- Home
- Astrology
- 18 ஆண்டுகளுக்குப் பின் உருவாகும் கிரகண யோகம்.! 4 ராசிகளின் உயிருக்கே ஆபத்தாம்.! கவனம்.!
18 ஆண்டுகளுக்குப் பின் உருவாகும் கிரகண யோகம்.! 4 ராசிகளின் உயிருக்கே ஆபத்தாம்.! கவனம்.!
Grahana Yogam: 18 ஆண்டுகளுக்குப் பிறகு சூரியனும் ராகுவும் இணைந்து கிரகண யோகத்தை உருவாக்குகின்றனர். இதன் காரணமாக மூன்று ராசிக்காரர்கள் எதிர்மறை பலன்களை அனுபவிக்க உள்ளனர். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

கிரகண யோகம் 2026
2026 ஆம் ஆண்டில் பல கிரகங்களின் பெயர்ச்சிகள் நடக்க இருக்கின்றன. கிரகங்கள் பிற கிரகங்களுடன் இணைந்து சுப மற்றும் அசுப யோகங்களை உருவாக்குகின்றன. அதில் ராகு மற்றும் சூரியன் இணைந்து உருவாக்கும் கிரகண யோகமும் அடங்கும். ஜோதிடத்தில் இது அசுப யோகமாக கூறப்படுகிறது.
2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சூரியன் கும்ப ராசியில் நுழைவார். அங்கு ஏற்கனவே இருக்கும் ராகு பகவான், சூரியனுடன் இணைந்து கிரகண யோகத்தை உருவாக்குகிறார். இந்த கிரகண யோகத்தால் பாதிப்புக்குள்ளாகும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மீனம்
சூரியன் ராகு இணைந்து உருவாக்கும் கிரகண யோகம் மீன ராசிக்காரர்களுக்கு சாதகமற்ற சூழலை ஏற்படுத்தலாம். ஏனெனில் இந்த யோகமானது உங்கள் ராசியின் 12வது வீட்டில் ஏற்படும். 12வது வீடு விரய ஸ்தானமாக கருதப்படுகிறது. எனவே இந்த நேரத்தில் உங்களின் செலவுகள் அதிகரிக்கக்கூடும்.
உங்கள் மீது வீண் பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படலாம். உங்கள் நற்பெயருக்கு களங்கம் ஏற்படலாம். தொழிலதிபர்கள் இந்த காலத்தில் எந்த ஒப்பந்தமும் மேற்கொள்ளக்கூடாது. இல்லையெனில் இழப்புகளை சந்திக்க நேரிடலாம். உங்கள் உடல் நலத்திலும் குறைவுகள் ஏற்படக்கூடும். பணியிடத்தில் அலட்சியம் காட்டுதல் கூடாது.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு ராகு மற்றும் சூரியன் சேர்க்கை அசுப பலன்களை வழங்கும். 2026 தொடக்கத்தில் ராகு உங்கள் ராசியை விட்டு விலகினாலும் அதன் நிழல் தாக்கம் குறையாமல் இருக்கும். எனவே இந்த காலகட்டத்தில் தேவையற்ற முதலீடுகளை தவிர்க்கவும். பணவிரயம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு.
தேவையற்ற குழப்பங்கள், பயம் வந்து நீங்கலாம். முடிவுகளை எடுப்பதில் தாமதம் ஏற்படலாம். கண் சம்பந்தமான உபாதைகள் அல்லது தலைவலி ஏற்படலாம். வாழ்க்கைத் துணையுடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் வரலாம். பணியிடத்தில் உங்கள் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் சில விரும்பத்தகாத நிகழ்வுகள் நடக்கலாம்.
கடகம்
ராகு மற்றும் சூரியனின் சேர்க்கையால் ஏற்படும் கிரகண யோகமானது கடக ராசிக்காரர்களுக்கு தீங்கு விளைவிக்கும். ஏனெனில் இந்த சேர்க்கை கடக ராசியின் எட்டாவது வீட்டில் நடக்கிறது. எனவே இந்த காலகட்டத்தில் உங்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். இதயம் தொடர்பான நோய்களுக்கு சிகிச்சை எடுத்து வருபவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.
கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். எனவே பேசும்பொழுது வார்த்தைகளில் நிதானம் தேவை. பணியிடத்தில் சக ஊழியர்கள் அல்லது உயர் அதிகாரிகளுடன் மோதல் போக்கு ஏற்படலாம். எனவே அமைதி காப்பது நல்லது. குடும்ப உறுப்பினர்களுடனான உறவும் இந்த காலத்தில் மோசமடையக் கூடும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு ராகு மற்றும் சூரியனின் சேர்க்கை ஆறாவது வீட்டில் நடைபெற இருக்கிறது. இது எதிர்மறை பலன்களைக் கொடுக்கும். ஆறாவது வீடு நோய், எதிரி, பயம், தடை மற்றும் நீதிமன்றத்தின் வீடாக கருதப்படுகிறது. எனவே இந்த நேரத்தில் நீங்கள் நீதிமன்ற வழக்குகளில் பின்னடைவு அல்லது தோல்வியை சந்திக்கலாம்.
எதிரிகள் உங்களை தொந்தரவு செய்யக்கூடும். இதயம் தொடர்பான நோய்கள் இருப்பவர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். தொண்டை மற்றும் மார்பு நோய்கள் உங்களை தொந்தரவு செய்யலாம். எனவே இந்த காலகட்டத்தில் சூரிய பகவானை வணங்குவது, சூரிய நமஸ்காரம் செய்வது, ராகு காலத்தில் துர்க்கை அம்மனை வழிபடுவது அசுப விளைவுகளை குறைக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

