- Home
- Astrology
- ஆகஸ்ட் 27: விருச்சிக ராசிக்கான இன்றைய ராசி பலன்.! கதவை திறந்தால் அதிர்ஷ்டம் வரும்.! அள்ள அள்ள பணம் குவியும்.!
ஆகஸ்ட் 27: விருச்சிக ராசிக்கான இன்றைய ராசி பலன்.! கதவை திறந்தால் அதிர்ஷ்டம் வரும்.! அள்ள அள்ள பணம் குவியும்.!
விருச்சிக ராசிக்காரர்களுக்கு தொழிலில் எதிர்பாராத முன்னேற்றம், வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். காதல் வாழ்க்கையில் சில சவால்கள் ஏற்படலாம். முருகன் வழிபாடு நன்மை தரும்.

விருச்சிகம் (Scorpio): தொழிலில் எதிர்பாராத முன்னேற்றம் ஏற்படும்
இன்று ரகசியங்களை கவனமாக வைத்துக் கொள்ள வேண்டும். உங்களின் திட்டங்களை மற்றவர்களிடம் பகிர வேண்டாம். தொழிலில் எதிர்பாராத முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் வரும். ஆனால் வாக்குவாதங்களை தவிர்க்கவும். கோவத்தை குறைத்தால் லாபத்தை அள்ளி குவிக்கலாம். அமைதியான போக்கு பல வெற்றிகளை உங்களுக்கு அள்ளித்தரும். நேரம் கூடிவரும் போது அதனை பயன்படுத்திக்கொண்டால் லாபத்தை அள்ளி வருமானத்தை பெருக்கலாம். அதிர்ஷ்டமான நாள் இது.
நல்ல வருமானம் வரும் நாள்.!
பணவியல் ரீதியில் நல்ல வருமானம் வரும். முதலீடுகள் லாபம் தரும். ஆனால் அதிக ஆபத்தான முதலீடுகளை தவிர்க்கவும். பழைய கடன்கள் சீராகும். குடும்பத்தில் சிறிய பிரச்சினைகள் தோன்றினாலும், அதனை அறிவுடனும் பொறுமையுடனும் சமாளிக்கலாம். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். பழைய கடன்கள் கைகளுக்கு வரும். புதிய பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்புகள் உருவாகும்.
காதல் வாழ்க்கையில் கவனம் தேவை.!
காதல் வாழ்க்கையில் சண்டைகள் தோன்றலாம். துணையுடன் பொறுமையாக நடந்து கொள்ள வேண்டும். புதிய உறவுகள் உருவாக வாய்ப்பு உள்ளது. காதலுக்கு மரியாதை கொடுத்தால் சண்டைகள் காணாமல் போகும். அமைதியும் பொறுமையும் எல்லா சவால்களையும் தவிடு பொடியாக்கும்.
முருகன் வழிபாடு நல்ல பலன் தரும்
உடல்நலத்தில் சிறிய சிக்கல்கள் தோன்றினாலும், பெரிய பிரச்சினைகள் இருக்காது. முருகன் வழிபாடு நல்ல பலன் தரும். பரிகாரம்: கார்த்திகை தீபத்தில் பங்கேற்கவும். அதிர்ஷ்ட எண்: 9 அதிர்ஷ்ட நிறம்: கருப்பு வழிபட வேண்டிய தெய்வம்: முருகன்