- Home
- Astrology
- Angarak Yog 2026: செவ்வாயுடன் கைகோர்க்கும் ராகு.! உருவாகும் விபரீத அங்காரக யோகத்தால் நிம்மதியை இழக்கப்போகும் 3 ராசிகள்.!
Angarak Yog 2026: செவ்வாயுடன் கைகோர்க்கும் ராகு.! உருவாகும் விபரீத அங்காரக யோகத்தால் நிம்மதியை இழக்கப்போகும் 3 ராசிகள்.!
Angarak Yog 2026: பிப்ரவரி இறுதியில் கும்ப ராசியில் செவ்வாய் மற்றும் ராகு சேர்க்கை நடைபெற உள்ளது. இது சில ராசிகளுக்கு அசுப பலன்களை உண்டாக்ககூடும். அது குறித்து இங்கு பார்க்கலாம்.

அங்காரக யோகம் 2026
வேத ஜோதிடத்தில், கிரகங்களின் ராசி மாற்றம் ஒரு வானியல் நிகழ்வாக மட்டும் கருதப்படுவதில்லை. இது ஒரு நபரின் வாழ்க்கை மற்றும் சூழ்நிலைகளையும் பாதிக்கும் நிகழ்வாகவும் பார்க்கப்படுகிறது. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் சேரும்போது, பல்வேறு சுப மற்றும் அசுப யோகங்கள் உருவாகின்றன. அவற்றில் ஒன்று பிப்ரவரி இறுதியில் உருவாக இருக்கிறது. இது ஜோதிடத்தில் ‘அங்காரக யோகம்’ எனப்படுகிறது.
பிப்ரவரி இறுதியில் செவ்வாய் கிரகம் கும்ப ராசிக்குள் நுழைகிறது. அங்கு ஏற்கனவே ராகு இருக்கிறார். செவ்வாய் மற்றும் ராகுவின் இந்த சேர்க்கை அசுபமானதாகக் கருதப்படுகிறது. இந்த சேர்க்கை சில ராசிக்காரர்களுக்கு நிதி இழப்பு, மன அழுத்தம் மற்றும் உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என கணிக்கப்பட்டுள்ளது. அங்கார யோகத்தால் பாதிப்புள்ளாகும் ராசிகள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
சிம்மம்
இந்த சேர்க்கை சிம்ம ராசியின் எட்டாவது வீட்டில் உருவாகிறது. அங்கார யோகம் சிம்ம ராசிக்காரர்களுக்கு சாதகமற்ற காலத்தை உருவாக்கும். திடீர் சிக்கல்கள் உருவாகலாம். இந்த நேரத்தில் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக சர்க்கரை, இதய நோய் அல்லது இரத்த அழுத்தம் உள்ளவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். காயம் அல்லது சிறு விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த நேரத்தில் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். திருமண வாழ்வில் கருத்து வேறுபாடுகள் வரலாம் என்பதால் பொறுமையுடன் இருக்க வேண்டியது அவசியம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு ராகு-செவ்வாய் சேர்க்கை உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் சார்ந்த சிக்கல்களை அதிகரிக்கும். இது கன்னி ராசியின் ஆறாவது வீட்டில் உருவாகிறது. ஆறாவது வீடு நோய் மற்றும் எதிரிகளை குறிக்கும் வீடாகும். இங்கு உருவாகும் அங்காரக யோகம் நோய், மன அழுத்தம் மற்றும் எதிரிகளால் சிக்கல்களை ஏற்படுத்தும். சட்ட விஷயங்களில் எச்சரிக்கை தேவை. மறைமுக எதிரிகளால் பாதிப்பு ஏற்படலாம். ரத்தம் தொடர்பான பிரச்சனைகள் வரலாம். ஆரோக்கியத்தில் அலட்சியம் வேண்டாம்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் சவாலான சூழலை உருவாக்கலாம். மீன ராசியின் பன்னிரண்டாம் வீட்டில் அங்காரக யோகம் உருவாகிறது. இதனால் திடீர் செலவுகள் அதிகரிக்கும். நிதி விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.இல்லாவிட்டால் நஷ்டம் அல்லது பெரிய இழப்புகளை சந்திக்க நேரிடலாம். சட்டச் சிக்கல்களுக்கு ஆளாகக்கூடும். உடன்பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கலாம். பணியிடத்தில் மன அழுத்தம் ஏற்படலாம். எனவே எச்சரிக்கை தேவை.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

