- Home
- Astrology
- Diwali 2025 : தீபாவளிக்கு முன் இந்தக் கனவு வந்தா நீங்க லட்சாதிபதிதான்!! யாருக்கு பணக்கார யோகம்?
Diwali 2025 : தீபாவளிக்கு முன் இந்தக் கனவு வந்தா நீங்க லட்சாதிபதிதான்!! யாருக்கு பணக்கார யோகம்?
தீபாவளிக்கு முன் கனவில் இந்த 5 விஷயங்கள் வந்தால் அவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலியாக மாறிவிடுவார்கள்.

Diwali 2025 Dreams
தீபாவளி நெருங்கிவிட்டது. இந்த பண்டிகைக்கு முன் உங்களுடைய கனவில் சிலவற்றை காண்பது வீட்டில் மகிழ்ச்சி, செழிப்பு, அமைதியை கொண்டு வரும். ஏனென்றால் தீபாவளிக்கு முன் வரும் கனவுகள் சிறப்பு வாய்ந்தது. இது வாழ்க்கையில் நடக்கப்போகும் நல்ல விஷயங்களின் அறிகுறிகளாகும். பொருளாதாரம், தனிப்பட்ட நல்வாழ்வின் மேம்பாட்டை கணிக்கக் கூடியவை. அவை என்னென்ன என்பதை இங்கு காணலாம்.
தாமரை
உங்களுடைய கனவில் தாமரை மலர் வருவது மிகவும் மங்களகரமானது. தீபாவளிக்கு முன் உங்களுடைய கனவில் தாமரை மலரை நீங்கள் கண்டால் அதிர்ஷ்டம் உங்கள் பக்கம்தான். உங்களுடைய வீட்டில் செல்வம், செழிப்பு, மகிழ்ச்சி, நிம்மதி ஆகியவை நிறைந்திருக்கும். கனவில் தாமரை மலரை காண்பது மகாலட்சுமியின் ஆசிர்வாதம் உங்களுக்கு இருப்பதை காட்டுகிறது.
பசு
தீபாவளிக்கு முன் உங்களுடைய கனவில் பசுவைப் பார்த்தால் அது நல்ல அறிகுறியாகக் கருதப்படுகிறது. இந்து சமயத்தின்படி பசுவானது பொருளாதார முன்னேற்றம், வெற்றி, லாபம் ஆகியவற்றைக் குறிக்கிறது. பசுவைக் கனவில் காணும் நபர்களுக்கு உரிய லாபம் வந்து சேரும். பொருளாதார பிரச்சினைகள் சீக்கிரமே தீரும்.
தங்கம்
தீபாவளிக்கு முன் தங்கம் அல்லது பணத்தை கனவில் கண்டால் எதிர்காலத்தில் உங்களுக்கு நிறைய செல்வம் சேரும் என்று அர்த்தம். உங்களுடைய பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காண்பதை தான் இந்த கனவுகள் உறுதி செய்கின்றன. வாழ்வில் எதிர்பாராத நன்மைகள் பெறுவதை உங்களுடைய கனவு உறுதிசெய்கிறது.
ஆறுகள்
உங்களுக்கு தீபாவளி பண்டிகைக்கு முன்பு புனித நதிகளை குறித்து ஏதேனும் கனவு வந்தால் மகாலட்சுமியின் ஆசிர்வாதம் இருப்பதாக நம்பப்படுகிறது. செல்வம் சேரும். தொட்டதெல்லாம் துலங்கும். உங்களுடைய பொருளாதார சிக்கல்களில் இருந்து விரைவில் விடுபட்டு நிம்மதி பெறுவீர்கள்.
கோயில்
தீபாவளிக்கு முன் கனவில் கோயில் அல்லது விளக்கை காண்பது நல்ல அறிகுறியாகும். வாழ்வில் வெளிச்சமும், வெற்றியும் கிடைக்கும் என இந்த கனவு உணர்த்துகிறது. தீபாவளிக்கு முன்பு இது மாதிரி கனவுகள் வருவது உங்களுடைய எதிர்கால வாழ்வில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்பதைக் காட்டுகிறது.
தீபாவளிக்குமோ உங்களுக்கு வரும் கனவுகளை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். இது உங்களுடைய வாழ்க்கையில் செல்வத்தையும், செழிப்பையும், மகிழ்ச்சியையும் கொண்டு வருவதற்கான அறிகுறிகள் ஆகும். அதை நம்புங்கள்.