தத் திறன்கள் இவர்களுக்கு மேனேஜ்மென்ட், நிர்வாகம், டீச்சிங் போன்ற துறைகளில் வெற்றியைத் தேடித் தரும். ஒருமுறை இலக்கை நிர்ணயித்துவிட்டால், அதை அடையும் வரை உழைப்பது இவர்களின் தனிச்சிறப்பு.
உத்திரம்
உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இயல்பாகவே தலைமைப் பண்புகளைக் கொண்டிருப்பார்கள். ஒரு குழுவை வழிநடத்துவது, பொறுப்புகளை ஏற்பது, பெரிய முடிவுகளை எடுப்பது போன்றவை இவர்களுக்கு மிகவும் எளிதானது. இதனால் கார்ப்பரேட், அரசியல், நிர்வாகத் துறைகளில் இவர்கள் உயர் பதவிகளை அடைவார்கள் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
அவிட்டம்
அவிட்ட நட்சத்திரக்காரர்கள் தைரியம், கடின உழைப்பு, ஒழுக்கம் போன்ற குணங்களால் கரியரில் முன்னேறுவார்கள். இவர்கள் ரிஸ்க் எடுக்கத் தயங்க மாட்டார்கள், புதிய வாய்ப்புகளை உடனே பயன்படுத்திக்கொள்வார்கள். அதனால் பிசினஸ், ஃபைனான்ஸ், ஸ்போர்ட்ஸ் போன்ற போட்டி நிறைந்த துறைகளில் இவர்கள் நல்ல நிலையை அடையும் வாய்ப்புகள் அதிகம்.
ஜோதிடர்களின் கூற்றுப்படி, இந்த நட்சத்திரக்காரர்களுக்கு சனி மற்றும் செவ்வாய் கிரகங்களின் அனுகூலம் இருப்பதால், சற்றுக் கடினமாக உழைத்தாலே பெரிய வெற்றிகளைப் பெறுவார்கள்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.

