MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Angarak Yog 2026: கும்ப ராசியில் ஆபத்தான யோகம்.! இந்த ராசிக்காரங்க தப்பிக்கவே முடியாது.! வலி, துன்பம், வேதனையை அனுபவிக்கப்போறீங்க.!

Angarak Yog 2026: கும்ப ராசியில் ஆபத்தான யோகம்.! இந்த ராசிக்காரங்க தப்பிக்கவே முடியாது.! வலி, துன்பம், வேதனையை அனுபவிக்கப்போறீங்க.!

கும்ப ராசியில் பிப்ரவரி 23, 2026 அன்று உருவாகும் அங்காரக யோகம் 3 ராசிகளுக்கு மன அழுத்தம், கோபம், குழப்பம் மற்றும் திடீர் பிரச்சனைகளை அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. அந்த ராசிகள் குறித்து பார்க்கலாம்.

2 Min read
Author : Ramprasath S
Published : Feb 02 2026, 02:56 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
அங்காரக யோகம் 2026
Image Credit : Asianet News

அங்காரக யோகம் 2026

வேத ஜோதிடத்தின் படி 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பல கிரகங்களின் நிலையில் பல மாற்றங்கள் ஏற்படுகிறது. பிப்ரவரி 23 ஆம் தேதி செவ்வாய் பகவான் கும்ப ராசிக்குள் நுழைகிறார். அங்கு ஏற்கனவே இருக்கும் சனி பகவானுடன் இணைவதால் ‘அங்காரக யோகம்’ உருவாகிறது.

ஜோதிட ரீதியாக செவ்வாய் நெருப்பு கிரகமாகவும், சனி காற்று கிரகமாகவும் அறியப்படுகின்றனர். இந்த இரண்டு முரண்பட்ட கிரகங்கள் இணைவது சவாலான காலகட்டத்தை ஏற்படுத்தும்.

27
அங்காரக யோகம் ஏன் ஆபத்தானது?
Image Credit : Asianet News

அங்காரக யோகம் ஏன் ஆபத்தானது?

ஜோதிடத்தில் செவ்வாய் அங்காரகன் எனப்படுகிறார். இவர் தைரியம், வீரம், ஆற்றல், ஆக்ரோஷத்திற்கு அதிபதியாவார். சனி பகவான் நிதானம், நீதி மற்றும் கர்மாவிற்கு அதிபதியாவார். இந்த இரு முரண்பட்ட ஆற்றல்கள் ஒரே ராசியில் இணைவது சமூகத்திலும், தனிநபர் வாழ்விலும் அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தும்.

தேவையற்ற ஆக்ரோஷம், பிடிவாதம் அதிகரிக்கலாம். நெருப்பு, மின்சாரம் தொடர்பான விபத்துக்கள் ஏற்படலாம். உடல்நலம், பேச்சு ஆகியவற்றிலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம். அங்காரக யோகத்தால் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் குறித்து இங்கு காணலாம்.

Related Articles

Related image1
ரவுண்டு கட்டப்போகும் கிரகங்கள்..! பிப்ரவரி முழுவதும் கஷ்டப்படப்போகும் ராசிகள்.! உங்க ராசி இருக்கா?
Related image2
பிப்ரவரி மாத பலன்கள்: கோடி கோடியாக பணம் குவிக்கப் போகும் 5 ராசிகள்.! வாழ்க்கையில் ஜாக்பாட்.! உங்க ராசி இருக்கா?
37
மேஷம்
Image Credit : Asianet News

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு அங்காரக யோகம் சிக்கல்களை உருவாக்கும். பிப்ரவரி 22 ஆம் தேதி வரையிலான காலம் சாதகமாக இருக்கும். பிப்ரவரி 23-க்கு பிறகு நிலைமை மாறலாம். வேலையில் தடைகள், தொழில் தொடர்பான மன அழுத்தம் அதிகரிக்கும். நிதிநிலை மந்தமாகும். எதிர்பாராத செலவுகள் கூடும்.

47
சிம்மம்
Image Credit : Asianet News

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு திருமணம் மற்றும் கூட்டாண்மை தொடர்பான ஸ்தானத்தில் இந்த யோகம் உருவாவதால் கணவன் மனைவிக்கு இடையே தேவையற்ற வாக்குவாதங்கள் அல்லது கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். தொழில் கூட்டாளிகளுடன் மனஸ்தாபங்கள் ஏற்படலாம்.

57
மகரம்
Image Credit : Asianet News

மகரம்

மகர ராசிக்காரர்கள் நிதி மற்றும் தொழில் ரீதியாக கவனமாக இருக்க வேண்டும். இந்த நேரத்தில் நிதி இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. வேலையில் அழுத்தம் மற்றும் மன அழுத்தம் ஏற்படலாம். திருமண வாழ்வில் கருத்து வேறுபாடுகள் வரலாம்.

67
கும்பம்
Image Credit : Asianet News

கும்பம்

கும்ப ராசியின் முதல் வீடான லக்ன ஸ்தானத்தில் இந்த சேர்க்கை நடைபெறுவதால் கும்ப ராசிக்காரர்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மன அழுத்தம் அதிகரிக்கலாம். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். வாகனங்களை ஓட்டும்பொழுது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.

77
மீனம்
Image Credit : Asianet News

மீனம்

இந்த சேர்க்கை மீன ராசியினரின் வாழ்வில் பெரிய மாற்றங்களைக் கொண்டுவரும். தொழில் நிலையில்லாமையை உணரலாம். வேலையிழப்பு ஏற்படலாம். யாரையும் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம். முடிவெடுப்பதில் கவனம் தேவை.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
இன்றைய இராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ரவுண்டு கட்டப்போகும் கிரகங்கள்..! பிப்ரவரி முழுவதும் கஷ்டப்படப்போகும் ராசிகள்.! உங்க ராசி இருக்கா?
Recommended image2
பிப்ரவரி மாத பலன்கள்: கோடி கோடியாக பணம் குவிக்கப் போகும் 5 ராசிகள்.! வாழ்க்கையில் ஜாக்பாட்.! உங்க ராசி இருக்கா?
Recommended image3
சனி பகவான் பிடியில் சிக்கப்போகும் 5 ராசிகள்.! சனியின் வக்ர ஆட்டத்தால் சோதனை காலம் ஆரம்பம்.! நிதி இழப்புகள் உறுதி.!
Related Stories
Recommended image1
ரவுண்டு கட்டப்போகும் கிரகங்கள்..! பிப்ரவரி முழுவதும் கஷ்டப்படப்போகும் ராசிகள்.! உங்க ராசி இருக்கா?
Recommended image2
பிப்ரவரி மாத பலன்கள்: கோடி கோடியாக பணம் குவிக்கப் போகும் 5 ராசிகள்.! வாழ்க்கையில் ஜாக்பாட்.! உங்க ராசி இருக்கா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved