MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Angry Zodiac Signs: மூக்கின் மேல் கோபம் வரும் ராசிக்காரர்கள் இவர்கள்தான்.. முழு லிஸ்ட் இதோ!

Angry Zodiac Signs: மூக்கின் மேல் கோபம் வரும் ராசிக்காரர்கள் இவர்கள்தான்.. முழு லிஸ்ட் இதோ!

Angry Zodiac Signs: சிலர் சிறிய விஷயத்திற்கே கோபப்படுவார்கள். அதனால் அவர்கள் கெட்டவர்கள் என்று அர்த்தமில்லை. ஜோதிடத்தின் படி, வெளியில் கடுமையாகத் தோன்றினாலும் உள்ளுக்குள் மிகவும் பாசமான 4 ராசிகள் உள்ளன.

1 Min read
Author : Raghupati R
Published : Jul 03 2026, 08:38 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
கோபம் அதிகம் உள்ள ராசிகள்
Image Credit : AI

கோபம் அதிகம் உள்ள ராசிகள்

ஒரு சிலரை பார்த்தாலே அவர்கள் எப்போதும் கோபமாக இருப்பது போல தோன்றும். சிறிய விஷயத்திற்கே சத்தமாகப் பேசுவார்கள். அதனால் அவர்கள் கடுமையான குணம் கொண்டவர்கள் என்று பலரும் நினைத்துவிடுகிறார்கள். ஆனால் ஜோதிடக் கண்ணோட்டத்தில் பார்த்தால், வெளிப்படையாகக் காட்டும் கோபத்துக்கும், மனதிற்குள் இருக்கும் உண்மையான குணத்துக்கும் பல நேரங்களில் பெரிய வித்தியாசம் இருக்கும். குறிப்பாக நான்கு ராசிக்காரர்கள் வெளியில் கோபக்காரர்களாகத் தெரிந்தாலும், உள்ளுக்குள் மிகவும் மென்மையான மனம் கொண்டவர்களாகக் கருதப்படுகிறார்கள்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
மேஷம்
Image Credit : Pixabay

மேஷம்

அந்தப் பட்டியலில் முதலில் இடம் பெறுவது மேஷ ராசி. இந்த ராசிக்காரர்கள் வேகமாக செயல்படுபவர்கள். சிறிய பிரச்சினை ஏற்பட்டாலும் உடனடியாக கோபத்தை வெளிப்படுத்துவார்கள். ஆனால், அந்த கோபம் நீண்ட நேரம் நீடிக்காது. மனதில் பகையை வைத்துக்கொள்ளாமல், தவறு செய்தவர்களையும் எளிதாக மன்னிக்கும் குணம் இவர்களிடம் காணப்படும்.

இவர்களுக்கு எதிரி நண்பனாகும் யோகம்.. 12 ராசிகளுக்கும் இன்றைய முழு பலன்கள்!

Related Articles

Related image1
Astrology: சனி-கேது சேர்க்கை 2026: இந்த 3 ராசிகளின் காட்டில் 'இனி' பண மழை தான்! உங்க ராசி இருக்கா?
Related image2
Horoscope Today: இவர்களுக்கு எதிரி நண்பனாகும் யோகம்.. 12 ராசிகளுக்கும் இன்றைய முழு பலன்கள்!
35
சிம்மம்
Image Credit : Pixabay

சிம்மம்

அடுத்ததாக சிம்ம ராசியினர். சுயமரியாதைக்கும் நேர்மைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள். தங்களை அவமதித்தாலோ அல்லது பொறுப்பாக எடுத்த வேலையில் தடைகள் ஏற்பட்டதாலோ கோபம் வெளிப்படும். ஆனால் அதே நேரத்தில், பிறருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணமும், அன்பை வெளிப்படுத்தும் மனப்பான்மையும் இவர்களிடம் அதிகமாக இருக்கும். உறவுகளை பலமாக மதிக்கும் குணம்.

45
விருச்சிகம்
Image Credit : Pixabay

விருச்சிகம்

விருச்சிக ராசியினர் வெளிப்படையாக கோபத்தை காட்ட மாட்டார்கள். ஆனால் ஒருமுறை உணர்ச்சிவசப்பட்டால் அதை கட்டுப்படுத்துவது கடினமாக இருக்கும். அநீதியை சகித்துக்கொள்ளாத மனநிலையும், தங்களை நம்புபவர்களுக்காக எந்த அளவுக்கும் நிற்கும் உறுதியும் இவர்களின் தனிச்சிறப்பாகும்.

55
தனுசு
Image Credit : Pixabay

தனுசு

மேலும், தனுசு ராசியினர் பொய்யையும் வஞ்சகத்தையும் விரும்பாதவர்கள். தவறு நடந்தால் நேருக்கு நேர் கண்டிப்பார்கள். ஆனால் அவர்களின் நோக்கம் யாரையும் காயப்படுத்துவது அல்ல. எனவே, இந்த நான்கு ராசிக்காரர்களின் கோபத்தை மட்டுமே வைத்து அவர்களை மதிப்பிடுவது சரியான அணுகுமுறை அல்ல என்று ஜோதிட நம்பிக்கைகள் கூறுகின்றன. அவர்கள் வெளியில் கடினமாகத் தோன்றினாலும், உள்ளுக்குள் அன்பு, நேர்மை மற்றும் உறவுகளுக்கு மதிப்பு கொடுக்கும் குணம் அதிகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Astrology: ஆடி மாதத்தில் கோடிகள் குவியப்போகுது.! 5 ராசிகள் வாழ்வில் இனி சரவெடி.! ஆடி கார் வாங்கும் யோகம் காத்திருக்கு.!
Recommended image2
Astrology: சனி-கேது சேர்க்கை 2026: இந்த 3 ராசிகளின் காட்டில் 'இனி' பண மழை தான்! உங்க ராசி இருக்கா?
Recommended image3
Pancha Mahapurusha Yoga: அள்ளிக்கொடுக்கும் பஞ்ச மகாபுருஷ யோகம்.! 3 ராசிகளுக்கு காசு, பணம் கொட்ட போகுது.! சக்சஸ் ஆரம்பம்.!
Related Stories
Recommended image1
Astrology: சனி-கேது சேர்க்கை 2026: இந்த 3 ராசிகளின் காட்டில் 'இனி' பண மழை தான்! உங்க ராசி இருக்கா?
Recommended image2
Horoscope Today: இவர்களுக்கு எதிரி நண்பனாகும் யோகம்.. 12 ராசிகளுக்கும் இன்றைய முழு பலன்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved