- Home
- Astrology
- Birth Month: இந்த 4 மாதத்தில் பிறந்தவங்க பாறை மாதிரி மன வலிமை கொண்டவங்களாம்.! இவங்க கிட்ட கூட நெருங்க முடியாது.!
Birth Month: இந்த 4 மாதத்தில் பிறந்தவங்க பாறை மாதிரி மன வலிமை கொண்டவங்களாம்.! இவங்க கிட்ட கூட நெருங்க முடியாது.!
ஜோதிட சாஸ்திரங்களின்படி நான்கு மாதங்களில் பிறந்தவர்கள் அசுரமான வலிமையையும், தைரியத்தையும் கொண்டிருப்பார்கள் என்று கூறப்படுகிறது. அந்த மாதங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ஜனவரி மாதம்
ஜனவரி மாதத்தில் பிறந்தவர்களுக்கு இயல்பாகவே உறுதியான மனநிலை உண்டு. இவர்கள் தங்கள் இலக்குகளை அடைய கடின உழைப்பையும், ஒழுக்கத்தையும் நம்புகிறார்கள். தோல்விகளை எதிர்கொள்ளும் பொழுது எளிதில் மனம் தளர மாட்டார்கள். ஒரு பிரச்சனையை ஆழமாக பகுப்பாய்வு செய்து அதற்கு தீர்வு காணும் திறன் உண்டு. உதாரணமாக ஒரு தொழில் முனைவோர் தனது முதல் முயற்சியில் தோல்வி அடைந்தாலும், தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு மீண்டும் முயற்சிக்கும் மன உறுதியை கொண்டிருப்பர். இவர்களின் தைரியம் சமூகத்தில் புதிய பாதைகளை உருவாக்குவதில் வெளிப்படுகிறது. புதிய யோசனைகளை முன் வைப்பதற்கும், மரபுகளை உடைப்பதற்கும் இவர்கள் தயங்குவதில்லை. புதிய தொழில்நுட்பங்களை கற்றுக்கொண்டு, புதிய உத்திகளை கையாண்டு முன்னேறும் மன உறுதி இவர்களிடத்தில் உண்டு.
ஏப்ரல் மாதம்
ஏப்ரல் மாதத்தில் பிறந்தவர்கள் உறுதியான மனநிலை கொண்டவர்கள். இவர்கள் தங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி, எந்த சூழ்நிலையிலும் தெளிவாக சிந்திக்கும் திறனை பெற்று இருக்கிறார்கள். தனிப்பட்ட இழப்புகளையோ அல்லது தொழில் சார்ந்த பின்னடைவுகளையோ எதிர்கொள்ளும் பொழுது தங்கள் மனதை உறுதியாக வைத்திருக்கிறார்கள். ஒரு ஏப்ரல் மாத பிறவி தனது குடும்பத்தில் பெரிய நெருக்கடியை எதிர்கொண்டாலும் அதற்கு அமைதியாக தீர்வு காண முயற்சிப்பார். இவர்களின் தைரியம் தங்களுக்கு நியாயமாக தோன்றும் விஷயங்களுக்காக போராடுவதில் வெளிப்படுகிறது. தலைமைப் பண்பு மற்றும் முன் முயற்சியால் எந்த ஒரு சவாலையும் எதிர்கொள்ள இவர்கள் தயங்குவதில்லை. உதாரணமாக ஏப்ரல் மாதத்தில் பிறந்தவர்கள் பணியிடத்தில் ஒரு நியாயமற்ற முடிவுக்கு எதிராக குரல் கொடுக்க தைரியமாக முன்வருவார்.
ஆகஸ்ட் மாதம்
ஆகஸ்ட் மாதத்தில் பிறந்தவர்களுக்கு இயற்கையிலேயே தலைமைத்துவ பண்புடன், மனவலிமையும் அதிகம் உள்ளது. இவர்கள் எந்தவொரு புயலிலும் அசைக்க முடியாத மனதை வைத்திருக்கிறார்கள். எளிமையாக சொன்னால் இவர்கள் ஒரு பாறை உறுதி கொண்ட மன திடம் படைத்தவர்கள். தங்கள் இலக்குகளை அடைவதற்கு தடைகளை உடைத்தெறிய இவர்கள் தயங்குவதில்லை. தங்களது தொழிலில் பெரிய இடர்பாடுகளை எதிர்கொண்டாலும், தொடர் முயற்சியால் அதை மாற்றி அமைத்து முன்னேறுவர். இவர்களின் தைரியம் பொது இடம் இடங்களில் தங்களை வெளிப்படுத்துவதிலும், மற்றவர்களை ஊக்குவிப்பதிலும் தெரிகிறது. இவர்கள் தங்களுடைய ஆளுமையால் பெரிய கூட்டத்தையே தலைமை ஏற்க முன் வருவார்கள். ஆகஸ்ட் மாதத்தில் பிறந்தவர்கள் ஒரு சமூக இயக்கத்தை தொடங்கினால் அதை வெற்றிகரமாக வழி நடத்திச் செல்லும் அளவிற்கு ஆளுமைத் திறன் படைத்தவர்கள்.
அக்டோபர் மாதம்
அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்கள் சமநிலையான மனநிலையும், ஆழமான மன உறுதியும் கொண்டவர்கள். அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்கள் தங்கள் உணர்ச்சிகளையும் மனநிலையையும் சமநிலைப்படுத்துவதில் கை தேர்ந்தவர்கள். இதன் காரணமாக எந்த ஒரு சவாலையும் திறம்பட எதிர்கொள்கின்றனர். தங்கள் மனதை இரும்புக் கோட்டையாக உருவாக்கி, புயலை தாங்கும் வலிமை கொண்டவர்கள். தங்களது தொழிலில் பெரிய மாற்றங்களை எதிர் கொண்டாலும் அதை அமைதியாக முடிவெடுத்து முன்னேறிச் செல்வர். இவர்களின் தைரியம் உண்மையை நிலை நாட்டுவதற்கும் தங்கள் நம்பிக்கைகளை பாதுகாப்பதற்கும் வெளிப்படுகிறது. இவர்கள் நியாயத்திற்காக தைரியமாக போராடுவர். ஒரு சமூகப் பிரச்சனைக்காக பொதுவெளியில் குரல் கொடுக்க இவர்கள் தயங்குவதில்லை.
(குறிப்பு: ஜனவரி, ஏப்ரல், ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்கள் அசுரமான வலிமையும், எல்லையற்ற தைரியமும் கொண்டவர்கள். இவர்களின் உறுதியும், தைரியமும் அவர்களை வாழ்க்கையில் பல சவால்களைக் கடந்து வெற்றிகரமாக முன்னேறிச் செல்ல உதவுகிறது. இந்த மாதங்களில் பிறந்தவர்கள் தங்கள் தனித்துவமான ஆளுமை மூலம் சமூகத்திற்கு முன்மாதிரியாகவும், உத்வேகமாகவும் திகழ்கிறார்கள். இந்த தகவல்கள் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் ஜோதிடர்களின் கருத்துக்களின் பெறப்பட்டவை மட்டுமே. இவை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. இதன் நம்பகத்தன்மைக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)