MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Astrology: 100 ஆண்டு அபூர்வ நிகழ்வு: ஜூன் 11 முதல் இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்! தொட்டதெல்லாம் பொன்னாகும்!

Astrology: 100 ஆண்டு அபூர்வ நிகழ்வு: ஜூன் 11 முதல் இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்! தொட்டதெல்லாம் பொன்னாகும்!

Astrology: ஜோதிடசாஸ்திரத்தின்படி ஜூன் 11 அன்று ஒரு அரிய கிரகப் பெயர்ச்சி நிகழவுள்ளது. இதனால் 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை பொழிய போகுது. இவை என்னென்ன ராசிகள்? என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar A
Published : Jun 08 2026, 02:08 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
புதன் சுக்கிரன் பெயர்ச்சி 2026
Image Credit : AI

புதன் சுக்கிரன் பெயர்ச்சி 2026

வேத ஜோதிடத்தில் கிரகங்களின் இடமாற்றம் மனித வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அந்த வகையில், வரும் ஜூன் 11 அன்று ஜோதிட உலகமே வியக்கும் வகையிலான ஒரு அரிய கிரகப் பெயர்ச்சி நிகழவுள்ளது. கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்குப் பிறகு, கிரகங்களின் இளவரசனான புதனும், அசுர குருவான சுக்கிரனும் ஒரே நாளில், ஒரே நட்சத்திரத்தில் தங்களின் பயணத்தைத் தொடங்குகின்றனர்.

இந்த அபூர்வ இணைவானது 12 ராசிகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தினாலும், குறிப்பிட்ட 3 ராசியினருக்குப் பொற்காலத்தைத் தரவுள்ளது. அந்த அதிர்ஷ்டக் காற்றை சுவாசிக்கப் போகும் ராசிகள் மற்றும் அவர்களுக்கான எளிய பரிகாரங்கள் குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
ரிஷபம்
Image Credit : Pixabay

ரிஷபம்

ரிஷப ராசியினருக்கு இந்த இரட்டை கிரகங்களின் நட்சத்திர மாற்றம் பொன்னான வாய்ப்புகளை அள்ளித் தரப்போகிறது. நீண்ட நாட்களாக தள்ளிப்போன ஆசைகளும், கனவுகளும் இந்த காலகட்டத்தில் நிறைவேறும். உத்தியோகத்தில் எதிர்பாராத பதவி உயர்வும், தொழிலில் நல்ல லாபமும் கிடைக்கும். குடும்பத்தில் நிலவி வந்த மனக்கசப்புகள் நீங்கி, தம்பதியரிடையே ஒற்றுமை பலப்படும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கைகூடும். புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமி தேவிக்கு நெய் தீபமேற்றி, மல்லிகைப்பூ சாற்றி வழிபடுவது அதிர்ஷ்டத்தை இரட்டிப்பாக்கும்.

Related Articles

Related image1
Astrology: புதிய வீடு, வாகன யோகம்.. இந்த 5 ராசிகளின் காட்டில் இனி பண மழைதான்.. உங்க ராசி இருக்கா?
Related image2
Astrology: இனி நல்ல நேரம் ஸ்டார்ட்.! நீசபங்கு ராஜயோகத்தால் 4 ராசிகளுக்கு ஜாக்பாட்.! உங்க ராசி இருக்கா?
34
சிம்மம்
Image Credit : stockPhoto

சிம்மம்

புதன் - சுக்கிரன் கூட்டணியால் சிம்ம ராசிக்காரர்களின் வாழ்வில் புதிய அத்தியாயம் தொடங்கவுள்ளது. புதிய தொழில் அல்லது வியாபாரம் தொடங்க நினைப்பவர்களுக்கு இது மிகச் சிறந்த காலகட்டம். உங்களின் சாதுரியமான பேச்சாற்றலால் முடங்கிக் கிடந்த காரியங்களைச் செவ்வனே செய்து முடிப்பீர்கள். மன உளைச்சல்கள் நீங்கி, நிம்மதியும் தைரியமும் பிறக்கும். சொத்து சேர்க்கைக்கான முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். துணையின் முழு ஆதரவும் உங்களுக்குப் பக்கபலமாக இருக்கும்.

பரிகாரம்: புதன்கிழமைகளில் விநாயக பெருமானுக்கு அருகம்புல் மாலை சாற்றி, வழிபாடுகள் செய்து வர தடைகள் யாவும் விலகும்.

44
துலாம்
Image Credit : Pixabay

துலாம்

துலாம் ராசிக்கு இந்த நட்சத்திரப் பெயர்ச்சி திருப்புமுனையாக அமையப் போகிறது. மாணவர்களுக்குக் கல்வியில் நல்ல முன்னேற்றமும், போட்டித் தேர்வுகளில் வெற்றியும் கிடைக்கும். வெளிநாடு அல்லது வெளியூர் சென்று பணிபுரியும் கனவு நனவாகும் வாய்ப்புகள் தேடி வரும். வேலைகளில் இதுவரை இருந்து வந்த முட்டுக் கட்டைகள் மற்றும் எதிர்ப்புகள் சுக்குநூறாக உடையும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடந்து மகிழ்ச்சி பெருகும். உங்களின் சொல்லிற்குச் சமூகத்தில் தனி மரியாதை கிடைக்கும்.

பரிகாரம்: தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதும், ஏழை எளியோர்க்கு பச்சரிசி அல்லது இனிப்பு பண்டங்களை தானமாக வழங்குவதும் நற்பலன்களைத் தரும்.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள், மத நூல்கள், நிபுணர்கள் மற்றும் ஜோதிடர்களிடமிருந்து பெறப்பட்டவை. இந்தத் தகவல்களை உங்களிடம் கொண்டு சேர்ப்பது மட்டுமே எங்கள் நோக்கம். வாசகர்கள் இந்தத் தகவல்களை ஒரு வழிகாட்டுதலாக மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் வரும் கருத்துகளுக்கு ஏசியாநெட் நிறுவனம் பொறுப்பேற்காது.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஜோதிடம்
ஜோதிடம்
ராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Dashank Yog: தசாங்க யோகத்துடன் தொடங்கும் ஜூலை மாதம்.! 5 ராசிகளுக்கு இனிமே ஏறுமுகம் தான்.! ராஜவாழ்க்கை வாழப்போறீங்க.!
Recommended image2
ஜூன் 30 முதல் வக்கிரமடையும் புதன்..! இந்த 5 ராசிக்காரர்களுக்கும் கோடி கோடியா கொட்ட போகுதாம்..
Recommended image3
Baba Vanga Horoscope: அடுத்த 7 நாளில் கோடீஸ்வரராகும் 5 ராசிகள்! லாட்டரி லக்! உங்க ராசி இருக்கா?
Related Stories
Recommended image1
Astrology: புதிய வீடு, வாகன யோகம்.. இந்த 5 ராசிகளின் காட்டில் இனி பண மழைதான்.. உங்க ராசி இருக்கா?
Recommended image2
Astrology: இனி நல்ல நேரம் ஸ்டார்ட்.! நீசபங்கு ராஜயோகத்தால் 4 ராசிகளுக்கு ஜாக்பாட்.! உங்க ராசி இருக்கா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved