MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Astrology: ராகு பார்வையில் சுக்கிர திசை.! ஆடி மாதத்தில் அடிக்க போகும் அதிர்ஷ்ட காற்று.! 5 ராசிகளுக்கு நல்லகாலம் பொறக்குது.!

Astrology: ராகு பார்வையில் சுக்கிர திசை.! ஆடி மாதத்தில் அடிக்க போகும் அதிர்ஷ்ட காற்று.! 5 ராசிகளுக்கு நல்லகாலம் பொறக்குது.!

இந்த ஆடி மாதத்தில் ராகுவின் பார்வையால் சுக்கிரன் வலுப்பெறுவதால், ஐந்து ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டமும், பண வரவும் கிடைக்க வாய்ப்புள்ளது. அவர்களுக்கு தொழில், நிதி மற்றும் குடும்ப வாழ்வில் பெரும் முன்னேற்றங்களைக் காணும் என ஜோதிடம் கூறுகிறது.

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Jul 17 2026, 08:05 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
அதிர்ஷ்டம் தரும் ஆடி மாதம்.! அள்ள அள்ள பணம் கிடைக்கும்.!
Image Credit : Asianet News

அதிர்ஷ்டம் தரும் ஆடி மாதம்.! அள்ள அள்ள பணம் கிடைக்கும்.!

ஆடி மாதம் ஆன்மிக ரீதியாக மட்டுமல்ல, ஜோதிட ரீதியிலும் பல மாற்றங்களை ஏற்படுத்தும் காலமாக கருதப்படுகிறது என்கின்றன ஜோதிட நூல்கள். இந்த ஆண்டின் ஆடி மாதத்தில் ராகுவின் பார்வையால் சுக்கிரனின் பலம் அதிகரிப்பதாக ஜோதிட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சுக்கிர பகவான் செல்வம், ஆடம்பரம், காதல், குடும்ப மகிழ்ச்சி மற்றும் வசதிகளின் காரகன் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயமே. ராகுவின் தாக்கம் சில நேரங்களில் எதிர்பாராத புதிய நல்ல வாய்ப்புகளையும் திடீர் அதிர்ஷ்ட முன்னேற்றங்களையும் கொடுக்கக்கூடும். குறிப்பாக 5 ராசிக்காரர்களுக்கு இந்த காலம் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்று ஜோதிர ரகசியங்களில் கூறப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
ரிஷபம் - வெற்றியுடன் செல்வம் சேரும் காலம் இது
Image Credit : Asianet News

ரிஷபம் - வெற்றியுடன் செல்வம் சேரும் காலம் இது

சுக்கிரன் நேரடி ஆதிபதியாக இருப்பதால் ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த ஆடி மாதம் மிகவும் சாதகமாகவும் அதிர்ஷ்டத்தை அள்ளி தரும் மாதமாகவும் இருக்கும். நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த பணிகள் அனைத்தும் நிறைவேறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கிடைத்து அதனால் லாபம் உயரலாம். எதிர்பாராத பணவரவு உங்களை மகிழ்ச்சியிலும் சந்தோஷத்திலும் ஆழ்த்தும் என ஜோதிட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து அமைதியும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும் நிலவும். வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேற வாய்ப்பு உள்ளது என ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Related image1
Aadi Month Rasi Palan 2026: ஆடி மாதம் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும்? 12 ராசிகளுக்கான முழுமையான பலன்கள்
Related image2
AadI Matham: ஆடி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்! பணமழை கொட்டப்போகுது
37
மிதுனம் - சாதனை படைக்கும் காலமிது.! இனி நல்லகாலம்தான்
Image Credit : Asianet News

மிதுனம் - சாதனை படைக்கும் காலமிது.! இனி நல்லகாலம்தான்

ராகுவின் ஆதரவால் மிதுன ராசிக்காரர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும் காலம் இது. வேலை மாற்றம் எதிர்பார்ப்பவர்களுக்கு கண்டிப்பாக நல்ல செய்தி கிடைக்கலாம். வணிகம் மற்றும் தொழிலில் லாபம் பலமடங்கு அதிகரிக்கும். சமூகத்திலும் உறவினர்கள் மத்தியிலும் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். வெளிநாடு தொடர்பான முயற்சிகளில் சாதகமான  சந்தோஷமான முடிவுகள் கிடைக்கும். முதலீடு செய்வதற்கு முன் நிதானமாக முடிவு எடுத்தால்  எதிர்பார்த்ததை விட நல்ல பலன் கிடைக்கும் என ஜோதிட நிபுணர்கள் கூறுகின்றனர்.

47
சிம்மம் - பதவியும் செல்வம் தேடிவரும்
Image Credit : Asianet News

சிம்மம் - பதவியும் செல்வம் தேடிவரும்

சிம்ம ராசிக்காரர்களுக்கு ஆடி மாதம் அதிர்ஷ்டம் நிறைந்த மாதமாக இருக்கும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.நீண்ட நாட்களாக எதிர்பார்த்த  பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் திருமணம், வளைகாப்பு, மஞ்சள்நீராட்டு விழா போன்ற சுப நிகழ்ச்சிகள் நடைபெறலாம். திருமண முயற்சிகள் வெற்றியடையும் என்பதால் முட்டு சிங்கிள்கள் இனி சந்தோஷத்தில் மிதப்பர். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு இது நல்ல நேரமாகவும் சாதகமான காலமாகவும் அமையும். அமைதியும் ஆரோக்கியமும் மேம்படும் நேரம் என ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர்.

57
துலாம் - நிதி நிலமை செம்மையா இருக்கும்.! கையில காசு புரளும்
Image Credit : Asianet News

துலாம் - நிதி நிலமை செம்மையா இருக்கும்.! கையில காசு புரளும்

அள்ளிக்கொடுக்கும் சுக்கிரன் ஆட்சி செய்யும் துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த காலம் மிகுந்த நன்மைகளை தரும். நிதி நிலைமையும் பல மடங்கு வலுப்பெறும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த கடன் சுமைகள் காணாமல் போகும். கவலைகள் குறைந்து மனநிம்மதி கிடைக்கும்.காதலில் நெருக்கம் அதிகரிக்கும். தம்பதியர் இடையே நிலவி வந்த மனக்சப்புகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். கலை, ஊடகம், ஃபேஷன், அழகு துறைகளில் இருப்பவர்கள் புதிய உயரங்களை அடைய வாய்ப்புகள் உருவாகும். வாழ்வில் வெற்றிகான நண்பர்களின் ஆதரவும் அதிகரிக்கும்.

67
மகரம்
Image Credit : Gemini

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு ராகுவின் பார்வை எதிர்பாராத வளர்ச்சியை ஏற்படுத்தும். வேலை மற்றும் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வருமானம் அதிகரிப்பதுடன் சேமிப்பும் உயரும். குடும்பத்தில் இருந்த மனக்கசப்புகள் நீங்கி மகிழ்ச்சியான சூழல் உருவாகும். பயணங்களால் லாபம் கிடைக்கலாம். புதிய சொத்து வாங்கும் யோகம் உருவாகும்.

77
கவனிக்க வேண்டியது
Image Credit : Chatgpt

கவனிக்க வேண்டியது

ஜோதிட பலன்கள் பொதுவான கிரக நிலைகளை அடிப்படையாகக் கொண்டவை. ஒவ்வொருவரின் தனிப்பட்ட ஜாதகம், தசா-புத்தி, கிரக அமைப்பு போன்றவற்றைப் பொறுத்து பலன்கள் மாறுபடலாம். எனவே இதை பொதுவான ஜோதிட வழிகாட்டுதலாக மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஆடி மாதத்தில் ராகுவின் பார்வையால் சுக்கிரன் வலுப்பெறும் இந்த காலம், ரிஷபம், மிதுனம், சிம்மம், துலாம் மற்றும் மகரம் ஆகிய 5 ராசிகளுக்கு புதிய வாய்ப்புகள், பொருளாதார முன்னேற்றம், குடும்ப மகிழ்ச்சி மற்றும் தொழில் வளர்ச்சியை வழங்கும் காலமாக அமையக்கூடும். சரியான திட்டமிடலுடனும் முயற்சியுடனும் செயல்பட்டால் இந்த அதிர்ஷ்டக் காற்றை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
ஜோதிடம்
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Samasaptaga Yoga : செப்டம்பரில் உருவாகும் சமசப்தக யோகம்... ஒரு மாதத்திற்கு அடிமேல் அடிவாங்கப்போகும் 5 ராசிகள்
Recommended image2
சந்திர கிரகணத்தில் சனி வக்ரம்..! 50 ஆண்டுக்கு பிறகு அரிய மாற்றம் – உச்சத்திற்கு செல்லும் 3 ராசிகள்!
Recommended image3
Aavani Avittam 2026: நாளை ஆவணி அவிட்டம்.. பூணூல் மாற்ற உகந்த நேரம் என்ன?
Related Stories
Recommended image1
Aadi Month Rasi Palan 2026: ஆடி மாதம் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும்? 12 ராசிகளுக்கான முழுமையான பலன்கள்
Recommended image2
AadI Matham: ஆடி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்! பணமழை கொட்டப்போகுது
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved