MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Astrology: சுவாரஸ்யமாக கதை சொல்லும் 3 ராசிகள்.! எதிரிகளை பேச்சிலேயே ஜெயிப்பார்களாம்.!

Astrology: சுவாரஸ்யமாக கதை சொல்லும் 3 ராசிகள்.! எதிரிகளை பேச்சிலேயே ஜெயிப்பார்களாம்.!

சிலர் தங்கள் பேச்சுத் திறமையால் அனைவரையும் எளிதில் கவர்ந்து விடுவார்கள். ஜோதிடத்தின் படி மூன்று ராசிக்காரர்கள் தங்கள் பேச்சால் எப்படி எதிரிகளை கூட வெல்கிறார்கள் என்பதை இந்த கட்டுரை விவரிக்கிறது.

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : May 23 2026, 09:08 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
பேச்சால் வெற்றி அடையும் நல்லவர்கள்
Image Credit : Asianet News

பேச்சால் வெற்றி அடையும் நல்லவர்கள்

சிலருடன் பேச ஆரம்பித்தால் நேரம் போவதே தெரியாது. பல மணி நேரம் ஆனாலும் அவர்களை விட்டு யாரும் நகர மாட்டார்கள். அவர்கள் சொல்லும் சாதாரண விஷயங்கள்கூட சினிமா கதையைப் போல சுவாரஸ்யமாக இருக்கும். சீரியல் கதையை போல பல அடுத்த எசிசோடுக்காக காத்திருக்க வைக்கும். மேலும், அவர்கள் சண்டை வந்தாலும் கைகலப்புக்கு செல்லாமல், தங்கள் பேச்சுத் திறமையால் எதிரிகளை அமைதியாக்கி விடுவார்கள். ஜோதிடத்தில் சில ராசிக்காரர்களுக்கு இயற்கையாகவே இந்த திறன் இருப்பதாக கூறப்படுகிறது. அப்படிப்பட்ட கதை சொல்லும் திறமை மற்றும் வாக்குச் சாமர்த்தியம் கொண்ட 3 ராசிகளை பற்றி பார்க்கலாம். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
மிதுனம் - பேசுவதற்காகவே பிறந்தவர்கள்
Image Credit : Asianet News

மிதுனம் - பேசுவதற்காகவே பிறந்தவர்கள்

மிதுன ராசிக்காரர்கள் பேசுவதற்காகவே பிறந்தவர்கள் என்று சொல்லலாம் என்கிறது ஜோதிடம். எந்த விஷயத்தையும் சுவாரஸ்யமாக மாற்றும் திறன் இவர்களிடம் இருக்கும் என்றும் நண்பர்கள் கூட்டத்தில் இவர்கள்தான் அதிக கவனம் பெறுவார்கள் எனவும் ஜோதிட நிபுணர்கள் கூறுகின்றனர்.  மிதுன ராசிகாரர்கள் ஒரு சாதாரண அனுபவத்தையே நகைச்சுவையுடன் கலந்து சொல்லி அனைவரையும் சிரிக்க வைப்பார்களாம். விவாதங்களில் கூட இவர்களை வெல்வது சுலபமல்லையாம். காரணம், சூழ்நிலைக்கேற்ற வார்த்தைகளை உடனே தேர்வு செய்து பேசும் திறன் இவர்களிடம் அதிகம் இருக்குமாம். எதிரிகள் எவ்வளவு கோபமாக இருந்தாலும், தங்களின் புத்திசாலித்தனமான பேச்சால் அவர்களை  மிதுன ராசியினர் அமைதியாக்கி விடுவார்கள் என்கிறது ஜோதிடம்.

Related Articles

Related image1
Astrology: திருமணத்திற்கு பிறகு ராஜவாழ்க்கை வாழும் 4 ராசிகள்.! இவர்கள் அதிகாரம் கொடி கட்டி பறக்குமாம்.!
Related image2
Astrology: சூரிய பார்வையால் கோடிகளை குவிக்க போகும் 3 ராசிகள்.! ஜூன் மாதம் முதல் தொட்டதெல்லாம் துலங்குமாம்.!
35
சிம்மம் - பேச்சில் ஒரு தனி கம்பீரம் இருக்கும்
Image Credit : Asianet News

சிம்மம் - பேச்சில் ஒரு தனி கம்பீரம் இருக்கும்

சிம்ம ராசிக்காரர்களின் பேச்சில் ஒரு தனி கம்பீரம் இருக்கும். அவர்கள் பேசும்போது அனைவரும் கவனமாக கேட்பார்கள். என்கிறது ஜோதிடம். தன்னம்பிக்கை நிறைந்த குரலும், கதையை உணர்ச்சியுடன் சொல்லும் திறனும் இவர்களுக்கு பெரிய பலமாக இருக்குமாம். சிறிய விஷயத்தையும் பெரிய அனுபவமாக மாற்றி சொல்லும் கலை இவர்களிடம் இருக்கும் என்கிறது ஜோதிட நூல்கள். அதனால் நண்பர்கள் வட்டாரத்தில் இவர்களுக்கு தனி ரசிகர்கள் இருப்பார்கள். யாராவது இந்த ராசிகரார்களை எதிர்க்க முயன்றால் கூட, கோபப்படாமல் தங்கள் வார்த்தைகளால் எதிராளியை மடக்கி விடுவார்கள். “பேச்சிலேயே ஜெயிப்பவர்கள்” என்ற பெயர் இவர்களுக்கு சரியாக பொருந்தும் என்றால் அது மிகையல்ல.

45
தனுசு - சிரிக்க சிரிக பேசும் சீமான்கள்
Image Credit : Asianet News

தனுசு - சிரிக்க சிரிக பேசும் சீமான்கள்

தனுசு ராசிக்காரர்கள் இயற்கையாகவே நகைச்சுவை உணர்வு கொண்டவர்கள். அவர்கள் பேசும் போது அனைவருக்கும் உற்சாகம் ஏற்படுமாம். வாழ்க்கையில் நடந்த அனுபவங்களை மிக சுவாரஸ்யமாக சொல்லும் திறன் இவர்களுக்கு இருக்கும் என்றும் எந்த இடத்திலும் புதிய நண்பர்களை உருவாக்கும் திறன் இவர்களிடம் அதிகம என்றும் ஜோதிர நிபுணர்கள் கூறுகின்றனர். அதே சமயம், விவாதங்களில் தங்கள் கருத்தை மிகவும் தெளிவாக வெளிப்படுத்துவார்களாம். எதிரிகள் குறை கூறினாலும், அதற்கு கோபமாக பதில் சொல்லாமல் புத்திசாலித்தனமான வார்த்தைகளால் பதிலடி கொடுப்பார்களாம். அதனால் இவர்களை வார்த்தை வித்தைக்காரர்கள் என்று பலர் பாராட்டுவார்கள்.

55
முயற்சி மற்றும் அனுபவம் இருந்தால் போதும்
Image Credit : Asianet News

முயற்சி மற்றும் அனுபவம் இருந்தால் போதும்

பேச்சுத் திறன் என்பது ஒரு பெரிய வரம். அதில் கதை சொல்லும் திறனும், எதிரிகளை கூட வார்த்தைகளால் வெல்லும் திறனும் சேர்ந்தால் அவர்கள் அனைவராலும் விரும்பப்படுவார்கள். ஜோதிடத்தின் படி மிதுனம், சிம்மம், தனுசு ராசிக்காரர்கள் இந்த தனிச்சிறப்பை அதிகமாக பெற்றவர்களாக கருதப்படுகிறார்கள். ஆனால், முயற்சி மற்றும் அனுபவம் இருந்தால் யாரும் சிறந்த பேச்சாளராக மாறலாம் என்பதையும் மறக்கக்கூடாது. 

அதேபோல் ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஜூன் மாதத்தில் சூரிய பார்வை மூன்று ராசிகளுக்கு அபாரமான அதிர்ஷ்டத்தையும் முன்னேற்றத்தையும் தரப்போகிறது. இந்த ராசிக்காரர்கள் தொழில், பணவரவு, குடும்ப மகிழ்ச்சி என அனைத்திலும் உயர்வை சந்திப்பார்கள்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
ஜோதிடம்
ஜோதிடம்
ராசி பலன்
இராசி அறிகுறிகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Baba Vanga Weekly Predictions: ஜூன் 22 முதல் 28 வார ராசிபலன்.. பாபா வாங்கா சொன்ன 'அந்த' 5 ராசிகள்! அடிக்கபோகும் மெகா ஜாக்பாட்!
Recommended image2
Astrology: இந்த 4 ராசிக்காரங்கதான் உலகத்திலேயே 'பெஸ்ட் அப்பா'... உங்க ராசி இதுல இருக்கா?
Recommended image3
Venus Nakshatra Transit: பண மழை கொட்டப் போகுது... சுக்கிரன் பெயர்ச்சியால் ஜாக்பாட் அடிக்கும் 4 ராசி
Related Stories
Recommended image1
Astrology: திருமணத்திற்கு பிறகு ராஜவாழ்க்கை வாழும் 4 ராசிகள்.! இவர்கள் அதிகாரம் கொடி கட்டி பறக்குமாம்.!
Recommended image2
Astrology: சூரிய பார்வையால் கோடிகளை குவிக்க போகும் 3 ராசிகள்.! ஜூன் மாதம் முதல் தொட்டதெல்லாம் துலங்குமாம்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved