- Home
- Astrology
- Astrology: பாவ கிரகமான கேதுவின் நட்சத்திரத்திற்கு செல்லும் புதன். ! நடக்கப்போகும் அதிரடி மாற்றங்கள்.!
Astrology: பாவ கிரகமான கேதுவின் நட்சத்திரத்திற்கு செல்லும் புதன். ! நடக்கப்போகும் அதிரடி மாற்றங்கள்.!
வேத ஜோதிடத்தின்படி ஆகஸ்ட் 30 அன்று புதன் பகவான் கேதுவின் மக நட்சத்திரத்தில் நுழையப் போகிறார். இதன் காரணமாக மூன்று ராசிக்காரர்கள் அனைத்து துறைகளிலும் மகத்தான வெற்றியை பெற உள்ளனர். அது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

புதன் பெயர்ச்சி 2025
ஜோதிட சாஸ்திரத்தில் புதன் பகவான் மிகவும் சக்தி வாய்ந்த கிரகங்களில் ஒன்றாக விளங்கி வருகிறார். இவர் 15 நாட்களுக்கு ஒரு முறை தனது ராசியை மாற்றுகிறார். இதன் காரணமாக 12 ராசிகளிலும் ஏதாவது ஒரு மாற்றங்கள் நிகழ்கிறது. தற்போது ஆகஸ்ட் 30 அன்று புதன் பகவான் சிம்ம ராசிக்குள் நுழைகிறார். அதே நாளில் அவர் மக நட்சத்திரத்திலும் சஞ்சரிக்க உள்ளார். புதன் கேதுவின் ராசிக்குள் செல்வதால் அறிவு சார் மற்றும் ஆன்மீக அம்சங்களில் மாற்றங்கள் ஏற்பட உள்ளன. புதன் மக நட்சத்திரத்திற்கு சென்ற பிறகு எந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டம் அடைய இருக்கிறார்கள் என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
கேதுவின் நட்சத்திரத்திற்குள் செல்லும் புதன்
புதன் ஆகஸ்ட் 30-ம் தேதி மாலை 4:48 மணிக்கு மக நட்சத்திரத்தில் பிரவேசித்து செப்டம்பர் 6 ஆம் தேதி வரை இந்த நட்சத்திரத்தில் இருப்பார். மக நட்சத்திரம் 27 நட்சத்திரங்களில் பத்தாவது நட்சத்திரமாக அறியப்படுகிறது. இந்த நட்சத்திரத்தின் அதிபதி கேது ஆகும். கேது கிரகம் நமது முன்னோர்களை குறிக்கிறது. புதன் கிரகம் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர். இவர் பேச்சு, படிப்பு, புத்திசாலித்தனம், வியாபாரம் ஆகியவற்றின் காரகராவார். இந்த நிலையில் கேதுவின் நட்சத்திரமான மக நட்சத்திரத்திற்குள் புதன் பிரவேசிப்பதால் இது ஆன்மீக ரீதியாகவும், ஜோதிட ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ரிஷப ராசி
புதன் மக நட்சத்திரத்தில் நுழைவதன் மூலமாக ரிஷப ராசிக்காரர்களுக்கு பல நன்மைகள் கிடைக்க உள்ளன. இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் கிடைக்க உள்ளது. ரிஷப ராசிக்காரர்களின் தைரியம் இந்த காலத்தில் அதிகரிக்கும். நீங்கள் உங்கள் உணர்வுகளை இத்தனை நாட்களாக மறைத்து வைத்திருந்தால் இந்த காலத்தில் வெளிப்படையாக பேசலாம். இது உங்களுக்கு பல நன்மைகளை தரும். இதன் காரணமாக நீங்கள் உணர்ச்சி ரீதியாக சிறப்பாக உணர்வீர்கள். வியாபாரம் செய்து வரும் வணிகர்களுக்கும், தொழில் நடத்தி வருபவர்களுக்கும், தொழில் முனைவோராக ஆசைப்படுபவர்களுக்கும் இந்த காலம் சிறப்பானதாக அமையும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.
சிம்ம ராசி
புதன் மக நட்சத்திரத்தில் நுழைவதன் காரணமாக சிம்ம ராசிக்காரர்களுக்கு பல துறைகளில் வெற்றி கிடைக்க உள்ளது. இவர்களின் அறிவுத்திறன் வேகமாக அதிகரிக்கும். பல புதிய விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். உங்களின் பேச்சு மூலமாக உங்கள் தொழிலை விரிவு படுத்த முடியும். சமூகத்தில் மரியாதை மற்றும் அந்தஸ்து அதிகரிக்கும். உங்கள் நிதி நிலைமை சீராக இருக்கும். ஆரோக்கியம் மேம்படும். தேவையற்ற மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவீர்கள். தேவையில்லாத விஷயங்களில் மூக்கை நுழைப்பதை தவிர்த்து விடுங்கள். இதன் காரணமாக உங்கள் மன அழுத்தம் அதிகரிக்கலாம். இந்த காலத்தில் ஆன்மீக வழிபாடு செய்வது, யோகா, உடற்பயிற்சி செய்வது உங்களை புத்துணர்வாகவும், மன அழுத்தத்தில் இருந்து விடுபடவும் உதவும்.
விருச்சிக ராசி
விருச்சிக ராசிக்காரர்கள் இந்த காலத்தில் பல நன்மைகளை பெற உள்ளனர். புதனின் மக நட்சத்திர சஞ்சாரமானது, விருச்சிக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை வழங்கவுள்ளது. விருச்சிக ராசி காரர்களின் அறிவுத்திறன் இந்த காலத்தில் வேகமாக வளரும். உங்களின் வாதிடும் திறமையால் நீங்கள் பல துறைகளில் வெற்றி பெறலாம். நீண்டகாலமாக நிலவி வந்த பிரச்சனைகள் தீர்க்கப்படும். சட்ட ரீதியாக போராட்டங்கள் நடத்தி வருபவர்களுக்கு வெற்றி கிடைக்கும். தொழில் துறையில் நல்ல லாபங்களை எதிர்பார்க்கலாம். எதிர்காலத்திற்கான பல திட்டங்களை வகுக்க முடியும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். புதிய திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் லாபம் பெற முடியும்.
(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையானது வேத சாஸ்திரங்கள், ஜோதிட கருத்துக்கள் மற்றும் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்களின் அடிப்படையில் எழுதப்பட்டது. இதன் நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது. ஒருவரின் ஜாதகம், கிரக நிலைகள், தசா புத்திகள் ஆகியவை வேறுபடும் என்பதால் அனுபவமிக்க ஜோதிடரை அணுகி கலந்தாலோசிப்பது நல்லது)