Angarak Yog 2026: ராகுவுடன் கை கோர்த்த செவ்வாய்.! இந்த 5 ராசிகள் காட்டில் பணமழை தான்.!
Angarak Yog 2026: ஜோதிடத்தில் செவ்வாய் மற்றும் ராகு கடுமையான கிரகங்களாக கருதப்படுகின்றன. பிப்ரவரி 2026-ல் இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கை சில ராசிகளுக்கு நல்ல பலன்களைத் தரும். அந்த ராசிகள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

அங்காரக யோகம் 2026
வேத ஜோதிடத்தின் படி 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பல கிரகங்களின் நிலையில் பல மாற்றங்கள் ஏற்படுகிறது. ராகுவும் செவ்வாயும் சனியின் ராசியான கும்பத்தில் இணைகின்றன. பிப். 23, 2026 அன்று காலை 11:57-க்கு செவ்வாய் கும்பத்திற்குள் நுழைகிறார். இது அங்காரக யோகத்தை உருவாக்கும்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்கு 10-ம் இடமான கர்ம ஸ்தானத்தில் இந்த சேர்க்கை நிகழ்வதால், தொழில் ரீதியாகப் பெரிய மாற்றங்கள் ஏற்படும். வேலையில் இருப்பவர்களுக்குப் புதிய பொறுப்புகள் தேடி வரும். மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்களில் சாதகமான முடிவுகள் வரும். உங்களின் ஆளுமைத் திறன் வெளிப்படும். தொழில் வளர்ச்சி மற்றும் நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் உண்டு. ஆனால் கோபத்தைக் கட்டுப்படுத்துவது அவசியம்.
துலாம்:
உங்கள் ராசிக்கு 9-ம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் இந்த யோகம் அமைவது அதிர்ஷ்டத்தைத் தரும். வெளிநாடு செல்லும் முயற்சிகள் கைகூடும். ஆன்மீகப் பயணங்கள் மேற்கொள்வீர்கள். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட சிக்கல்கள் தீர்ந்து உங்களுக்குச் சாதகமாக அமையும். உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு மிகச் சிறந்த காலம் இது. தடைபட்ட வேலைகளை முடிக்க அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும், மேலும் புதிய வணிக ஒப்பந்தங்கள் உருவாகலாம்.
விருச்சிகம்:
விருச்சிக ராசிக்கு அதிபதியே செவ்வாய் என்பதால், இந்த யோகம் உங்களுக்குப் பெரிய திருப்புமுனையைத் தரும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த கடன் தொகைகள் வசூலாகும். திடீர் பணவரவு உண்டு. போட்டிகளில் வெற்றி காண்பீர்கள். உங்களின் தைரியம் மற்றும் தன்னம்பிக்கை பன்மடங்கு உயரும். புதிய தொழில் தொடங்கும் எண்ணம் நிறைவேறும்.
மீனம்:
வருமானம் அதிகரிக்கும், ஆசைகள் நிறைவேறும். தொழில் மற்றும் காதல் வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும் என்பதால் இந்த காலம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். புதிய முடிவுகளைத் துணிச்சலாக எடுப்பீர்கள். நீண்ட காலத் திட்டங்கள் நிறைவேறும். உங்களின் பேச்சுக்கும் செயலுக்கும் சமூகத்தில் மதிப்பு கூடும். நாள்பட்ட உடல்நலப் பாதிப்புகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள்.
கவனிக்க வேண்டியது
அங்காரக யோகம் அதீத ஆற்றலைத் தந்தாலும், செவ்வாய் மற்றும் ராகு ஆகிய இருவருமே ஆக்ரோஷமான கிரகங்கள் என்பதால் பின்வருவனவற்றில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. தேவையற்ற கோபத்தைத் தவிர்ப்பது உறவுகளில் விரிசல் ஏற்படாமல் தடுக்கும். சாலையில் செல்லும்போது நிதானம் தேவை. அவசரப்பட்டு யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

