பாத்ரூமில் இந்த '4' பொருட்கள் வைத்தால் போதும்.. கண் திருஷ்டி நீங்கும்!
வாஸ்து சாஸ்திரத்தின் படி பாத்ரூமில் சில பொருட்களை வைத்தால் எதிர்மறை ஆற்றல் விலகி ஓடும். வாழ்கையில் மகிழ்ச்சி அமைதி உண்டாகும்.

Bathroom Vastu Tips :
வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டின் ஒவ்வொரு இடத்திலும் எதிர்மறை மற்றும் நேர்மறை ஆற்றல் இருக்கும். அதிலும் குறிப்பாக வீட்டில் இருக்கும் பாத்ரூம் எதிர்மறை ஆற்றலை உருவாக்கும் இடங்களில் ஒன்றாகும். ஏனெனில் இந்த இடம் ராகு மற்றும் கேது போன்ற எதிர்மறை கிரகங்களுடன் தொடர்புடையது என்பதால் தான். இதனால் வீட்டில் பணப் பிரச்சனைகள் மற்றும் உடல் நல தொடர்பான பிரச்சனைகள் அதிகரிக்கும். ஆனால் சில பொருட்களை பாத்ரூமில் வைப்பதன் மூலம் வீட்டிலிருந்து எதிர்மறை சக்தியை நீக்கிவிடலாம். மேலும் இதன் காரணமாக வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் அமைதி பெருகும்.
உப்பு
பாத்ரூமில் ஒரு கண்ணாடி பவுலில் சிறிதளவு கல் உப்பு வைத்தால் அங்கிருந்து எதிர்மறை சக்தி விலகி ஓடும். ஏனெனில் உப்பு ராகு தோஷத்தை தனித்து வீட்டில் நேர்மறை ஆற்றலை கொண்டு வரும். மேலும் இதை ஒவ்வொரு வாரமும் மாற்ற வேண்டும்.
கற்பூரம்
பாத்ரூமில் தினமும் அல்லது வாரத்திற்கு இரண்டு முறை கற்பூரத்தை எரித்தால் அங்கிருக்கும் எதிர்மறை சக்தி அழிக்கப்படும். மேலும் கற்பூரத்தில் இருந்து வரும் நறுமணம் வாசனையை தருவது மட்டுமின்றி நேர்மறை ஆற்றலையும் அதிகரிக்க செய்யும்.
கிராம்பு
உங்க வீட்டு பாத்ரூமில் ராகு அதிக தாக்கத்தை ஏற்படுத்தினால் குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே பிரச்சனைகள் அதிகரிக்கும் எனவே இதிலிருந்து விடுபட பாத்ரூமில் 5 கிராம்புகளை ஒரு கிண்ணத்தில் வைத்து வைக்கவும். கிராம்பில் இருக்கும் சக்தி ராகுவின் எதிர்மறை விளைவுகளை குறைக்கும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அது மாற்ற வேண்டும்.
படிகாரம்
வாஸ்து சாஸ்திரத்தின் படி படிகாரம் மிகவும் பயனுள்ள பொருட்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இது எதிர்மறை சக்தியை உறிஞ்சும். எனவே உங்கள் வீட்டு பாத்ரூமில் எதிர்மறை சக்தி அதிகமாக இருந்தால் அங்கே ஒரு படிகார துண்டை வைக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் அதை மாற்ற மறக்காதீர்கள்.
நினைவில் கொள்
வாஸ்து சாஸ்திரத்தின் படி உங்கள் வீட்டு பாத்ரூமில் எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். அழுக்காக இருந்தால் எதிர்மறை சக்தி அதிகரிக்கும். அதுபோல உடைந்த பொருட்களை பாத்ரூமில் வைக்க வேண்டாம்.