- Home
- Astrology
- Baba Vanga Weekly Predictions: ஜூன் 22 முதல் 28 வார ராசிபலன்.. பாபா வாங்கா சொன்ன 'அந்த' 5 ராசிகள்! அடிக்கபோகும் மெகா ஜாக்பாட்!
Baba Vanga Weekly Predictions: ஜூன் 22 முதல் 28 வார ராசிபலன்.. பாபா வாங்கா சொன்ன 'அந்த' 5 ராசிகள்! அடிக்கபோகும் மெகா ஜாக்பாட்!
Baba Vanga: பாபா வாங்காவின் கணிப்புப்படி, ஜூன் 22 முதல் 28 வரையிலான வாரம் 5 ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும். இந்த ராசியினருக்கு இந்த காலகட்டத்தில் பண மழையும், வெற்றியும் குவியும் என கூறப்படுகிறது.

ஜூன் 22 முதல் 28 வரையிலான ராசி பலன்
உலகளவில் பிரபல பாபா வாங்காவின் கணிப்புகள் அப்படியே நடந்துள்ள நிலையில் ஜூன் 22 முதல் 28 வரையிலான வாரம் 5 ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கு போகிறதாம். இந்த காலகட்டத்தில் அவர்களுக்கு பண மழையும், வெற்றியும் குவியும் என்று கூறப்படுகிறது. உங்கள் ராசி இதில் இருக்கிறதா என்பதை பார்க்கலாம்.
ரிஷப ராசி
ரிஷப ராசிக்காரர்களுக்கு ஜூன் 22 முதல் 28 வரை நல்ல பண வரவு இருக்கும். நீங்கள் நல்ல காரியங்கள் செய்வீர்கள். புதிய நபர்களுடன் உங்கள் பழக்கம் அதிகரிக்கும். வேலைக்குச் செல்லும் நபர்கள் நல்ல லாபத்தப் பெறுவார்கள்.
கடக ராசி
கடக ராசிக்காரர்களுக்கு இந்த புதிய வாரம் உங்களுக்கு சிறப்பாக அமையப்போகிறது. இந்த நேரத்தில் உங்களுக்குப் புதிய வருமான வழிகள் திறக்கும். நிலுவையில் உள்ள வேலையை நீங்கள் சரியான நேரத்தில் செய்து முடிப்பீர்கள். உங்கள் கடின உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும்.
துலாம் ராசி
துலாம் ராசிக்காரர்களுக்கு ஜூன் 22 முதல் 28 வரையிலான காலம் நிம்மதியைத் தரும். உங்கள் வாழ்க்கையில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் இப்போது சரியாகிவிடும். வீட்டில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். சில விஷயங்கள் நீங்கள் விரும்பியபடியே நடக்கும். உடல்நலம் குறித்து நீங்கள் கவலைப்படத் தேவையில்லை.
Astrology: இந்த 4 ராசிக்காரங்கதான் உலகத்திலேயே 'பெஸ்ட் அப்பா'... உங்க ராசி இதுல இருக்கா?
மகர ராசி
பாபா வாங்காவின் கணிப்பின்படி, இந்த புதிய வாரம் வேலைக்குச் செல்லும் நபர்களுக்குப் பொன்னான வாய்ப்புகளைக் கொண்டு வரும். இந்த காலகட்டத்தில், உங்கள் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். நீங்கள் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதில் மிகவும் ஆர்வமாக இருப்பீர்கள். மேலும், புதிய வருமான ஆதாரங்கள் உங்களுக்கு உருவாகும்.
கும்ப ராசி
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த புதிய வாரம் அதிர்ஷ்டமானதாக இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் பயணம் செய்ய வாய்ப்பு கிடைக்கும். ஆன்மீக காரியங்களில் உங்கள் ஆர்வம் அதிகரிக்கும். உங்கள் கடின உழைப்பு வெற்றி பெறும். மேலும், நீங்கள் சில புதிய நபர்களுடன் தொடர்பில் இருப்பீர்கள். உங்களுக்கு மன அமைதி கிடைக்கும். சமூகத்தில் உங்கள் மீது ஒரு புதிய பிம்பம் உருவாகும்.

