- Home
- Astrology
- Zodiac Signs : மேஷம் முதல் மீனம் வரை – ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கு? இதோ பலன் அண்ட் பரிகாரங்கள்!
Zodiac Signs : மேஷம் முதல் மீனம் வரை – ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கு? இதோ பலன் அண்ட் பரிகாரங்கள்!
August Month Rasi Palan in Tamil : மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கும் ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்க போகிறது என்பது குறித்து இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்.

12 ராசிகளுக்கான ஆகஸ்ட் மாத ராசி பலன்கள்
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ஆகஸ்ட் 2025 மாத ராசி பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம். இது வெறும் பொதுப்பலன்கள் மட்டுமே. உங்களது தனிப்பட்ட ஜாதகத்தில் உள்ள தசா புத்தி, கிரக நிலைகள் இருக்கும் மற்றும் பார்க்கும் இடங்கள், ராசி மற்றும் நட்சத்திரங்களின் படி பலன்கள் மாறுபடலாம். ஆதலால் இது பொதுவான பலன்கள் மட்டுமே. ஆனால், உங்களுக்கு நடக்கும் சம்பவங்களையும் இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் பலன்களையும் வைத்து உங்களை நீங்கள் சோதித்துக் கொள்ளலாம். சரி பலன்கள் மற்றும் பரிகாரங்கள் பற்றி பார்க்கலாம்.
மேஷ ராசி (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம்)
பொதுவாக ஆகஸ்ட் மாதத்தைப் பொறுத்த வரையில் மேஷ ராசிக்கு கலவையான பலன்களை எதிர்பார்க்கலாம். முதல் பாதியில் சூரியன் 4ஆவது வீட்டிலும், 2ஆம் பாதியில் 5ஆவது வீட்டிலும் சஞ்சரிப்பதால் சாதகமான பலன் கிடைக்கலாம். இந்த மாதம் முழுவதும் செவ்வாய் 6ஆவது வீட்டில் இருப்பதால் நல்ல பலன்கள் கிடைக்கும். இதே போன்று தொழில்காரகனான புதன் பகவான் இந்த மாதம் முழுவதும் 4ஆவது வீட்டிலும், அதன் பிறகு 5 ஆவது வீட்டிலும் சஞ்சரிக்கிறார். இதனால் புதன் உங்களுக்குச் சாதகமான பலன்களைத் தருவார்.
மேஷம் ராசிக்கான ஆகஸ்ட் மாத ராசி பலன்கள்
குரு உங்களுக்கு 3ஆவது வீட்டில் மிதுன ராசியில் இருக்கிறார். ஆகஸ்ட் 13 வரை ராகுவின் நட்சத்திரத்திலும், அதன் பிறகு குருவின் சொந்த நட்சத்திரத்திலும் இருப்பதால் கலவையான பலன்கள் கிடைக்கும். ஆகஸ்ட் 13க்கு பிறகு நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம். சுக்கிரன் ஆகஸ்ட் 21 வரை 3ஆவது வீட்டிலும், பிறகு 4ஆவது வீட்டிலும் இருப்பதால், பொதுவாக நல்ல பலன்கள் கிடைக்கும். சனி உங்கள் பன்னிரண்டாம் வீட்டில் மீனம் ராசியில் இருக்கிறார். ஆகஸ்ட் 3 வரை கேதுவின் நட்சத்திரத்திலும், அதன் பிறகு புதனின் நட்சத்திரத்திலும் இருப்பதால், பொதுவாக சாதகமான பலன்கள் குறைவு. ராகு உங்கள் லாப வீட்டில் கும்ப ராசியில் குருவின் நட்சத்திரத்தில் இருக்கிறார், இது பொதுவாக நல்ல பலன்களைத் தரும். கேது உங்கள் ஐந்தாம் வீட்டில் சஞ்சரிக்கிறார், இது கலவையான பலன்களைக் கொடுக்கும்.
மேஷ ராசி பலன்கள் அண்ட் பரிகாரங்கள்
வேலை மாற்றம் செய்ய விரும்புபவர்களுக்குச் சாதகமாக இருக்கும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் வெற்றி பெறும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் இருக்கும். வீடு மற்றும் குடும்ப விஷயங்களில் சராசரி பலன்கள் இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். ஒருவருக்கொருவர் முழு நேரத்தையும் செலவிடுவீர்கள். பொருளாதாரத்தில் நல்ல முடிவுகளை எதிர்பார்க்கலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
பரிகாரம்:
தேவைப்படுபவர்களுக்கு உணவு தானம் செய்யுங்கள்.
ரிஷப ராசி (கார்த்திகை 2, 3, 4-ம் பாதம், ரோகிணி, மிருகசீரிஷம் 1, 2-ம் பாதம்)
ரிஷப ராசிக்கான ஆகஸ்ட் மாத பலன்களை பார்க்கையில் கடந்த மாதத்தை விட சிறந்த பலனை எதிர்பார்க்கலாம். சூரியன், செவ்வாய், குரு, சுக்கிரன், சனி, ராகு ஆகிய கிரகங்களின் அடிப்படையில் ரிஷப ராசியினருக்கு இந்த மாதம் சாதகமான பலன்கள் கிடைக்கலாம். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு. மாணவர்களுக்கு கல்வியில் அதிக கவனம் செலுத்த வேண்டும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் வரலாம். நிதி விஷயங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும். சேமிப்பு அதிகரிக்கும்.
பரிகாரம்: முருகன் வழிபாடு வெற்றி தரும்.
மிதுன ராசி (மிருகசீரிஷம் 3, 4-ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ம் பாதம்)
மிதுன ராசிக்கான ஆகஸ்ட் மாத ராசி பலன்களை பார்க்கையில் சனி, ராகு, குரு, சூரியன், சுக்கிரன் மற்றும் செவ்வாய் கிரகங்களின் அடிப்படையில் நல்ல பலன்கள் கிடைக்கலாம். கல்வியில் கவனம் செலுத்த வேண்டும். உறவுகளில் சில சமயங்களில் கருத்து வேறுபாடுகள் வரலாம். நிதி நிலைமை சீராக இருக்கும்.
கடகம் ராசிக்கான ஆகஸ்ட் மாத ராசி பலன்கள் (புனர்பூசம் 4-ம் பாதம், பூசம், ஆயில்யம்)
கடக ராசியினரைப் பொறுத்த வரையில் குரு, சனி, ராகு, செவ்வாய், சூரியன் ஆகிய கிரகங்களின் அடிப்படையில் சராசரியை விட சிறந்த பலன்களைப் பெறலாம். உங்கள் கடின உழைப்பிற்கு 100% பலன் கிடைக்காவிட்டாலும், பெரிய அளவில் வெற்றி கிடைக்கும். போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் கடின உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். காதல் வாழ்க்கையில் நல்ல இணக்கம் இருக்கும். ஆனால் செவ்வாய் மற்றும் சனியின் தாக்கத்தால் பரஸ்பர வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். திருமண விஷயங்களுக்குச் சராசரியான பலன்கள் கிடைக்கும்.
பரிகாரம்:
அசைவ உணவு, மது மற்றும் ஆபாசம் போன்றவற்றைத் தவிர்ப்பது நன்மை அளிக்கும்.
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1-ம் பாதம்) ராசிக்கான ஆகஸ்ட் மாத பலன்கள்
சிம்ம ராசியைப் பொறுத்த வரையில் வேலையில் சிறப்பாக செயல்பட்டு பாராட்டு பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் கொஞ்சம் ரிஸ்க் எடுப்பதை இப்போதைக்கு தள்ளி வைப்பது நல்லது. கல்வியில் கவனம் செலுத்தினால் வெற்றி உண்டாகும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். குடும்ப உறுப்பினர்களுடன் நேரம் ஒதுக்க வேண்டும். கணவன், மனைவி இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். நிதி நிலையைப் பொறுத்த வரையில் ஓரளவு இருக்கும். பெரிதாக இருக்காது.
பரிகாரம்:
விநாயகர் வழிபாடு உங்களுக்கு வெற்றி தரும்.
கன்னி (உத்திரம் 2, 3, 4-ம் பாதம், அஸ்தம், சித்திரை 1, 2-ம் பாதம்) ராசிக்கான ஆகஸ்ட் மாத ராசி பலன்கள்:
கன்னி ராசியைப் பொறுத்த வரையில் ஆகஸ்ட் மாதம் நல்ல பலன் கிடைக்கும். குடும்பத்தில் உடன் பிறந்தவர்களுடன் விட்டுக் கொடுத்து செல்வது நன்மை அளிக்கும். தொழில், வியாபாரம் மற்றும் அலுவலகத்தில் சிறப்பாக செயல்பட்டு ஆதரவு பெறுவீர்கள். உடன்பிறந்தவர்களுடனான உறவு சராசரியாக இருக்கும். காதல் திருமணம் செய்ய விரும்புபவர்களுக்குச் சாதகமான மாதம். திருமண வாழ்க்கையில் சில கருத்து வேறுபாடுகள் வரலாம். நிதி விஷயங்களில் சாதகமான பலன்கள் கிடைக்கும். லாபம் மற்றும் சேமிப்பு அதிகரிக்கும்.
பரிகாரம்:
கோயிலில் இனிப்பு பிரசாதங்களை கொடுக்க நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.
துலாம் (சித்திரை 3, 4-ம் பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3-ம் பாதம்) ராசிக்கான ஆகஸ்ட் மாத பலன்கள்:
துலாம் ராசிக்கு ஆகஸ்ட் மாத ராசி பலன்கள் வளர்ச்சியை தரும் மாதமாக இருக்கும். வேலையில் சிறப்பாக செயல்படும் நீங்கள், தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். நிதி நிலைமை மேம்படும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கூடுமான அளவில் கவனம் செலுத்த வேண்டும்.
பரிகாரம்:
சிவபெருமான் வழிபாடு உடல் ஆரோக்கியத்தை கொண்டு வந்து தரும். தடைகள் நீங்கும்.
விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை) ராசிக்கான ஆகஸ்ட் மாத ராசி பலன்கள்:
விருச்சிக ராசியைப் பொறுத்த வரையில் ஆகஸ்ட் மாதத்தில் அப் அண்ட் டவுன் இருக்கும். அலுவலகத்தில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஓரளவு சிறப்பான பலனை எதிர்பார்க்கலாம். வேலை மாற்றம் செய்யும் எண்ணம் மேலோங்கும். படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் இருக்கும்.
பரிகாரம்:
துர்க்கை அம்மன் வழிபாடு தன்னம்பிக்கை, தைரியம் தரும். கடன் பிரச்சனை இருந்தால் தீரும்.
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1-ம் பாதம்) ராசிக்கான ஆகஸ்ட் மாத ராசி பலன்கள்:
கலவையான பலனை எதிர்பார்க்கலாம். வேலை துறையில் விரும்பிய சாதனைகளை அடைய அதிக கடின உழைப்பு தேவைப்படலாம். ஆனால் தொடர்ச்சியான கடின உழைப்பு வெற்றியை அடைய முற்றிலும் உதவியாக இருக்கும். செவ்வாய் மாதம் முழுவதும் உங்கள் தொழில் நிலையில் இருக்கும் மற்றும் சனி செவ்வாயின் அம்சத்தையும் பார்க்கிறார். புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. நன்றாக படித்தால் வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். பணப்பற்றாக் குறை நீங்க கூடுதலாக உழைக்க வேண்டி வரும்.
பரிகாரம்:
சிவன் மற்றும் தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்மை தரும்.
மகரம் (உத்திராடம் 2, 3, 4-ம் பாதம், திருவோணம், அவிட்டம் 1, 2-ம் பாதம்) ராசிக்கான ஆகஸ்ட் மாத ராசி பலன்கள்:
சில பிரச்சனைகள் வரலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். குடும்ப விஷயங்களில் கலவையான பலன்களை எதிர்பார்க்கலாம். சனியின் நல்ல நிலையால் குடும்பத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும். காதல் உறவுகளில் கூடுதல் எச்சரிக்கை தேவை. திருமண வாழ்க்கையில் சிறு சிறு முரண்பாடுகள் வரலாம்.
பரிகாரம்:
அரிசி மற்றும் வெல்லம் தானம் செய்ய நல்ல பலன்கள் கிடைக்கும்.
கும்பம் (அவிட்டம் 3, 4-ம் பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ம் பாதம்) ராசிக்கான ஆகஸ்ட் மாத பலன்கள்:
ஆகஸ்ட் மாதத்தைப் பொறுத்த வரையில் கும்பம் ராசிக்கு சாதகமான மாதமாக இருக்கும். வியாபாரத்தில் கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். நிதி நிலை சீராக இருக்கும். படிப்பில் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
பரிகாரம்:
சனிக்கிழமை தோறும் சனி பகவானுக்கு எள் விளக்கேற்றி வழிபாடு செய்ய நல்ல பலன்கள் கிடைக்கும்.
மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) ராசிக்கான ஆகஸ்ட் மாத ராசி பலன்கள்:
மீனம் ராசிக்கான 2025 ஆகஸ்ட் மாத ராசி பலன்களை பார்க்கையில் சவால் நிறைந்த மாதமாக இருக்கும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பணியிடத்தில் சவால்கள் இருக்கலாம். வியாபாரத்தில் கவனமாக இருக்க வேண்டும். புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. குடும்ப உறவுகளில் சீராக இருக்க வேண்டும். புதிய வேலை கிடைக்க தாமதம் ஏற்படலாம். ஏழரை சனி நடக்கும் காலம் என்பதால் எந்த விஷயமாக இருந்தாலும் பொறுமையாகவும், நிதானமாகவும் செயல்பட வேண்டும்.
பரிகாரம்:
வியாழக்கிழமை தோறும் குரு பகவான் வழிபாடு செய்ய எல்லா நன்மைகளும் உண்டாகும்.