- Home
- Astrology
- Astrology: தனது அறிவால் புதிய உச்சத்தை தொடும் 3 ராசிகள்.! அரசாங்கத்தை வழிநடத்தும் ராஜகுருவாக இருப்பார்களாம்.!
Astrology: தனது அறிவால் புதிய உச்சத்தை தொடும் 3 ராசிகள்.! அரசாங்கத்தை வழிநடத்தும் ராஜகுருவாக இருப்பார்களாம்.!
ஜோதிடத்தின்படி, சில ராசிக்காரர்கள் மற்றவர்களை விட அதிக புத்திசாலித்தனம் கொண்டவர்களாக இருப்பார்கள். குறிப்பாக 3 ராசிக்காரர்கள் தங்கள் அறிவாற்றல் மற்றும் திட்டமிடல் திறனால், ஆட்சியில் இருப்பவர்களுக்கு 'ராஜகுரு' போல வழிகாட்டும் சக்தி பெற்றவர்கள்.

உடனே தமிழக முதல்வருக்கு போன் போடுங்க
ஜோதிடத்தில் சில ராசிக்காரர்கள் சாதாரண புத்திசாலிகள் அல்ல என்று கூறப்படுகிறது. இவர்களின் சிந்தனை, தீர்மானம் எடுக்கும் திறன், சூழ்நிலையை புரிந்து கொள்ளும் அறிவு ஆகியவை மற்றவர்களை விட வித்தியாசமாக இருக்கும். குறிப்பாக அரசியல், நிர்வாகம், கல்வி, சட்டம் போன்ற துறைகளில் இவர்களின் அறிவு பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது. சிலர் நேரடியாக ஆட்சியில் இல்லாவிட்டாலும், ஆட்சியை வழிநடத்தும் “ராஜகுரு” போல பின்னணியில் இருந்து தாக்கத்தை செலுத்துவார்களாம். அப்படிப்பட்ட அறிவாற்றலால் உச்சத்தை தொடும் 3 ராசிகளை பற்றி விரிவாகவும் விளக்கமாகவும் பார்க்கலாம். உங்க ராசி பட்டியலில் இருந்தால் தமிழக முதல்வர் விஜய்யை தொடர்பு கொள்ளுங்கள்.!

கும்பம் - ராஜாக்களை வழிப்படுத்தும் ராஜகுருக்கள்
கும்ப ராசிக்காரர்கள் புதுமையான சிந்தனையின் ராஜாக்கள் என்று சொல்லலாம். எந்த விஷயத்தையும் சாதாரணமாக பார்க்காமல், அதன் பின்னாலுள்ள காரணத்தையும் எதிர்கால விளைவுகளையும் ஆராய்வார்கள். இவர்களின் பேச்சிலும் திட்டமிடலிலும் ஒரு தனி ஈர்ப்பு இருக்கும். எதையும் நொடி பொழுதில் புரிந்துகொண்டு அதனை உடனே வெளிப்படுத்தும் கர்ப்பூர புத்தி இவர்களுக்கு இரக்கும்.
அரசியல், சமூக மாற்றம், அறிவியல், தொழில்நுட்பம் போன்ற துறைகளில் இவர்களின் கருத்துக்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றால் அது மிகையல்ல. அரசாங்கம் முதல் அடிமட்ட தொண்டர்கள் வரை இவர் பலருக்கு ஆலோசகராக இருப்பார்கள். நேரடியாக முன்னிலையில் இல்லாவிட்டாலும், முக்கிய முடிவுகளை எடுப்பவர்களுக்கு பின்னணியில் இருந்து வழிகாட்டுவார்கள் இவர்கள். அதனால் தான் கும்ப ராசிக்காரர்கள் “ராஜகுரு” தன்மை கொண்டவர்கள் என்று ஜோதிடம் கூறுகிறது.
கன்னி - பகுத்தறியும் பலம் படைத்த பக்கா அறிவாளிகள்
கன்னி ராசிக்காரர்களின் மிகப்பெரிய பலம் அவர்களின் பகுத்தறிவு. ஒரு விஷயத்தை மிகவும் நுணுக்கமாக ஆராய்ந்து சரியான முடிவை எடுப்பார்களாம். தவறுகளை எளிதில் கண்டுபிடிக்கும் திறன் இவர்களுக்கு அதிகமாக இருக்குமாம்.
அரசு நிர்வாகம், சட்டம், பொருளாதாரம், கல்வி போன்ற துறைகளில் இவர்களின் அறிவு பெரிய உச்சத்தை கொடுக்கும். மற்றவர்கள் கவனிக்காத விஷயங்களையும் கண்காணித்து சரியான ஆலோசனைகளை வழங்குவார்கள் என்கிறது ஜோதிடம். அதனால் தலைவர்களுக்கு மிகவும் நம்பிக்கைக்குரியவர்களாக மாறுவார்கள். அமைதியாக செயல்பட்டாலும், முடிவுகளை மாற்றும் சக்தி இவர்களிடம் இருக்கும்.
விருச்சிகம் - என்னமோ திட்டம் இருக்கு?
விருச்சிக ராசிக்காரர்கள் ஆழமான சிந்தனை மற்றும் ரகசியமான திட்டமிடலில் வல்லவர்கள். ஒருவரின் மனநிலையை எளிதில் புரிந்து கொள்வார்கள். அதனால் அரசியல் மற்றும் அதிகார துறைகளில் இவர்களுக்கு தனி செல்வாக்கு உருவாகும்.
இவர்கள் எடுத்த முடிவுகள் பல நேரங்களில் பெரிய வெற்றியை தரும். வெளியில் அமைதியாக இருந்தாலும், உள்ளுக்குள் மிகப்பெரிய கணக்குகளை போட்டு செயல்படுவார்கள். அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு முக்கியமான ஆலோசகராக இருந்து அவர்களின் வளர்ச்சிக்கு காரணமாக இருப்பார்கள். பலரின் எதிர்காலத்தை மாற்றும் முடிவுகளை கூட இவர்களின் அறிவு தீர்மானிக்கக்கூடும்.
மற்றவர்களையும் வழிநடத்தும் ஆற்றல்
அறிவு, திட்டமிடல், சூழ்நிலையை புரிந்து கொள்ளும் திறன் ஆகியவை சில ராசிக்காரர்களுக்கு இயற்கையாகவே அதிகமாக இருக்கும் என்று ஜோதிடம் கூறுகிறது. குறிப்பாக கும்பம், கன்னி, விருச்சிகம் ஆகிய ராசிக்காரர்கள் தங்களது அறிவால் உயரத்தை தொடுவதோடு மட்டுமல்லாமல், மற்றவர்களையும் வழிநடத்தும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். அதனால் இவர்களை “ராஜகுரு” போல் மதிப்பார்கள் என்றும் நம்பப்படுகிறது.

