- Home
- Astrology
- Akhanda Rajayogam: ஜூலை 1-ல் உருவாகும் அகண்ட ராஜயோகம்.! 6 ராசிக்காரர்களுக்கு மகா பாக்யம்.!
Akhanda Rajayogam: ஜூலை 1-ல் உருவாகும் அகண்ட ராஜயோகம்.! 6 ராசிக்காரர்களுக்கு மகா பாக்யம்.!
Akhanda Rajayogam: ஜூலை 1, 2, 3 ஆகிய தேதிகளில் கிரகங்களின் சேர்க்கையால் ஒரே நேரத்தில் இரண்டு மகா யோகங்கள் உருவாக இருக்கிறது. அது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

Akhanda Rajayogam
வேத ஜோதிடத்தின்படி, கிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் நகர்ந்து கொண்டே இருக்கின்றன. அப்போது அவை பிற கிரகங்களுடன் இணைந்தோ அல்லது பிற கிரகங்களை பார்வையிட்டோ, சுபயோகங்களை உருவாக்குகின்றன. அந்த வகையில் மகர ராசியில் சந்திரனின் ஏழாம் வீட்டில் குரு இருப்பதால் கஜகேசரி ராஜயோகம் புதன் மற்றும் சுக்கிரன் இணைவதால் தனலட்சுமி ராஜயோகமும் உருவாகிறது. இந்த இரண்டு ராஜயோகங்களின் தாக்கத்தால் சில ராசிக்காரர்களுக்கு விரைவான முன்னேற்றம், வருமான ஆதாரங்கள், உயர் அதிகாரம், செல்வ செழிப்பு கிடைக்க உள்ளது. அது குறித்து இங்கு காணலாம்.
இதையும் படியுங்கள்: அக்டோபர் 31 வரை 6 ராசிகளுக்கு ஜாக்பாட்! குரு, சுக்கிரன், புதன் தரும் ராஜயோகம்.!
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு குரு சுக்கிரன் மற்றும் புதன் சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் இருப்பதால் ராஜயோகமும், தனலட்சுமி யோகமும் கிடைக்கும். வேலையில் சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கக்கூடும். நீங்கள் பணிபுரியும் நிறுவனம் மூலம் வெளிநாட்டுக்குச் செல்ல வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்த சுணக்கங்கள் நீங்கி, லாபம் அதிகரிக்கும். வருமானம் பெருகும். பங்குச் சந்தை முதலீடுகளில் இருந்து நீங்கள் எதிர்பாராத வகையில் வருமானமும், லாபமும் உண்டாகும்.
இதையும் படியுங்கள்: எதிர் எதிர் திசையில் ராகு - சுக்கிரன்.! 5 ராசிகளுக்கு குபேர யோகம்.! அரசு வேலை, பணம், புகழ், பதவி தேடி வரப்போகுது.!
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு குரு புதன் மற்றும் சுக்கிரனின் சுப பார்வை பதிவதால் தொழில் மற்றும் வியாபாரம் புதிய உயரங்களை எட்டும். வேலையில்லாமல் இருந்து வரும் பட்டதாரிகளுக்கு நல்ல நிறுவனத்தில் இருந்து வேலைக்கான அழைப்புகள் வரும். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகமும் உண்டாகும். நீங்கள் தொட்ட அனைத்து காரியங்களும் வெற்றியில் முடியும். தொட்டதெல்லாம் பொன்னாகும். மனதில் இருந்த பெரும்பாலான ஆசைகள் மற்றும் கனவுகள் நிறைவேறும் காலம் நெருங்கியுள்ளது.
இதையும் படியுங்கள்: சனியின் ஆட்டம் துவக்கம்..! கோடீஸ்வர யோகம் பெரும் ராசிகள் யார்?
கன்னி
கஜகேசரி யோகத்துடன் தனலட்சுமி யோகமும் இணைவதால் கன்னி ராசிக்காரர்களுக்கு சுப யோகங்கள் கிடைக்கும். சமூகத்திலும், வீட்டிலும் மரியாதையும், அங்கீகாரமும், செல்வாக்கும் உண்டாகும். இந்த காலகட்டத்தில் வருமானம் கணிசமாக உயரும். பங்குச்சந்தை போன்ற முதலீடுகளில் இருந்து பெரும் லாபங்களைப் பெறுவீர்கள். குடும்பத்தில் தடைபட்டு நின்ற சுப காரியங்கள் மீண்டும் வேகம் எடுக்கும். வேலை, தொழில் தொடர்பான நல்ல செய்திகளைக் கேட்பீர்கள்.
இதையும் படியுங்கள்: பேசியே காரியத்தை சாதிக்க கூடிய 4 ராசிகள் யார் தெரியுமா? இவங்ககிட்ட பேசி ஜெயிக்க முடியாது.!
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த இரண்டு யோகங்களும் பாக்கியத்தை அள்ளி வழங்கும். சொத்து தகராறுகள் சுமூகமாக பேசி தீர்க்கப்படும். உங்கள் பரம்பரை சொத்துக்கள் கைக்கு வந்து சேரலாம். புதிய வாகனம் அல்லது நிலம் வாங்கும் வாய்ப்புகள் உருவாகும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். உங்கள் தொழிலில் சிறந்த வெற்றியையும், வருமானத்தையும் பெறுவீர்கள். ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவீர்கள். நீங்கள் செய்த தர்ம காரியங்கள் உங்களை வாழ்க்கையில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்திச் செல்லும்.
இதையும் படியுங்கள்: இந்த 4 ராசியில் பிறந்தவர்களுக்கு உடன் பிறந்தவர்களே எதிரியாக மாறுவார்களாம்.! சகோதர பகை தரும் ராசிகள்.!
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு நிதி வளர்ச்சி மற்றும் விரைவான முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உருவாகும். குரு பகவான் மற்றும் சுக்கிர பகவானின் ஆசியால் செல்வந்தர் ஆகும் அதிர்ஷ்டத்தைப் பெறுவீர்கள். வறுமை நீங்கி வளம் பெருகும். வாடகை வீட்டில் வசித்து வருபவர்கள் சொந்த வீட்டிற்கு மாறுவீர்கள். புதிதாக தொழில் தொடங்க நினைப்பவர்களின் கனவு நனவாகும். உயர் பதவியில் இருப்பவர்கள் நல்ல செய்திகளைக் கேட்பீர்கள். நல்ல இடத்திலிருந்து திருமண வரன்கள் தேடி வரும். வீட்டில் அடுத்தடுத்து மங்கள நிகழ்வுகள் நடைபெறும்.
இதையும் படியுங்கள்: அடுத்த ஜென்மத்தில் என்னவாக பிறப்பீர்கள்? பிறந்த தேதியை வைத்தே கண்டுபிடிக்கலாம் வாங்க.!
மீனம்
சந்திரனின் சுப நிலை காரணமாக மீன ராசிக்காரர்களுக்கு தன சம்ரித்தி யோகத்துடன் ராஜயோகமும் கிடைக்கும். மனதில் இதுவரை இருந்து வந்த கவலைகள் நீங்கும். உங்கள் கனவுகள், லட்சியங்கள், ஆசைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். உங்களை வாட்டி வதைத்து வந்த கவலைகளிலிருந்து முற்றிலும் விடுபடுவீர்கள். குழந்தை பாக்கியம், திருமணம், வேலை வாய்ப்பு என அனைத்து முயற்சிகளும் வெற்றி கிடைக்கும். நிதி பரிவர்த்தனைகளில் எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டு லாபத்தைப் பெறுவீர்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

