- Home
- Astrology
- ரவுண்டு கட்டப்போகும் கிரகங்கள்..! பிப்ரவரி முழுவதும் கஷ்டப்படப்போகும் ராசிகள்.! உங்க ராசி இருக்கா?
ரவுண்டு கட்டப்போகும் கிரகங்கள்..! பிப்ரவரி முழுவதும் கஷ்டப்படப்போகும் ராசிகள்.! உங்க ராசி இருக்கா?
பிப்ரவரி 2026-ல் 4 கிரகங்களின் சேர்க்கையால் சில ராசிகளுக்கு கடினமான காலம் தொடங்க இருக்கிறது. சூரியன், புதன், சுக்கிரன், ராகு ஒரே ராசியில் இருப்பது ஆபத்தானதாக கருதப்படுகிறது. அந்த ராசிகள் குறித்து பார்க்கலாம்.

பிப்ரவரி மாத ராசிபலன்
ஜோதிடத்தில் கிரகங்கள் அவ்வப்போது தங்கள் நிலையை மாற்றிக் கொண்டே இருக்கின்றன. அப்போது அவை பிற கிரகங்களுடன் இணைவதால் சுப அல்லது அசுப யோகங்கள் உருவாகின்றன. பிப்ரவரி மாதத்தில் நான்கு கிரகங்கள் தங்கள் ராசியை மாற்ற இருக்கின்றன. கும்ப ராசியில் நடக்கும் சூரியன், ராகு சேர்க்கை அசுபமானதாக கருதப்படுகிறது. சனி மீனத்திலும், ராகு கும்பத்திலும், கேது சிம்மத்திலும் இருப்பர். இந்த கிரக அமைப்பு பல ராசிகளுக்கு மன அழுத்தம், குழப்பம், கடின முடிவுகளை ஏற்படுத்தும். அந்த ராசிகள் குறித்து இங்கு காணலாம்.
சிம்மம்
சிம்ம ராசியில் கேதுவின் தாக்கம் உணர்ச்சி ரீதியான சிக்கல்களை ஏற்படுத்தும். வாழ்க்கையின் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து குழப்பம் ஏற்படும். குடும்பத்தில் தகவல் தொடர்பு குறையும். உங்களின் அன்புக்குரியவர்களிடம் இருந்து விலகி செல்வதற்கான சூழல் ஏற்படலாம். ஒரு காலத்தில் மகிழ்ச்சியைத் தந்த விஷயங்கள் தற்போது சுமையாக தோன்றலாம். இது உறவுகளில் விரிசல்களை ஏற்படுத்தக்கூடும். எனவே இந்த காலகட்டத்தில் அமைதியாக இருப்பது நல்லது. தொழிலில் ஏற்படும் பின்னடைவுகள் அல்லது நஷ்டங்கள் நம்பிக்கையை பாதிக்கும்.
துலாம்
துலாம் ராசிக்கு பிப்ரவரி மிகவும் சவாலான மாதம். பல கிரகங்கள் கும்ப ராசியில் இருப்பது துலாம் ராசிக்கு கலவையான பலன்களைத் தரக்கூடும். மனம் அலைபாயும். தன்னம்பிக்கை குறையலாம். தேவையற்ற விமர்சனங்கள் காயப்படுத்தும். உறவுகளில் தவறான புரிதல் ஏற்படும். கிரக மாற்றங்களால் எடுத்த வேலைகள் கடைசி நேரத்தில் நின்று போகலாம். சிறு அலட்சியம் பெரிய பின்விளைவுகளை ஏற்படுத்தலாம். ‘கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போனது’ போன்ற சூழல் ஏற்படும். செலவுகள் அதிகரிக்கும். சேமிப்பு குறையும். நிதி சார்ந்த விஷயங்களில் இழப்புகள் ஏற்படலாம். வாகனம் ஓட்டும் பொழுது அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.
விருச்சிகம்
விருச்சிக ராசியினருக்கு இது மனரீதியாக சவாலான நேரமாக இருக்கும். பணியிடத்தில் நடக்கும் அரசியலில் கவனம் தேவை. உங்கள் மேலதிகாரிகள் அல்லது சக ஊழியர்கள் போட்டி, பொறாமை காரணமாக உங்களை வேலையில் இருந்து வெளியேற்ற முயற்சி செய்வார்கள். எதிரிகளின் ஆதிக்கம் பின்னடைவுகளை ஏற்படுத்தலாம். குடும்பத்தில் ஏற்படும் கருத்து வேறுபாட்டால் தனிமை ஏற்படலாம். தலைவலி, மன அழுத்தம், தூக்கமின்மை வரலாம். தனிப்பட்ட வாழ்க்கையானாலும் சரி, தொழில் வாழ்க்கையானாலும் சரி, சரி ஒவ்வொரு அடியையும் மிகவும் கவனமாக எடுத்து வைக்கவும்.
மீனம்
மீன ராசிக்கு இது ஏழரை சனியின் காலமாகும். பிப்ரவரி மாதத்தில் கும்ப ராசியில் கிரகங்கள் இணைவது மீன ராசியின் 12ஆம் வீடான விரய ஸ்தானத்தில் நடப்பதால் செலவுகள் அதிகரிக்கக்கூடும். திட்டமிடப்படாத பயணங்களால் பண இழப்பு, உடல் உபாதைகள் ஏற்படலாம். நெருங்கிய உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு கூட்டாளிகளுடன் கணக்கு வழக்கு விஷயங்களில் சண்டை ஏற்படலாம். தனிப்பட்ட ரகசியங்களை பிறரிடம் பகிர்வதை தவிர்க்க வேண்டும். கிரக நிலைகள் சாதகமற்றதாக இருப்பதால் திட்டமிட்ட பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. புதிய முயற்சிகளை தொடங்க வேண்டாம்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

