December 18 indraiya rasi palan for 12 zodiac signs: டிசம்பர் 18, 2025 12 ராசிகளுக்குமான பொது பலன்கள் குறித்தும், அதிர்ஷ்டம் பெறும் ராசிகள், கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் பற்றியும் இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

மேஷம்:

  • குடும்ப உறுப்பினர்களுடன் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. தாய் வழி உறவினர்களால் சற்று அலைச்சல் இருக்கும். பிள்ளைகளின் கல்வியில் செலவுகள் ஏற்படலாம். அடுத்தவர் விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும்.
  • அதிர்ஷ்ட எண்: 3.
  • அதிர்ஷ்ட நிறம்: தங்க நிறம்.

ரிஷபம்:

  • பழைய சிக்கல்களுக்கு மாறுபட்ட அணுகுமுறையில் தீர்வு காண்பீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். முன் கோபத்தை குறைத்தால் காரியங்கள் சுலபமாகும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் பேச்சைக் கேட்டு நடப்பது நன்மை தரும்.
  • அதிர்ஷ்ட எண்: 4.
  • அதிர்ஷ்ட நிறம்: ஊதா.

மிதுனம்:

  • குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கூடும். சேமிக்கும் திட்டங்களில் முதலீடு செய்வீர்கள். பிள்ளைகளின் மூலம் பெருமைகள் உண்டாகும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களின் அதிகரிப்பால் ஆதாயம் ஏற்படும்.
  • அதிர்ஷ்ட எண்: 8.
  • அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்.

கடகம்:

  • அரசு தொடர்பான காரியங்களில் இருந்த தடைகள் மற்றும் பிரச்சனைகள் விலகும். சமூகத்தில் தொடர்பு அதிகரிக்கும். ஆன்மீகப் பயணங்கள் மன நிம்மதியைத் தரும். வியாபாரத்தில் சரக்குகள் விறுவிறுப்பாக விற்றுத் தீரும்.
  • அதிர்ஷ்ட எண்: 3.
  • அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்.

சிம்மம்:

  • ஒதுங்கி இருந்த நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மீண்டும் உங்களுடன் இணைவதற்கான வாய்ப்புகள் உருவாகும். உடன் பிறந்தவர்களின் உதவியுடன் பூர்வீக சொத்துக்களை சீரமைப்பீர்கள். தம்பதிகளுக்குள் நெருக்கம் கூடும். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.
  • அதிர்ஷ்ட எண்: 9.
  • அதிர்ஷ்ட நிறம்: மெரூன்.

கன்னி:

  • எதிர்பார்த்து காத்திருந்த உதவிகள் சரியான நேரத்தில் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் நீங்கி, சாதகமான சூழல் உருவாகும். வியாபாரத்தில் ஏற்றம் காண்பீர்கள். தெளிவான முடிவுகளால் பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள்.
  • அதிர்ஷ்ட எண்: 6.
  • அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம்.

துலாம்:

  • பிள்ளைகளின் திருமணம் தொடர்பாக அலைச்சல் ஏற்படும். இருப்பினும் சுமூக முடிவுகள் கிடைக்கும். மற்றவர்களை எடுத்தெறிந்து பேசுவதை தவிர்ப்பது நல்லது. அக்கம் பக்கத்தினருடன் இருந்த பிரச்சனைகள் சரியாகும். வியாபாரம் சிறப்படையும்.
  • அதிர்ஷ்ட எண்: 5.
  • அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்.

விருச்சிகம்:

  • இன்று பணவரவு திருப்திகரமாக இருக்கும். பழைய கடன்களை தீர்க்க முயற்சி செய்வீர்கள். தாய் வழி உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கி, ஒற்றுமை மேலோங்கும். உத்தியோகம் சிறக்கும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.
  • அதிர்ஷ்ட எண்: 1.
  • அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு.

தனுசு:

  • பிள்ளைகளின் பிடிவாத குணம் குறைந்து, உங்கள் பேச்சுக்கு செவி சாய்ப்பர். பூர்வீக சொத்து வழக்கு இழுபறியாக வாய்ப்பு இருப்பதால் நிதானத்துடன் செயல்பட வேண்டியது அவசியம். வியாபாரத்தில் கடன்கள் வசூலாகும் வாய்ப்புகள் உண்டு.
  • அதிர்ஷ்ட எண்: 2.
  • அதிர்ஷ்ட நிறம்: பச்சை.

மகரம்:

  • இன்றைய தினம் கௌரவப் பதவிகள் தேடி வரலாம். மனைவி அல்லது மனைவி வழி உறவினர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்க வேண்டியது அவசியம். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கலாம்.
  • அதிர்ஷ்ட எண்: 5.
  • அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை.

கும்பம்:

  • இன்றைய தினம் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பழைய வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். அதிகாரத்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். புதிய சரக்குகளை கொள்முதல் செய்து தொழிலில் லாபம் ஈட்டுவீர்கள்.
  • அதிர்ஷ்ட எண்: 6.
  • அதிர்ஷ்ட நிறம்: வெண்மை.

மீனம்:

  • திட்டமிட்ட பணிகளை முடிக்க முடியாமல் போகலாம் அல்லது பணிகளை முடிக்க அதிக போராட வேண்டி இருக்கும். அரசு தொடர்பான வேலைகள் சுமூகமாக முடிவடையும். பூர்வீக சொத்துக்கள் மூலம் ஆதாயம் கிடைக்கலாம். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.
  • அதிர்ஷ்ட எண்: 9.
  • அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)